தமிழகத்தில் உள்ள 31 மாவட்டங்களில் ஒன்றான ஈரோடு மாவட்டத் தலைநகராக விளங்கும் ஈரோடு சமீபத்தில்தான் மாநகராட்சியாக மாற்றப்பட்டது. விசைத்தறித் தொழில், மஞ்சள் மார்க்கெட், காங்கேயம் காளைகள், ஊத்துக்குளி வெண்ணெய் போன்றவற்றுக்கு புகழ் பெற்றது ஈரோடு மாவட்டம். இங்கு தயாரிக்கப்படும் துண்டுகள், படுக்கை விரிப்புகள் மற்றும் லுங்கிகள் உலகில் பல நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.