Advertisement
மாவட்டம் » புதுக்கோட்டை சிறப்பு
மற்ற மாவட்டங்கள் :
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம் முதல் பக்கம்
புதுக்கோட்டை நகரின் சிறப்பு முதல் பக்கம்
ஹோட்டல்கள்
டிராவல்ஸ்
திருமண மண்டபங்கள்
திருமண தகவல் மையங்கள்
கல்வி நிறுவனங்கள்
மருத்துவமனை
சினிமா தியேட்டர்கள்
பிற தகவல்கள்
புதுக்கோட்டை வரலாறு
வரலாறு

தற்போதைய புதுக்கோட்டை பாண்டிய நாட்டின் ஒரு பகுதியாக இருந்தது. நூறாண்டுகளுக்கு முன் இந்த மாவட்டம் சோழ, பல்லவ, ஹொய்சாள மன்னர்களால் ஆளப்பட்டது. 14ம் நூற்றாண்டில் விஜயநகர பேரரசின் கீழ் இருந்த போது விஜய நகர மன்னர்கள் முஸ்லிம் மன்னர்களுடன் பல போர்களை புரிந்துள்ளனர். 1565ம் ஆண்டு தளிகோட்டாவில் நடந்த போரில் விஜயநகர மன்னர் தோற்றதால் பேரரசு நலிவடைந்தது. விஜயநகர பேரரசின் மாகாண பொறுப்பாளர்களாக இருந்த நாயக்கர்கள் இப்பகுதியை ஆண்டனர். 16 முதல் 17ம் நூற்றாண்டின் இடைப்பட்ட காலத்தில் நாயக்கர்கள் புதுக்கோட்டையை ஆண்டுள்ளனர்.


தொண்டைமான் பரம்பரை


மேலும்...
புதுக்கோட்டை
புதுக்கோட்டை

புதுக்கோட்டை சுற்றுலா

ஆவூர்
Hotel image
புதுக்கோட்டையில் இருந்து 28 கி.மீ தொலைவில் ஆவூர் உள்ளது. இங்குள்ள சர்ச் 1547ம் ஆண்டு கட்டப்பட்ட மிகவும் பழமையான இந்த சர்ச் ஜான் வெனடியஸ் பொக்கெட் என்பவரால் கட்டப்பட்டது. இந்த இடத்தில் 1747ம் ஆண்டு கத்தோலிக்க சர்ச் கட்டப்பட்டது.
அரசு அருங்காட்சியகம்
புதுகோட்டை ரயில் நிலையத்தில் இருந்து 5 கி.மீ. தொலைவில் அரசு அருங்காட்சியகம் அமைந்துள்ளது. அருங்காட்சியகத்தில் புவியியல், உயிரியல், வரலாறு தொடர்பான அரிய பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பபட்டுள்ளது. இங்கு அரிய ஐம்பொன் சிலைகளும் உள்ளன.

திறந்திருக்கும் நேரம் : காலை 9 மணி முதல் 5 மணி வரை. அனுமதி இலவசம். வெள்ளி விடுமுறை. தொலைபேசி : 04322-236247.
கட்டுபாவா பள்ளிவாசல்
புதுக்கோட்டையில் இருந்து 30 கி.மீ தொலைவில் கட்டுபாவா பள்ளிவாசல் உள்ளது. திருமயம் மதுரை நெடுஞ்சாலையில் இந்த பள்ளிவாசல் அமைந்துள்ளது. இந்துக்களும் இந்த பள்ளிவாசலுக்கு சென்று வழிபாடு நடத்துகின்றனர்.
குமாரமலை
புதுக்கோட்டையில் இருந்து 10 கி.மீ தொலைவில் குமாரமலை உள்ளது. மலை உச்சியில் முருகன் கோயில் உள்ளது. கோயிலின் அருகே புனித குளம் உள்ளது.
நர்த்தமலை
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த மலை முத்தரையர்களின் தலைமை இடமாக விளங்கியது. இங்குள் கற்கோயில் முத்தரையர்களால் கட்டப்பட்டதாகும். விஜயாலய சோழீஸ்வரம் குகைக்கோயில் விஜயாலய சோழனால் கட்டப்பட்டது. கதம்பர்மலை கோயிலும் பார்க்க தகுந்ததாகும். இந்த மலு புதுக்கோட்டையில் இருந்து 17 கி.மீ தொலைவில் உள்ளது.
சித்தன்ன வாசல்
Hotel image
'உலகப் புகழ் பெற்ற குகை ஓவியங்களை உள்ளடக்கியது சித்தனவாசல்'' புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள இந்த ஊர் அன்னல்வாயிலுக்கு (அன்னவாசல்) அடுத்த சிற்றூராக இருப்பதாலும், சித்தர்கள் வாழ்ந்து வந்ததாலும் சித்தர் அன்னல்வாயிலானது மறுவி சித்தன்னவாசல் எனத் தற்போது அழைக்கப்படுகிறது. இங்கு காணப்படும் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட கல்லறைகள், முதுமக்கள் தாழிகள், கிமு 2-ம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் பிராமி கல்வெட்டு, உலகப் புகழ் வாய்ந்த ஓவியங்களுடன் விளங்கும் குகைக் கோயில் இந்தச் சிறிய கிராமத்தின் தொன்மைச் சிறப்பை உலகுக்கு உணர்த்துகிறது. இங்குள்ள குன்றின் நடுவில் கிழக்கு முகத்தில் அமைந்திருக்கும் இயற்கையான குகையின் பெயர்தான் ஏழடிப்பட்டம். ஆரவார உலகை வெறுத்து அமைதியை நாடிய சமண முனிவர்கள் தங்கியிருந்த இடமாகும். இந்தக் குகைக்குச் செல்ல மேற்குப் பகுதியில் இருந்து குன்றின் மீது ஏறி குகையின் வாயிலில் உள்ள 7 படிக்கட்டுகளைக் கடந்து குகையினுள் நுழைவதால் இந்த இடம் ஏழடிப்பட்டம் என அழைக்கப்படுகிறது.

ஆனால், உலக வாழ்வைத் துறந்து 7 விதமான ஆன்மிக உறுதிகளை மேற்கொண்டு உண்ணாநோன்பிருந்து, உயிர்நீக்க விழைந்த சமண முனிவர்கள் தங்கியிருந்ததால் ஏழடிப்பட்டம் எனவும் பெயர் பெற்றதாக மற்றொரு செய்தி கூறுகிறது. குகைக் கோயிலில் 160 சதுர அடி அளவுள்ள முக மண்டபமும், அதையடுத்த 100 சதுர அடி அளவுள்ள சிறிய கருவறையும் உள்ளன. முன்மண்டபத்தின் முகப்பில் 2 தூண்கள் உள்ளன. மண்டபத்தின் வடக்குச் சுவரில் சமண ஆசிரியரின் சிற்பம், தெற்கில் 5 தலைபாம்புடன் கூடிய 23 சமண தீர்த்தங்கரர், பார்சுவநாதர் சிற்பங்களும் உள்ளன. குகைக் கோயிலின் தரை நீங்கலாக, மற்ற பகுதிகளில் ஓவியங்கள் தீட்டப்பட்டதற்கான அடையாளங்கள் உள்ளன. இங்குள்ள ஓவியங்கள் ச்ழ்ங்ள்ஸ்ரீர்-நங்ஸ்ரீஸ்ரீர் என்னும் முறையில் தீட்டப்பட்டுள்ளன. கருங்கல் பரப்பை பொலிந்து, சமப்படுத்தி, சுண்ணாம்புச் சாந்து பூசி அதன் மீது வெண்சுண்ணாம்பு பூச்சிட்டு வழுவழுப்பாகத் தேய்த்து அப்பரப்பில் ரேகைகளும், வண்ணங்களும் தீட்டப்பட்டுள்ளன.

முன்மண்டபத்தின் விதானத்தை அண்ணாந்து பார்த்தால் அங்கு சித்திரிக்கப்பட்ட தாமரை தடாகம் அனைவரின் சிந்தையையும் கவரும். சித்தன்னவாசல் ஓவிய வேலைப்பாட்டின் உயிர்நாடியே இந்தத் தாமரைத் தடாகம்தான். மணிமேகலை கூறும் வித்தகர் இயற்றிய கண்கவர் ஓவியங்கள் இவைதானோ என எண்ணத்தோன்றுகிறது. பசுமையான இலைகளுடன், தாமரையும், அல்லியும் இந்தத் தடாகத்தில் பூத்துக்குலுங்குகின்றன.
பலவிதமான மீன்கள் அங்கும் இங்கும் ஓடி விளையாடுகின்றன. யானைகள் நீரைக் கலக்கி களித்திருக்கின்றன. அன்னம், சிறகி, வாத்து போன்ற பறவைகள் தங்கள் குஞ்சுகளுடன் குலாவுகின்றன. சுற்றுச்சூழலை மறந்து அசைபோட்டு இருமாந்திருக்கும் எருமை மாடுகளின் தோற்றமுடைய ஓவியங்கள் இயல்பாக உள்ளன. மேலும், அஜந்தா ஓவியங்களிலும், பல்லவர் ஓவியங்களிலும் காணப்படும் அழகையும், அமைதியையும் பண்பட்ட கலைத் திறனையும் சித்தன்னவாசல் ஓவியங்களில் காண முடியும். இந்திய ஓவியக்கலை பாரம்பரியத்தில் தமிழகத்தின் பங்கை சித்தன்னவாசல் உலகுக்கு பறைசாற்றிக் கொண்டிருக்கிறது. இங்கு செல்லும் சுற்றுலாப் பயணிகள் தங்க பயணியர் தங்கும் விடுதி ஒன்று உள்ளது. உணவு வசதி இல்லை. இதனால், சுற்றுலாப் பயணிகள் இங்கிருந்து 50 கி.மீ. தொலைவில் உள்ள திருச்சியிலோ அல்லது 15 கி.மீ. தொலைவில் உள்ள புதுக்கோட்டையிலோ தங்கலாம்.

புதுக்கோட்டையில் இருந்து விராலிமலை செல்லும் அனைத்து பஸ்களும் இந்த ஊர் வழியாகச் செல்லும். ஆனால், சுற்றுலாத் தலம் பிரதான சாலையில் இருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ளதால், பஸ்ஸில் செல்வோர் நடந்து செல்ல வேண்டும். இதன்காரணமாக, புதுக்கோட்டையில் இருந்து வாடகை கார் மூலம் சென்ற வர 4 நபர்களுக்கு சுமார் ரூ. 1000 செலவாகும். திருச்சியில் இருந்து செல்ல சுமார் ரூ. 3 ஆயிரமும், சென்னையில் இருந்து பஸ், ரயில் மூலம் திருச்சி வழியாக வந்து செல்ல ஒரு நபருக்கு ரூ. 2000 செலவாகும்.
தொல்லியல் துறை பராமரிப்பில் உள்ளதால், ஆண்டு முழுவதும் சுற்றுலாப் பயணிகள் சென்று பார்க்க முடியும்.


ஆவுடையார்கோயில்
புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழர்களின் சிற்பகலைக்கு எடுத்துக் காட்டாக ஆவுடையார்கோயில்உள்ளது. இங்குள்ள மூலவர் ஆத்மநாத சுவாமி என அழைக்கப்படுகிறார். மாணிக்க வாசகர் உற்சவ மூர்த்தியாக உள்ளார். நரிகளை பரிகளாக்கிய திருவிளையாடல் புராணம் இக்கோயிலுடன் தொடர்புடையதாகும். கோயில் தாழ்வாரங்கள் கொடுங்கை என்னும் கல்லினால் உருவாக்கப்பட்ட கலையெழில் மிக்க சிற்பங்களை உள்ளடக்கியது. இங்குள்ள ராஜகோபுரம் 96 அடி உயரத்தில் கம்பீரமாக காட்சியளிக்கிறது. சிவபுராண காட்சிகள் ஓவியங்களாக வரையப்பட்டுள்ளன. புதுக்கோட்டையிலிருந்து 46 கிலோமீட்டர் தூரத்தில் ஆவுடையார்கோயில் உள்ளது. திறக்கும் நேரம்: காலை 5.30 - பகல் 1 மணி, மாலை 4.30 - இரவு 8.30 மணி. தொலைபேசி - 04371 - 23330.

கொடும்பாளூர்
Hotel image
கட்டிடக்கலைகளுக்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ள சிற்பங்களைக் கொண்ட மூவர் கோயில் உள்ளது. சிற்பக்கலையில் ஆர்வமுள்ளவர்கள் இங்கு சென்று வரலாம். புதுக்கோட்டையிலிருந்து மணப்பாறை செல்லும் சாலையில் 35 கிலோ மீட்டர் தூரத்தில் கொடும்பாளூர் உள்ளது. புதுக்கோட்டையில் இருந்து இவ்வூர்களுக்கு பஸ், கார், வேன் வசதி உள்ளது. திறக்கும் நேரம்: காலை 6.30 - மாலை 6.30 மணி.
திருக்கோகர்ணம்
திருக்கோகர்ணம் அருள்மிகு பிரகதாம்பாள் உடனுறை திருக்கோகர்ணேஸ்வரர் குகைக்கோயில் சிற்பக்கலையில் ஆர்வமுள்ளவர்களை பெரிதும் கவரும் கோயில். புதுக்கோட்டை நகரின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள இக்கோயிலில் மூலவர் சிவபெருமான் திருக்கோகர் ணேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். திருக்கோகர்ணேஸ்வரர் குடிகொண்டுள்ளதால் அப்பகுதி திருக்கோகர்ணம் என்று அழைக்கப்படுகிறது. பாறையை குடைந்து உருவாக்கப்பட்டுள்ள இந்த கோயில் தமிழ்நாட்டில் உள்ள குகைக்கோயில்களுக்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. இங்கு ராமாயண காட்சிகள் அடங்கிய ஓவியம் ஓவியக்கலைகளுக்கு எடுத்துக்காட்டாக உள்ளது. புதுக்கோட்டை புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து திருச்சி மெயின் ரோட்டில் இரண்டு கி.மீ., தொலைவில் உள்ளது.


திறக்கும் நேரம்: காலை 6.30 - பகல் 1 மணி, மாலை 4.30 - இரவு 8.30 மணி.
குடுமியான்மலை
Hotel image
சிற்பக்கலைகளுக்கு எடுத்துக்காட்டாக குடுமியான்மலை அமைந்துள்ளது. இங்குள்ள கோயிலில் மூலவர் சிகாநாதசாமி என்றும், அம்மன் அகிலாண்டேஸ்வரி என்றும் அழைக்கப்படுகின்றனர். மலையின் உச்சியில் முருகப் பெருமான் குடிகொண்டுள்ளார். கிழக்குப்பகுதியில் இந்தியாவின் வேறு எந்த இடத்திலும் இல்லாத, கர்நாடக சங்கீத ஸ்வரம் குறித்த கல்வெட்டுகளும், மேற்கு பகுதியில் 63 நாயன்மார்களின் சிற்பங்களும் செதுக்கப்பட்டுள்ளன. உள்மண்டபத்தில் உள்ள கல்தூண்களில் கலையழகுமிக்க சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. புதுக்கோட்டையிலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் குடுமியான்மலை உள்ளது. புதுக்கோட்டையில் இருந்து கார், வேனில் செல்லலாம். திறக்கும் நேரம்: காலை 7 - மாலை 4 மணி வரை.

திருமயம்
புதுக்கோட்டையில் இருந்து 19 கி.மீ தொலைவில் திருமயம் உளளது. இங்குள்ள கோட்டையில் சிவன் மற்றும் விஷ்ணு கோயில்கள் உள்ளன. இங்குள்ள கோட்டை தொண்டைமான் மன்னர்களின் ஆட்சியில் முக்கிய பங்கு வகித்தது. கி.பி. 1687ம் ஆண்டு 40 ஏக்கர் பரப்பளவில் சேதுபதி விஜயரகுநாத தேவரால் கட்டப்பட்டது. மலையின் மீது சிவன் கோயில் மற்றும் கல்வெட்டுகளை அவர் அமைத்தார். மலையின் அடிவாரத்தில் சிவன் மற்றும் விஷ்ணு கோயில்கள் அமைந்துள்ளன. இதில் விஷ்ணு கோயில் இயற்கையாக அமைந்ததாகும்.
வேந்தன்பட்டி
புதுக்கோட்டையில் இருந்து 40 கி.மீ தொலைவில் பொன்னமராவதி செல்லும் வழியில் இந்த டடம் உள்ளது. இங்குள் மீனாட்சி சொக்கேஸ்வரர் கோயிலில் உள்ள நெய் நந்தி அனைவராலும் அறியப்பட்டதாகும். இந்த நந்திக்கு சுத்தமான நெய்யால் அபிஷேகம் நடத்தப்படுகிறது.
விராலிமலை
Hotel image
புதுக்கோட்டையில் இருந்து 40 கி.மீ தொலைவிலும், திருச்சியில் இருந்து 30 கி.மீ தொலைவிலும் இந்த மலை அமைந்துள்ளது. மலை மீது 15ம் நூற்றாண்டை சேர்ந்த சுப்ரமணியர் கோயில் உள்ளது. இங்கு மயில்கள் சரணாலயம் ஒன்றும் உள்ளது. இந்த கோயிலில் உள்ள மூலவர் மயிலில் அமர்ந்திருப்பது போல உள்ளது.
 
Bookmark and Share