Advertisement
மாவட்டம் » சேலம் சிறப்பு
மற்ற மாவட்டங்கள் :
சேலம்
சேலம் மாவட்டம் முதல் பக்கம்
சேலம் நகரின் சிறப்பு முதல் பக்கம்
ஹோட்டல்கள்
டிராவல்ஸ்
திருமண மண்டபங்கள்
திருமண தகவல் மையங்கள்
கல்வி நிறுவனங்கள்
மருத்துவமனை
சினிமா தியேட்டர்கள்
பிற தகவல்கள்
சேலம் வரலாறு
வரலாறு

சேலம் மலைகள் சூழ்ந்து காணப்பட்டதால் சைலம் என்று அழைக்கப்பட்டு அது சேலம் என மருவியதாகவும், சேர நாட்டின் கிழக்கு எல்லையாக இருந்ததால், சேரலம் எனப்பட்டு, சேலம் என மருவியதாகவும், சமண சமயத்தின் முக்கிய தளமாக இருந்ததால், சைலம் என அழைக்கப்பட்டு சேலம் என மருவியதாகவும் என பல்வேறு காரணங்கள் சேலத்தின் பெயருக்கு காரணமாக தெரிவிக்கப்படுகிறது. சுதந்திர போராட்ட காலத்தின்போது, சேலம் வளர்ச்சியடைந்த கிராமமாக இருந்தது. 1801ல் சேலத்தின் மக்கள் தொகை 10 ஆயிரம். சேலத்தின் சுகாதார பணிகளை கவனிக்க, ஆங்கிலேயர்களால் 1857ல் சுகாதார சபை என்ற 16 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு, அந்த ...

மேலும்...
சேலம்
சேலம்

சேலம் சுற்றுலா

தாரமங்கலம் கைலாசநாதர் திருக்கோயில்:
Hotel image
இது ஒரே நேரத்தில் கட்டப்பட்ட கோயில் அல்ல. 10 ஆம் நூற்றாண்டிலேயே இதன் சில பகுதிகள் இருந்தன. 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கட்டி முதலி அரச பரம்பரையினர் இந்தக் கோயிலை விரிவுபடுத்திக் கட்டியுள்ளனர். பிற்காலத்தில் மும்முடிச் சோழனும், சீயாழி மன்னனும் இந்தக் கோயிலைப் புதுப்பித்து திருவிழாக்களைக் கொண்டாடி வந்துள்ளனர். வணங்காமுடி மன்னர் காலத்தில்தான், இந்தக் கோயில் முழுமையாகக் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்தக் கோயிலைச் சுற்றி 306 து164 அடி அளவுக்கு மிகப்பெரிய கல்சுவர் எழுப்பப்பட்டுள்ளது. இது 13 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. ஆலயத்தின் ராஜகோபுரம் 90 அடி உயரத்தில் ஐந்து அடுக்குகளைக் கொண்டது. ஒரு பெரிய தேரைக் குதிரைகளும் யானைகளும் இழுத்துச் செல்வதைப் போன்ற தோற்றத்தில் இந்தக் கோபுரம் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் ஆகஸ்டு-செப்டம்பர் மற்றும் பிப்ரவரி மார்ச் மாதங்களில் நுழைவு வாயில் கோபுரத்தின் வழியாக மாலை நேர வெயில் நுழைந்து கருவறையில் இருக்கும் சிவகாமி சமேதராக வீற்றிருக்கும் கைலாசநாதர் சிலை மீது விழும்.
சிறப்புகள் :மாசி 9,10,11 ஆகிய தேதிகளில் சூரிய ஒளி நந்தியின் கொம்பு வழியே சென்று சிவலிங்கத்தின் மீது மூன்றாம் பிறை போல் விழுகிறது. இதைக்காண அன்றைய தேதிகளில் கோயிலில் பக்தர்கள் வெள்ளம் அலை மோதும். ரதி சிலையிலிருந்து பார்த்தால் மன்மதன் தெரியும் வகையிலும், மன்மதன் சிலையிலிருந்து பார்த்தால் ரதி தெரியும்படியும் அமைந்த சிற்பம் சிறப்பானது.இத்தலத்தில் உள்ள கல் சங்கிலி, கல் தாமரை, சிங்கம் ஆகியவை சிற்பகலைக்கு சிறந்த எடுத்துக்காட்டு.எப்போதும் குளிர்ச்சியாக இருக்கும் பவளக்கல் பட்டியக்கல் நிலை கோயிலின் நுழைவாயிலில் உள்ளது.பாதாள லிங்கம் : இத்தலத்திலேயே வெகு சிறப்பான சன்னதி இது. தலத்தின் கீழ்பகுதியில் ஒரு காற்று புக முடியாத அறைக்குள் இருக்கும் இந்து பாதாள லிங்கத்திற்கு பச்சை கற்பூரம் வைத்து செவ்வாய்க் கிழமை தோறும் அபிஷேகம் செய்தால் கல்யாண பாக்கியம், புத்திர பாக்கியம் மற்றும் தொழில் விருத்தி ஆகியவை கை கூடுகின்றன. ஜூரகேஸ்வரர் : இத்தலத்தில் உள்ள ஜூரகேஸ்வரர் 3 தலை, 3 கால்களோடு இருப்பது சிறப்பு. இவருக்கு மிளகு ரசம் வைத்து சாதம் படைத்து வடைமாலை சாத்தி அபிஷேகம் செய்தால் காய்ச்சல் மற்றும் தீராத வியாதிகள் குணமடைகின்றன.

ஏற்காடு
Hotel image
ஏற்காடு என்பது தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள மலை ஊராகும். இது கிழக்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் அமைந்துள்ள சேர்வராயன் மலையில் அமைந்துள்ளது. ஏற்காடு கடல் மட்டத்திலிருந்து 5326 அடி (1623மீட்டர்) உயரத்தில் உள்ளது. இதை ஏழைகளின் ஊட்டி என்றும் அழைப்பார்கள். ஏரிக் காடு என்பதே ஏற்காடு என்று மருவி விட்டது. இது சேலத்திலிருந்து 36 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. சேலத்திலிருந்து ஏற்காடு செல்லும் மலைப்பாதையில் 20 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன.
19ம் நூற்றாண்டில் சேலத்தில் தங்கியிருந்த ஆங்கிலேயர்கள் ஏற்காட்டைக் கண்டறிந்தார்கள். சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் காக் பர்ன் இங்கு காபி செடி, ஆப்பிள் போன்ற பழ வகைகளை அறிமுகப்படுத்தினார். ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காடு நடுத்தர வர்க்க மக்களுக்கு ஒரு சொர்க்கமாகும். மரங்களின் நிழலும் தென்றலின் சுகமும் வெயிலின் தாக்கத்தையும் மறைத்துவிடும் சூழல் கொண்ட ஏற்காட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. சுமார் 383 சதுர கிலோ மீட்டர் கொண்ட ஏற்காட்டில் இயற்கை எழில் மிகுந்த குன்றும் அதையொட்டி அமைந்துள்ள ஏரியும் சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுக்கும் வகையில் உள்ளது. மேலும் இங்கு சிறுவர்கள் விளையாடி மகிழ பூங்காக்களும் இடம் பெற்றுள்ளன. இங்கு அருவியில் குளித்து மகிழ கிள்ளியூர் நீர்வீழ்ச்சி எனும் அருவி ஒன்றும் உள்ளது. ஏற்காடு ஏரியில் நிரம்பினால் இந்த நீர்வீழ்ச்சியில் தண்ணீர் கொட்டும். கடல் மட்டத்தில் இருந்து சுமார் 5342 அடி உயரத்தில் உள்ள மலைக் கோவில் மிகவும் பழமையான, பிரசித்திப் பெற்ற கோயிலாகும். இங்குள்ள பக்கோடா முனை எனுமிடத்திலிருந்து பார்த்தால் கீழுள்ள பகுதி மிக அழகுடன் காட்சியளிக்கிறது. ஏப்ரல், மே மாதங்களில் இங்கு மலர்க்கண்காட்சி நடைபெறும். ஏற்காடு அடிவாரத்தில் குருவம்பட்டி உயிரியல் பூங்கா உள்ளது. ஏற்காடு செல்வோர் இங்கும் சென்று வரலாம். ஏற்காடு செல்வோர் பஸ் அல்லது ரயில் மூலம் சேலம் வந்து அங்கிருந்து மலைக்குச் செல்லும் விசேஷப் பேருந்தில் பயணம் செய்யலாம். 
ஊட்டி, கொடைக்கானல் சென்று கோடைக் காலத்தை கழிக்க வசதியில்லாத ஏழை எளிய நடுத்தர மக்கள் ஏற்காட்டில் மிகக் குறைந்த செலவில் நிறைந்த மகிழ்ச்சியைப் பெறலாம்.ஏற்காடு

மேட்டூர் அணைக்கட்டு:
Hotel image
தென்னிந்தியாவில் உள்ள மிகப்பெரிய அணைகளில் இதுவும் ஒன்று. 1934 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த அணைக்கட்டின் மொத்த நீளம் 1700 மீட்டர்கள் ஆகும். இங்குள்ள மேட்டுர் நீர்மின் உற்பத்தி நிலையம் மிகவும் பெரியதாகும். இங்குள்ள பூங்கா, மலைப்பகுதி மிகச் சிறந்த சுற்றுலாத் தலமாகத் திகழ்கிறது.
 
Bookmark and Share