
![]() தேனி மாவட்டம் மதுரையில் இருந்து 1996ம் ஆண்டு ஜூலை 25ம் தேதி பிரிக்கப்பட்டது. பின்னர் உத்தமபாளையம் பெரியகுளம், ஆண்டிபட்டி ஆகியவை தாலுகாக்களாக பிரிக்கப்பட்டன. அமைவிடம் : தேனிக்கு, வடக்கே திண்டுக்கல் மாவட்டமும், கிழக்கே மதுரை மாவட்டமும், தென்மேற்கில் விருதுநகரும், மேற்கே கேரளாவும் உள்ளது. தேனி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. மேலும் மேகமலை போன்ற சிறிய சிறிய மலைகளும் உள்ளன. இந்த மலை தொடர் வடக்கிலிருந்து தெற்காக கேரள மாநிலத்தில் இருந்து தேனியை பிரிப்பது போல அமைந்துள்ளது. தேனி, போடிநாயக்கனூர், பெரியகுளம், கம்பம், ... |
| மேலும்... |

![]() சுருளி அருவி தமிழ்நாடு, தேனி மாவட்டத்தில் போடிநாயக்கனூர் என்ற அழகிய சிறிய நகரத்திலிருந்து 25 கி.மீ தொலைவில் உள்ளது. கோடைக்காலத்தில் ஓர் இனிய சுற்றுலாத்தலமாகும். தரையில் மெலிதாகப் பரவி மறுபடியும் 40 அடி ஆழமாக வீழ்ந்து ஓடுகின்றது. அடர்ந்த காடுகளும் மரங்களும் இதன் அழகை மெருகூட்டுவதாகவும் உள்ளது. ஆண்டு முழுவதும் இந்த அருவியில் நீர் வரும் எனச் சொன்னாலும் ஜூன் முதல் அக்டோபர் மாதங்களில் நீர்ப் போக்குவரத்து அதிகமாய் இருப்பதால் அப்போது நிறைய மக்களைக் காணலாம். சுருளியாண்டவர் கோயில் பிரசித்தி பெற்ற ஒன்றாகும். இளங்கோவடிகள் எழுதிய சிலப்பதிகாரம் என்ற ... |
| மேலும்... |
| ||||