Advertisement
மாவட்டம் » விருதுநகர் சிறப்பு
மற்ற மாவட்டங்கள் :
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் முதல் பக்கம்
விருதுநகர் நகரின் சிறப்பு முதல் பக்கம்
ஹோட்டல்கள்
டிராவல்ஸ்
திருமண மண்டபங்கள்
திருமண தகவல் மையங்கள்
கல்வி நிறுவனங்கள்
மருத்துவமனை
சினிமா தியேட்டர்கள்
பிற தகவல்கள்
விருதுநகர் சுற்றுலா
ஸ்ரீவில்லிபுத்தூர் அணில்கள் சரணாலயம் :
விருதுநகரில் இருந்து 45 கி.மீ தொலைவில் சாம்பல் நில அணில்கள் சரணாலயம் அமைந்துள்ளது. வழக்கமான அணில்களை விட பெரியதாக, சாம்பல் நிறத்தில் இந்த அணில் இருக்கும். இந்த அரிய வகை அணில் இந்த சரணாலயத்தில் அதிகமாக காணப்படுகிறது. மேலும் பறக்கும் அணில், ...
மேலும்...
விருதுநகர்
விருதுநகர்

விருதுநகர் வரலாறு

வரலாறு

Hotel image

1985ம் ஆண்டு மார்ச் 15ம் தேதி ராமநாதபுர மாவட்டம் மூன்றாக பிரிக்கப்பட்டு, ராமநாதபுரம் மாவட்டம், சிவகங்கை மாவட்டம், விருதுநகர் மாவட்டங்களாக உருவாக்கப்பட்டது. விருதுநகரின் முதல் மாவட்ட கலெக்டர் எல்.என். விஜயராகவன் ஐ.ஏ.எஸ்., விருதுநகர் மாவட்டத்தின் தலைமையிடம் விருதுநகராகும். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை, சிவகாசி, காரியாபட்டி, திருச்சுழி, விருதுநகர், சிவகாசி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் ஆகிய தாலுகாக்களை உள்ளடக்கியதாகும். அருப்புக்கோட்டை ரெவின்யூ டிவிஷனில் காரியாபட்டி, திருச்சுழி, அருப்புக்கோட்டை, விருதுநகர் ஆகிய தாலுகாக்கள் உள்ளன. சிவகாசி ரெவின்யூ டிவிஷனில் சாத்தூர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் தாலுகாக்கள் உள்ளன.


விருதுநகர் மாவட்டத்தில் ஆறு சட்டசபை தொகுதிகள் உள்ளன. இரண்டு பார்லிமென்ட் தொகுதிகள் உள்ளன. ஆறு முனிசிபாலிட்டிகள் உள்ளன. அருப்புக்கோட்டை, விருதுநகர், சாத்தூர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் ஆகியன. 11 பஞ்சாயத்து யூனியன்கள் உள்ளன. 10 டவுன் பஞ்சாயத்துகள், 450 கிராம பஞ்சாயத்துகள், 598 கிராமங்கள் உள்ளன.மதுரையிலிருந்து 43 கி.மீ தொலைவில் விருதுநகர் அமைந்துள்ளது. விருதுநகர் மாவட்டத்தின் வடக்கில் மதுரை உள்ளது. வடகிழக்கில் சிவகங்கையும், கிழக்கே ராமநாதபுரமும், தெற்கே திருநெல்வேலி, தூத்துக்குடியும் உள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் தாலூகாக்கள் மற்ற தாலுகாக்களை விட வித்தியாசமானதாகும். இங்கு மேற்குதொடர்ச்சி மலைப்பகுதி உள்ளது. சிவகாசி, விருதுநகர், சாத்தூர், அருப்புக்கோட்டை, திருச்சுழி, காரியாப்பட்டி ஆகிய பகுதிகள் கரிசல் மண் பகுதிகளாகும். மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியின் சராசரி உயரம் 1500 மீட்டராகும். சில குன்றுகள் 1700 மீட்டரும் உள்ளது. பேய்மலை மொட்டை, கொட்டமலை ஆகியவை மிகப்பெரிய மலைக்குன்றுகள்.


விருதுநகர் மாவட்டத்தில் ஜீவ நதிகள் எதுவும் இல்லை. வைப்பாறு, அர்ஜூனா நதி மற்றும் குண்டாறு போன்ற சிறிய நதிகள் விருதுநகரின் நீர் தேவையை பூர்த்தி செய்கின்றன. இந்த நதிகளிலில் இருந்து பல கிளைகள் பிரிந்து வாய்க்கால்களாகவும், ஓடைகளாகவும் உருவாகியுள்ளன. செங்கல் செய்வதற்கான சிவப்பு களிமண், செம்மண், கரிசல் மண், போன்றவை இங்கு பரவலாக காணப்படுகிறது. சுண்ணாம்புகல், ஜிப்சம், களிமண், மணல் போன்றவை பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. மாவட்டத்தின் தெற்கு பகுதியில் கிரானைட் ஏற்றுமதி இங்கு சிறிய அளவில் நடைபெறுகிறது.


காடுகள்: மேற்கு தொடர்ச்சி மலையின் கிழக்கு சரிவு பகுதியில் காடுகள் நிறைந்து காணப்படுகிறது. காடுகளின் மூலம் மாவட்டத்திற்கு கிடைக்கும் வருவாய் 1999-2000ம் ஆண்டில் ரூ.53 லட்சமாக இருந்தது. மாவட்டத்தின் பரப்பளவில் 6.3 சதவீதம் காடுகள் உள்ளன. தேசிய காடு வளர்ப்பு மையத்தின் பரிந்துரைப்படி மொத்த பரப்பளவில் மூன்றில் ஒரு பங்கு காடுகள் இருக்க வேண்டும் என்பது. இங்குள்ள மழையளவு மற்றும் மண்வளம் ஆகியவற்றை கணக்கில் கொண்டால் இது சற்று சாத்தியமற்றது.


விலங்குகள் மற்றும் தாவரங்கள்: மலைப்பகுதியில் பல அரிய வகை விலங்கினங்கள் மற்றும் தாவரங்கள் காணப்படுகின்றன. 480 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் 1989ம் ஆண்டு ஸ்ரீவில்லிபுத்தூர் செண்பகதோப்பில் வனவிலங்கு சரணாலயம் அமைக்கப்பட்டது. சரணாலயத்தில் பறவைகள், பாலூட்டி இனத்தை சேர்ந்த விலங்குகள், ஊர்வன, மற்றும் வண்ணத்துப்பூச்சிகள் உள்ளன. யானைகளும் உள்ளன. அங்கு அரிய வகை சாம்பல் நில அணில் உள்ளது. மேலும் புலி, சிறுத்தை, புள்ளி மான், சிங்கவால் குரங்கு, லாங்கூர், நீலகிரி லாங்கூர், கரடி, பறக்கும் அணில் மற்றும் 100க்கும் மேற்பட்ட பறவைகள் காணப்படுகின்றன. அரிய வகை கொம்பு போன்ற அலகுடைய பறவையும் காணப்படுகிறது. மலை மற்றும் காட்டுபகுதியில் பழமரங்கள் வைக்கப்பட்டுள்ளன. ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள அழகர்கோவில், மற்றும் சதுரகிரி பகுதியில் மூலிகை தாவரங்கள் அதிகமாக காணப்படுகிறது. இதுவரை 275 வகை மூலிகைகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.


விவசாயம் : மாவட்டத்தின் 37 சதவீத நிலத்தில் விவசாயம் செய்யப்படுகிறது. விவசாயத்தினால் 52 சதவீத மக்கள் வேலைவாய்ப்பு பெறுகின்றனர். இங்கு கரிசல் மண்ணே அதிகம் காணப்படுவதால் பருத்தி, பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள், தினை போன்ற தானியங்கள் விளைகின்றன. கிணற்று பாசனம் இருக்கும் இடங்களில் நெல், கரும்பு விவசாயம் செய்யப்படுகிறது.


தொழிற்சாலைகள் : சிமென்ட் தொழிற்சாலைகள், டெக்ஸ்டைல் மில்கள் மற்றும் சிறிய அளவிலான தொழிற்சாலைகள் உள்ளன. பருத்தி இந்த மாவட்டத்தின் முக்கிய பயிராகும். ராஜபாளையத்தில் ஸ்பின்னிங், ஜின்னிங் மில்கள் அதிகம் காணப்படுகிறது. சர்ஜிகல் காட்டன், பேண்டேஜ் துணிகள் இங்கு உற்பத்தி செய்யப்படுகிறது. டெக்ஸ்டைல் மில்கள் விதவிதமான காட்டன் நூல்களை உற்பத்தி செய்கின்றன. தாதுக்களான, சுண்ணாம்புக்கல், ஜிப்சம் போன்றவை கிடைப்பதால் சிமென்ட் உற்பத்தி இங்கு நடைபெறுகிறது. பொதுத்துறை நிறுவனமான தமிழ்நாடு சிமென்ட் ஆலங்குளத்திலும், தனியார் சிமென்ட் ஆலையான மெட்ராஸ் சிமென்ட்ஸ் துலுக்கன்பட்டியிலும் உள்ளன. தமிழ்நாடு சிமென்ட்ஸ் ஆண்டிற்கு 4 லட்சம் டன் போர்ட்லேண்ட் சிமென்ட் உற்பத்தி செய்கிறது. மெட்ராஸ் சிமென்ட் 4.15 லட்சம் டன் உற்பத்தி செய்கிறது.பொதுத்துறை நிறுவனமான தமிழ்நாடு அஸ்பெஸ்டாஸ் சிமென்ட் ஷீட்களை உற்பத்தி செய்கிறது.