Advertisement
மாவட்டம் >> தஞ்சாவூர் சிறப்பு
மற்ற மாவட்டங்கள் :
தஞ்சாவூர்
தஞ்சாவூர் மாவட்டம் முதல் பக்கம்
தஞ்சாவூர் நகரின் சிறப்பு முதல் பக்கம்
ஹோட்டல்கள்
டிராவல்ஸ்
திருமண மண்டபங்கள்
திருமண தகவல் மையங்கள்
கல்வி நிறுவனங்கள்
மருத்துவமனை
சினிமா தியேட்டர்கள்
பிற தகவல்கள்
தஞ்சாவூர் வரலாறு
வரலாறு

தஞ்சாவூர் பழம் பெருமை வாய்ந்த பகுதி ஆகும். தஞ்சையை சோழர்கள் முதல் நூற்றாண்டில் இருந்து 12ம் நூற்றாண்டு வரை ஆட்சி புரிந்தனர். அவர்கள் தங்கள் ஆட்சி காலத்தில் 90 கோயில்களை கட்டியுள்ளனர். அதன் பின் முத்தரையர்கள், 16ம் நூற்றாண்டில் நாயக்கர்களும், 17,18ம் நூற்றாண்டுகளில் மராத்தியர்களும் ஆட்சி புரிந்த போதிலும் சோழர்களின் காலம் பொற்காலம் என அழைக்கப்படுகிறது. எல்லாருடைய ஆட்சி காலத்திலும் தஞ்சையே தலைநகராக இருந்துள்ளது. பழங்காலத்தில் தஞ்சாவூர், தஞ்சபுரி என முத்தரையர்களால் அழைக்கப்பட்டது. பின்னர் விஜயாலய சோழனால் கைப்பற்றப்பட்டது. விஜயாலயன் அங்கு தன் இஷ்ட ...

மேலும்...
தஞ்சாவூர் சுற்றுலா
தஞ்சாவூர் அரண்மனை :

அரண்மனையின் கிழக்கு முக்கிய வீதியில் ஆங்காங்கே பெரிய மற்றும் சிறிய கட்டடங்கள் காணப்படுகிறது. இவை நாயக்க மற்றும் மராத்திய மன்னர்களால் கட்டப்பட்டது. நுழைவு வாயிலில் மிகப்பெரிய முற்றம் உள்ளது. சுற்றிலும் பெரிய சுற்றுச் சுவர் மற்றும் அதில் அமைக்கப்பட்டுள்ள பெரிய கதவுகளுடைய நுழைவாயில் உள்ளது. பெரிய முற்றத்தின் வழி சென்றால் அங்கு பல தூண்களை உடைய பெரிய கூடம் உள்ளது. தெற்கு பக்கத்தில் 190 அடி உயரமுடைய எட்டு அடுக்குகளை உடைய கூட கோபுரம் உள்ளது. இது கண்காணிப்பு கோபுரம் என அழைக்கப்படுகிறது. கி.பி., 1855ம் ஆண்டு வரை தஞ்சை மன்னர்களின் படைக்கல கொட்டிலாக இந்த இடம் ...

மேலும்...
தஞ்சாவூர்
தஞ்சாவூர்

தஞ்சாவூர் சிறப்பு


தஞ்சாவூர் தமிழகத்தின் நெற்களஞ்சியம் ஆகும். தமிழகத்தில் நெல் உற்பத்தியில் தஞ்சாவூர் முதலிடம் வகிக்கிறது.


பெயர்க்காரணம்:

பெயர் வரக் காரணமாக சொல்லப்படும் புராணக்கதை. முற்காலத்தில் தஞ்சன் என்னும் அசுரன் இவ்விடத்தில் மக்களை துன்புறுத்திவந்தான். மக்களைக் காக்க அவனை சிவபெருமான் வதம் செய்த இடமாதலால் தஞ்சாவூர் என்று பெயரும், சிவபெருமான் இந்த ஊரில் தஞ்சபுரீஸ்வரர் என்ற திருப்பெயருடன் கோயில் கொண்டுள்ளார். இத்திருக்கோயில் தஞ்சாவூரிலிருந்து கும்பகோணம் செல்லும் சாலையில், பள்ளியக்ரஹாரத்திற்கு அருகில் இருக்கிறது. வைணவ சம்பிரதாயத்தில் இதே புராணம் சிறிது மாற்றப்பட்டு மஹாவிஷ்ணுவே தஞ்சனை அழித்தார் என்றும், அதனால் தஞ்சை மாமணி நீலமேகப்பெருமாளாய் கோயில் கொண்டு இருக்கிறார் என்று நம்பப்படுகிறது. இதில் குறிப்பிடத்தக்க விஷயம், மேற்கூறிய நீலமேகப்பெருமாள் கோயில் தஞ்சபுரீஸ்வரரின் கோயிலுக்கு நேரெதிரில் உள்ளது.


சிறப்புகள் : தஞ்சாவூர் மாவட்டம் விவசாயத்திற்கு பெயர் பெற்றதாகும். காவிரி நதியால் நெற்பயிர்களும், தென்னை மரங்களும், மாந்தோப்புகளும் செழித்து வளர்கின்றன. தஞ்சாவூரின் ஆண்டு நெல் உற்பத்தி 1991-92ம் ஆண்டில் 6.5 லட்சம் மெட்ரிக் டன் ஆகும். தமிழகத்தின் பிற மாவட்டங்களை விட இங்கு நெல் உற்பத்தி அதிகம் என்பதால் தமிழகத்தின் நெற்களஞ்சியம் என அழைக்கப்படுகிறது. இங்கு சில தொழிற்சாலைகளும் உள்ளன. தமிழகத்தின் பதிமூன்று கடற்கரை மாவட்டங்களில் தஞ்சாவூரும் ஒன்றாகும். தமிழகத்தின் மீன் பிடி தொழிலில் 5 சதவீதம் தஞ்சாவூரில் நடைபெறுகிறது. தஞ்சாவூர் பழங்கால ஓவியங்கள், வெண்கலத்தால் செய்யப்பட்ட கைவினை பொருட்களுக்கு புகழ் பெற்றதாகும். இங்கு பலாமரத்தில் செய்யப்படும் வீணை, தம்புரா போன்ற இசைக்கருவிகள் இசைக்கலைஞர்களின் விருப்பத்திற்குரியதாகும். 


தலையாட்டி பொம்மை : தஞ்சாவூர் என்றதும் தலையாட்டி பொம்மை அனைவரது ஞாபகத்திற்கும் வரும். இந்த தலையாட்டி பொம்மை மூன்று பாகங்களாக உள்ளது. காற்றில் பொம்மை ஆடுவது பார்ப்பதற்கு ரம்மியமாக இருக்கும். விலையும் மலிவாக கிடைப்பதால் தஞ்சாவூர் வரும் அனைவரும் இந்த பொம்மையை வாங்காமல் செல்வதில்லை.

கும்பகோணம் டிகிரி காபி : காபி என்றாலே கும்பகோணம் டிகிரி காபி நினைவில் வந்து நாவில் நீர் ஊற செய்யும். காபி கொட்டைகளை அரைத்து தாமிரத்தால் ஆன பில்டர்களில் வடிகட்டி டிகாஷன் தயாரித்து சுத்தமான பசும்பால் கலந்து காபி தயாரிக்கப்படுகிறது. தாமிரத்தால் ஆன பில்டர்களை பயன்படுத்துவதால் சுவை கூடுகிறது. தஞ்சாவூர் ஓவியங்கள் : தஞ்சாவூர் ஓவியங்கள் மிகப் பிரபலமானவை. இந்து கடவுள்கள், ராமாயண, மகாபாரதம் போன்ற இதிகாச காட்சிகள் ஆகியவையே ஓவியத்தின் முக்கிய கரு பொருளாக இருக்கும். இந்த ஓவியக் கலை விலை மதிப்பற்ற கலையாக கருதப்படுகிறது. ஓவியங்கள் பெரும்பாலும் தங்க நிறத்தில் ஜொலிக்கும்.

தஞ்சை சமையல் : பழைய தஞ்சை மாவட்டம் தற்போது தஞ்சை, நாகை, திருவாரூர் என மூன்று மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு இருக்கின்றது. இந்த மூன்று மாவட்டங்கள் மட்டுமல்லாது திருச்சி உள்ளிட்ட பண்டைய சோழ அரசின் ஆளுகைக்கு உட்பட்டிருந்த மாவட்டங்களில் உள்ள மக்களின் உணவுப்பழக்கமும், உணவுத் தயாரிக்கும் விதமும் ஏறக்குறைய ஒரே மாதிரியாகவே உள்ளன. பிராமணர்கள் அதிகம் வசிக்கும் பகுதி என்பதால் இங்கு சைவ உணவுகள் மிகப்பிரசித்தம். தமிழகத்தின் நெற்களஞ்சியமாக இருப்பதால் அரிசி சார்ந்த உணவு வகைகள் இங்கு மிகுதியாய் பழக்கத்தில் உள்ளன.பரப்பளவு : 3397 சதுர கிலோமீட்டர்
மக்கள் தொகை : 22.16.138
மழை அளவு : 1008.8 மி.மீ (ஆண்டிற்கு)

 
Share  
Bookmark and Share