Tamilnadu News Today - Political, District & State News Update Online
இதை எனது முதல் பக்கமாக்கு
Get Font | Sitemap |   RSS Feed
தமிழக சிறப்புச் செய்திகள்
யானையை வைத்து பிச்சை : தேவை நடவடிக்கை

நவம்பர் 07,2009,00:00  IST

Tamilnadu special news update

முதுகுளத்தூர்: முதுகுளத்தூர் பகுதியில் யானையை வைத்து பள்ளி, ரோடுகளிலும் பிச்சை எடுப்பதால் பலரும் அவதிப்படுகின்றனர். வனவிலங்குகளான குரங்கு, கரடி, யானைகள் உட்பட பல விலங்குகளை ரோடுகள், மக்கள் கூடும் இடங்களில் நிறுத்தி பணம் சம்பாதிக்கும் நோக்கில் பலர் ஈடுபடுகின்றனர்.  யானைகளை வைத்து ரோட்டோர கடைகள் பொதுமக்கள் கூடும் இடங்களிலும், குரங்குகளை வைத்து வார  சந்தைகளுக்கு முன் வித்தைகள் காட்டியும் பணம் சம்பாதிக்கின்றனர். வனவிலங்குகளை இரும்பு சங்கிலி, கயிறுகளால் கட்டியும், கம்பு, கம்பி போன்ற ஆயுதங்களால் துன்புறுத்தியும் தங்களின் கட்டுப்பாட்டில் கொண்டு வருகின்றனர்.
இதுபோன்ற செயலால் யானைகளால் விபரீதம் ஏற்படுமோ என்ற அச்சத்தில் பலரும் உள்ளனர். இது போன்ற சம்பவம் முதுகுளத்தூர் பகுதிகளில்  தொடர்கிறது. இதை தடுத்து நடவடிக்கை எடுக்க வன துறை அதிகாரிகள் முன்வரவேண்டும்.

நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font   | 
  மின்னஞ்சல்  |   RSS  |  Bookmark and Share


வாசகர் கருத்து
No Comments Found!
Post Your Comments for the Article

 

Your Name  :
Initial : Name :
Your Email Id :
Your city (or) location  :  
Your country  :  
Your Comment:
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)


மேலும் தமிழக சிறப்புச் செய்திகள்
  இ-பேப்பர்