Tamilnadu News Today - Political, District & State News Update Online
இதை எனது முதல் பக்கமாக்கு
Get Font | Sitemap |   RSS Feed
தமிழக சிறப்புச் செய்திகள்
இயற்கை வளம், சுற்றுச்சுழலை பாதுகாப்பதன் மூலம் இந்தியா உலகின் முன்னணி நாடாக முடியும் : ஐகோர்ட் முன்னாள் நீதிபதி சம்பத் பேச்சு

நவம்பர் 07,2009,00:00  IST

Tamilnadu special news update

மதுரை: இயற்கை வளம், சுற்றுச்சுழலை பாதுகாப்பதன் மூலம் இந்தியா உலகின் முன்னணி நாடாக முடியும் என்று பல்கலை., விழாவில் முன்னாள் நீதிபதி சம்பத் கூறினார்.  மதுரை காமராஜ் பல்கலைக்கழக கல்வியாளர் மேம்பாட்டு கல்லூரி சார்பில் வரலாற்றில் புத்தாக்க பயிற்சி மற்றும் சமூக அறிவியலில் ஆய்வு முறைகள் குறித்து 20 நாள் பயிற்சி நடக்கிறது. பல்கலை., இணைப்பு கல்லூரி பேராசிரியர்களுக்கான பயிற்சி துவக்க விழாவில் வராற்றுத்துறை தலைவர் கோபாலகிருஷ்ணன் வரவேற்றார்.
 துணைவேந்தர் கற்பககுமாரவேல் பேசுகையில், ""தமிழகத்தில் மதுரை காமராஜ், சென்னை, பாரதியார், பாரதிதாசன் பல்கலை.,களில் மட்டுமே கல்வியாளர் மேம்பாட்டு கல்லூரிகள் உள்ளன. இந்த பயிற்சியின் மூலம் பேராசிரியர்கள் தங்களை "ரீசார்ஜ், அப்டேட்' செய்து கொள்ள முடியும். நவீன தொழில் நுட்பங்களைப்பயன்படுத்தி அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்.  பல்கலை.,யில் ரூ10 கோடி செலவில் ஆடிட்டோரியம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக பல்கலை.,யின் முன்னாள் மாணவர்கள், வங்கிகள், தொழிலதிபர்களை நன்கொடையாளர்களாக கொண்டு நிதி திரட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. பல்கலை., நிர்வாக பணியாளர்களின் திறனை வளர்க்க தமிழ்நாடு பாலிடெக்னிக் மூலம் கம்ப்யூட்டர் பயிற்சியளிக்கப்படுகிறது.



தமிழகத்தில் முதன்முறையாக மதுரை காமராஜ் பல்கலை.,யில் "நிர்வாக பணியாளர் மேம்பாட்டு கல்லூரி' நிறுவப்படவுள்ளது. சிண்டிகேட்டில் ஒப்புதழ் பெறப்பட்டு பணிகள் துவங்கும். இன்று(நவ.7) யு.ஜி.சி.,யின் மறு ஆய்வுக்குழு பல்கலை.,யில் ஆய்வு செய்கிறது'' என்றார்.



சென்னை ஐகோர்ட் முன்னாள் நீதிபதி சம்பத் பயிற்சியை துவக்கி வைத்து பேசுகையில், ""பெண்களுக்கு எதிரான வன்கொடுமையை ஒழிக்க வேண்டும். அதற்கு காரணமானவர்களை தண்டிக்க வேண்டும் என்று தேசிய மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது. பெண்களுக்கு கல்வி, சொத்தில் பங்கு, பார்லிமென்ட், சட்டசபைகளில் இடஒதுக்கீடுகள் அளிப்பதன் மூலம் சமூகத்தில் உள்ள ஆண், பெண் ஏற்றத்தாழ்வுகளை அகற்ற முடியும்.  இதன்மூலம் காந்தியின் கனவுகளான வறுமை, நோய், அறியாமைகளை ஒழிக்க முடியும். ஆறுகளில் மணல் கொள்ளை, கடல், மலை, காடுகளில் இயற்கை வளத்தை அழிப்பதை தடுக்க வேண்டும். வளங்களை வளர்க்க வேண்டும். இரைச்சல், கழிவுகளால் சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்க வேண்டும். இயற்கை பாதிப்புகளை அகற்றினால் இந்தியா உலகின் முன்னணி நாடாக வளர முடியும்'' என்றார்.
 டீன் டேவிட் அமிர்தராஜன், கல்வியாளர் மேம்பாட்டு கல்லூரி இயக்குனர் கண்ணன் உட்பட பலர் பேசினர். பேராசிரியர் சாந்தகுமார் நன்றி கூறினார்.

நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font   | 
  மின்னஞ்சல்  |   RSS  |  Bookmark and Share


வாசகர் கருத்து
 
The advise of the justge has to go to waste bin as long as politicians get seasoned 
by Mr Thangam.Murugesan,Erode,India    11/8/2009 6:21:42 AM IST
Post Your Comments for the Article

 

Your Name  :
Initial : Name :
Your Email Id :
Your city (or) location  :  
Your country  :  
Your Comment:
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)


மேலும் தமிழக சிறப்புச் செய்திகள்
  இ-பேப்பர்