Advertisement
மாவட்டம் >> திருச்சி சிறப்பு
மற்ற மாவட்டங்கள் :
திருச்சி
திருச்சி மாவட்டம் முதல் பக்கம்
திருச்சி நகரின் சிறப்பு முதல் பக்கம்
ஹோட்டல்கள்
டிராவல்ஸ்
திருமண மண்டபங்கள்
திருமண தகவல் மையங்கள்
கல்வி நிறுவனங்கள்
மருத்துவமனை
சினிமா தியேட்டர்கள்
பிற தகவல்கள்
திருச்சி வரலாறு
திருச்சி வரலாறு

இந்தியாவில் உள்ள மாநிலங்களில் சுற்றுலா சிறப்பில் தமிழகம் தன்னிகரில்லா பெருமைகளை பெற்று விளங்குகிறது. இங்கு ஆயிரக்கணக்கில் எழுந்துள்ள கோயில்கள், உயர்ந்து நிற்கும் கம்பீரமான கோபுரங்கள், கலையெழில் கொஞ்சும் மண்டபங்கள், நீண்ட நெடும் பிரகாரங்கள், அழகுமிகு சிற்பங்கள், வண்ணமிகு திருவிழாக்கள் அனைத்தும் தமிழகத்தின் காலச்சார பெருமைகள்.
 
வரலாறு, மொழி, கலை, இலக்கியம், ஆன்மீகம், வேளாண்மை, பண்பாடு, பழமை, செழுமை, இயற்கை ஆகிய அனைத்து பெருமைகளையும் உடையது தமிழகம். இத்தகைய பெருமைமிகு தமிழகத்துக்கு பெருமை சேர்ப்பது மாநிலத்தில் மத்தியில் உள்ள திருச்சி ...

மேலும்...
திருச்சி சுற்றுலா
தொங்கு பாலம்:

திருச்சி மாவட்டம் மணப்பாறையிலிருந்து திண்டுக்கல் செல்லும் வழியில் 25வது கிலோமீட்டரில் உள்ள கீரனூர் கிராமத்தின் அருகில் அமைந்துள்ள ரயில்வே தொங்குபாலம், தென்னிந்தியாவின் முதல் தொங்குபாலமாக உள்ளது. மலைகளை குடைந்து அமைக்கப்பட்டது இதன் ...

மேலும்...
திருச்சி
திருச்சி

திருச்சி சிறப்பு


திருச்சிராபள்ளி என்ற பெயர் ஏற்பட்டதற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன. திரு என்பது தமிழில் மரியாதையை குறிக்கும் சொல். சிரா என்பது ஜைன துறவியின் பெயராகும். இதனால் திருச்சிராப்பள்ளி என்ற பெயர் ஏற்பட்டதாகவும், மூன்று தலை கொண்ட திரிசிரா (ராவணனின் மகன்) சிவனை வழிபட்டு தன் பாவத்தை போக்கிய தலம் என்பதால் இந்த பெயர் வந்தது என்றும் கூறப்படுகிறது. திரு செவ்வந்திபுரம் என்ற பெயர் நாளடைவில் மருவி திருச்சி என்று அழைக்கப்பட்டதாகவும் கூறுவர்.



23.26 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள திருச்சி நகரம், 1991-ம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி 7 லட்சம் மக்களைக் கொண்டது. ஆண்டு முழுவதும் சராசரியான வெப்ப நிலையைக் கொண்டதாக திருச்சி உள்ளது. ஆண்டுக்கு சராசரியாக 83.5 சென்டிமீட்டர் மழை பதிவாகிறது. தமிழ் மற்றும் ஆங்கில மொழிகள் இங்கு பேசப்படுகின்றன.


பரப்பளவு : 146.9 சதுர கிலோமீட்டர்
உயரம் : கடல் மட்டத்தில் இருந்து 78 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.
மழை அளவு : 83.5 செமீ
பேசப்படும் மொழிகள் : தமிழ், ஆங்கிலம்

 
Share  
Bookmark and Share