தேனி சிறப்பு
தேனி மாவட்டம் மதுரையில் இருந்து 1996ம் ஆண்டு ஜூலை 25ம் தேதி பிரிக்கப்பட்டது. பின்னர் உத்தமபாளையம் பெரியகுளம், ஆண்டிபட்டி ஆகியவை தாலுகாக்களாக பிரிக்கப்பட்டன. அமைவிடம் : தேனிக்கு, வடக்கே திண்டுக்கல் மாவட்டமும், கிழக்கே மதுரை மாவட்டமும், தென்மேற்கில் விருதுநகரும், மேற்கே கேரளாவும் உள்ளது. தேனி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. மேலும் மேகமலை போன்ற சிறிய சிறிய மலைகளும் உள்ளன. இந்த மலை தொடர் வடக்கிலிருந்து தெற்காக கேரள மாநிலத்தில் இருந்து தேனியை பிரிப்பது போல அமைந்துள்ளது
பரப்பளவு : 2,889 சதுர கிலோமீட்டர் மக்கள் தொகை : 10,93,950 மழை அளவு : 832.8 மிமீ (ஆண்டிற்கு)
|