Tamilnadu News Today - Political, District & State News Update Online
இதை எனது முதல் பக்கமாக்கு
Get Font | Sitemap |   RSS Feed
தமிழக சிறப்புச் செய்திகள்
தொடர் மழையால் மூழ்கிய சம்பா சாகுபடி : சோகத்தில் டெல்டா மாவட்ட விவசாயிகள்

நவம்பர் 07,2009,00:00  IST

திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் தொடர் மழையால் 50 ஆயிரம் ஏக்கர் சம்பா சாகுபடி, தண்ணீரில் மூழ்கியுள்ளது. வெள்ளம் ஏற்படும் அபாயத்தால் டெல்டா மாவட்ட விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த ஏழு நாட்களாக இரவு பகலாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், மாவட்டத்தில் உள்ள நீர்ப்பிடிப்புகளில் நீர்மட்டம் உயர்ந்து, ஆறுகளில் அதிக அளவாக வெள்ளம் ஏற்பட்டுள்ளது.  டெல்டா மாவட்டத்தில் சம்பா சாகுபடிக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு விவசாயிகள் கவலையடைந்தனர்.  இந்நிலையில், கடந்த ஒரு வாரகாலமாக பெய்து வரும் மழையால், டெல்டா மாவட்டத்தில் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ள இளம் நடவுகள் தண்ணீரில் மூழ்கி, வெள்ளப்பெருக்கு அபாயம் எற்பட்டுள்ளது.  கல்லணையில் இருந்து, டெல்டா மாவட்ட பாசனத்திற்கான தண்ணீர் திறக்கப்படவில்லை. இருந்தபோதிலும் அனைத்து ஆறுகளிலும்   வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. மாவட்டத்திற்கு, ரூ.173 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தும் ஆறுகள் சரியாக தூர்வாரப்படாமல் இருப்பதால், தற்போது பெய்த மழையால் அதிக அளவாக தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. வளவனாறு, கூழையாறு போன்ற ஆறுகளின் கரைகள் சேதமடைந்துள்ளதால் உடையும் அபாயத்தில் உள்ளன. வளவனாற்றில் பாண்டி கிராமம் அருகில் உடைப்பு ஏற்பட்டு வருவாய்த் துறையினர் மூலம் சரி செய்யப்பட்டது.
மாவட்டத்தில் சராசரியாக 15 செ.மீ., மழை அளவு பெய்துள்ளது. இதனால் வெட்டாற்றில் 2,500 கன அடி, கடுவையாறு 800 கன அடி, வெள்ளாறு 500 கனஅடி, அரிச்சந்திரா 6,000 கன அடி, மரக்காயர் கோரையாறு 1,000 கன அடி, கோரையாறு 1,500 கன அடி தண்ணீர் வெள்ளப் பெருக்கு எடுத்துள்ளது. திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை பகுதியில் அதிக அளவு பெய்த மழையால் நெடும்பள்ளம், கள்ளுக்குடி, ஓருர், வேப்பஞ்சேரி, தொண்டியக்காடு, கோட்டகம், கட்டிமேடு, அரியலூர் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமப் பகுதியில் 30 ஆயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட சம்பா சாகுபடி தண்ணீரில் மூழ்கியுள்ளது.
 திருவாரூர் பகுதியில் மாவூர், கொரடாச்சேரி, நன்னிலம் பகுதியில் பேரளம், சண்ணாநல்லூர், ஆண்டிப்பந்தல் போன்ற பகுதிகளில் சுமார் 25 ஆயிரம் ஏக்கர் சாகுபடி, தண்ணீர் சூழ்ந்துள்ளது. டெல்டா பாசனப் பகுதியில் மேலும் மழை நீடித்தால், சம்பா சாகுபடி இளம் நடவுகள் தண்ணீரில் மூழ்கி பெருத்த சேதம் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம், பலத்த மழையால் சேதங்கள் ஏற்படாமல் இருக்க வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட அதிகாரிகளை முடுக்கி விட்டுள்ளது.

நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font   | 
  மின்னஞ்சல்  |   RSS  |  Bookmark and Share


வாசகர் கருத்து
 You all got color TV!! Our Govt will entertain to you all the time.

Whether your crop goes bust or you starve, why do I care? For the past 4o years the Government is squandering all the funds at the pretext of freebies. If you give Rs.10 for public, Rs.90 goes towards the pocket of corrupt officials and politicians.

A curse on Tamil Nadu for generations to come. We threw away Sri.Kamaraj and his curse will not go anywhere.

A generation need to suffer for their act of dethroning Kamarajar! 
by JG JAY G,Kumbakoan,India    11/7/2009 7:27:53 AM IST
Post Your Comments for the Article

 

Your Name  :
Initial : Name :
Your Email Id :
Your city (or) location  :  
Your country  :  
Your Comment:
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)


மேலும் தமிழக சிறப்புச் செய்திகள்
  இ-பேப்பர்