Advertisement
மாவட்டம் » திருப்பூர் சிறப்பு
மற்ற மாவட்டங்கள் :
திருப்பூர்
திருப்பூர் மாவட்டம் முதல் பக்கம்
திருப்பூர் நகரின் சிறப்பு முதல் பக்கம்
ஹோட்டல்கள்
டிராவல்ஸ்
திருமண மண்டபங்கள்
திருமண தகவல் மையங்கள்
கல்வி நிறுவனங்கள்
மருத்துவமனை
சினிமா தியேட்டர்கள்
பிற தகவல்கள்
திருப்பூர் சுற்றுலா
முதலைப்பண்ணை
ஒரு முதலையைப் கண்டாலே படை நடுங்கும். ஒரு பண்ணையையே பார்த்தால் எப்படித் தோன்றும்? அமராவதி அணைக்கட்டில் இருக்கிறது இந்த முதலைப் பண்ணை. உடுமலைப்பேட்டையிலிருந்து 25 கி.மீ. தொலைவிலுள்ள இந்தப் பகுதி மாவட்ட சுற்றுலா மையமாகவும் வளர்ந்து வருகிறது. இங்கு செல்ல உடுமலைப்பேட்டையிலிருந்து தனி பேருந்துகள் இயங்குகின்றன. அமராவதி முதலை பண்ணையில், குட்டி முதல் பெரிய அளவிலான முதலைகள் வரை தனித்தனியாக, வயது வாரியாக தொட்டிகளில் வளர்க்கப்படுகின்றன.


மேலும்...
திருப்பூர்
திருப்பூர்

திருப்பூர் வரலாறு

திருப்பூர் வரலாறு

Hotel image

திருப்பூர் மாவட்டம் அக்டோபர் 2008 இல் உருவாக்கப்பட்டது. இம்மாவட்டம் கோயம்புத்தூர் மாவட்டத்தின் திருப்பூர், அவினாசி, பல்லடம், உடுமலைப்பேட்டை ஆகிய பிரிவுகளையும், ஈரோடு மாவட்டத்தின் தாராபுரம், காங்கேயம் ஆகிய பிரிவுகளையும் கொண்டு உருவாக்கப்பட்டது. திருப்பூர் நகரம் இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையகமாகு வரலாற்று ஆராய்ச்சியின் படி திருப்பூர் என்பது தோட்டம் என பொருள் பெற்றதாகும். திருப்பூர் நகரம் விவசாய நிலங்கள் நிறைந்து இருந்துள்ளது. திருப்பூரில் இருக்கும் தொழில் அதிபர்கள் அனைவரும் விவசாய குடும்பத்தில் இருந்து வந்தவர்களே.


விவசாயத்தில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக வேறு தொழில் துவங்க விவசாயிகள்முடிவு செய்தனர். பின்னலாடை நிறுவனங்களில் வேலைக்கு சேர்ந்து தொழில் கற்று சிறு முதலீட்டாளர்களாக உருவெடுத்தனர். பழைய வடிவிலான பனியன் தயாரிப்புகளில் இருந்து புதிய பனியன் தயாரிப்பு முறைகளை 1970களில் புகுத்தினர். முதல் தலைமுறையினர் சிறு முதலாளிகளாக உருவெடுத்து பல துணை நிறுவனங்களை நகரம் முழுவதும் உருவாக்கினர். இவ்வாறு திருப்பூர் பனியன் தொழிற்சாலைகள் உலகின் முக்கிய பனியன் உற்பத்தி நகராமாக உருவெடுத்துள்ளது.



தொழில் வளம் :

தொழில் துறையில் தமிழகத்தில் மிகவும் வேகமாக வளர்ந்துவரும் நகரம் திருப்பூர் . லட்சக்கணக்கான மக்களுக்கு வாழ்வளித்த , வாழ்வளிக்கும் நகரம் திருப்பூர் . தென்மாவட்டத்தை சேர்ந்த ஆயிரகணக்கான மக்கள் பணிபுரிகிறார்கள் . ஆண்டு தோறும் பத்து ஆயிரம் கோடிக்கும் மேலான அந்நிய செலவாணியை ஈட்டி தருகிறது.