கோவை: பார்த்தீனிய செடிகளை அகற்றவும், புல் வெட்டவும் பள்ளி நிர்வாகம் நிர்பந்திப்பதாக, மாணவர் கள் அதிருப்தி தெரிவிக் கின்றனர். கோவை அருகே, வடவள்ளி பகுதியில் மருதமலை தேவஸ்தான மேல்நிலை பள்ளி உள்ளது. இங்கு, 6 முதல் பிளஸ் 2 வரை 1,600 மாணவர்கள் படிக்கின்றனர். விளையாட்டு வேளையின் போது விளையாட பள்ளி நிர்வாகம் அனுமதிப்பதில்லை என்றும், பார்த்தீனிய செடிகளை அகற்றவும், கால் வாய் வெட்டவும், புல் வெட்டவும் வற்புறுத்துகிறது என்றும் மாணவர்கள் புகார் கிளப்பியுள்ளனர். நேற்று காலை, 10 ம் வகுப்பு மாணவர்கள் விளை யாட்டு வேளையில், பள்ளி மைதானத்தில் கால்வாய் வெட்டி, பார்த்தீனிய செடி மற்றும் புதர்களை அகற் றும் வேலையில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இது குறித்து மாணவர்கள் கூறியதாவது: விளையாட்டு வேளையின் போது, எங்களை பள்ளி நிர்வாகம் விளையாட அனுமதிப்பதில்லை. மைதானத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுவதால், சீருடை அழுக்காகி மறுநாள் அணிய முடியாத நிலை ஏற்படுகிறது. வீட்டுக்கு சென்றால் பெற்றோர் திட்டுகின்றனர். பள்ளியிலோ, வேலையில் ஈடுபடாவிட்டால் ஆசிரியர்கள் மிரட்டுகின்றனர். விளையாட்டு வேளையில், உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் விளையாட்டில் ஈடுபட எங்களை அனுமதிக்க வேண்டும். அவ்வாறு, மாணவர்கள் தெரிவித்தனர்.
மாணவர்களின் புகார் குறித்து, பள்ளித் தலைமை ஆசிரியர் விஜயகுமாரி கூறியதாவது: இப்பள்ளி, தேவஸ்தான பள்ளியாக இருந்தாலும் அரசால் பராமரிக்கப்பட்டு வருகிறது. போதுமான ஆசிரியர்கள் இல்லாததால், பெற்றோர் - ஆசிரியர் கழகம் சார்பில் தொகுப்பூதிய அடிப்படையில் ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். துப்புரவு பணிக்கு இரண்டு பணியாளர்கள் மட்டுமே உள்ளனர். பள்ளி ஏழரை ஏக்கரில் அமைந்துள்ளதால், சுத்தப்படுத்தி பராமரிக்க போதிய நிதியும் கிடையாது. இதனால், விளையாட்டு வேளையில் மாணவர்களை இப்பணியில் ஈடுபடுத்துகிறோம். அவர்கள், விளையாடும் மைதானத்தை, அவர்களே சுத்தம் செய்வதில் தவறு இருப்பதாக கருதவில்லை. பணியாளர்களை அமர்த்தி மைதானத்தை சுத்தப்படுத்தினால் அதற்குரிய சம்பளத்தை பள்ளி நிர்வாகத்தால் கொடுக்க முடியாது.இவ்வாறு, விஜயகுமாரி தெரிவித்தார்.
| வாசகர் கருத்து |
GOOD
|
by B B,Chennai,India 11/7/2009 6:47:09 PM IST |
This is good that students do garden work particularly removing the partinium plants for the sake of enovirnment and the society. Bravo to the school adminsitration. This should be followed in all the schools. Cleaning the roads, streets, removing the garbages, plastics etc. When are we going to teach people to keep India clean unless we begin in the school. Sampath
|
by P.A. Sampathkumar,pondicherry,India 11/7/2009 6:42:22 AM IST |