E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
மாவட்டம் » திருச்சி சிறப்பு
மற்ற மாவட்டங்கள் :
திருச்சி
திருச்சி மாவட்டம் முதல் பக்கம்
திருச்சி நகரின் சிறப்பு முதல் பக்கம்
ஹோட்டல்கள்
டிராவல்ஸ்
திருமண மண்டபங்கள்
திருமண தகவல் மையங்கள்
கல்வி நிறுவனங்கள்
மருத்துவமனை
சினிமா தியேட்டர்கள்
பிற தகவல்கள்
திருச்சி வரலாறு
திருச்சி வரலாறு

இந்தியாவில் உள்ள மாநிலங்களில் சுற்றுலா சிறப்பில் தமிழகம் தன்னிகரில்லா பெருமைகளை பெற்று விளங்குகிறது. இங்கு ஆயிரக்கணக்கில் எழுந்துள்ள கோயில்கள், உயர்ந்து நிற்கும் கம்பீரமான கோபுரங்கள், கலையெழில் கொஞ்சும் மண்டபங்கள், நீண்ட நெடும் பிரகாரங்கள், அழகுமிகு சிற்பங்கள், வண்ணமிகு திருவிழாக்கள் அனைத்தும் தமிழகத்தின் காலச்சார பெருமைகள்.
 
வரலாறு, மொழி, கலை, இலக்கியம், ஆன்மீகம், வேளாண்மை, பண்பாடு, பழமை, செழுமை, இயற்கை ஆகிய அனைத்து பெருமைகளையும் உடையது தமிழகம். இத்தகைய பெருமைமிகு தமிழகத்துக்கு பெருமை சேர்ப்பது மாநிலத்தில் மத்தியில் உள்ள திருச்சி ...

மேலும்...
திருச்சி
திருச்சி

திருச்சி சுற்றுலா

மலைகோட்டை கோயில்
Hotel image
திருச்சியின் மிக முக்கிய சுற்றுலா தலமாக மலைக்கோட்டை கோயில் விளங்குகிறது. மலை மீது ஏறி செல்லும் வழியில் தாயுமானசுவாமி கோயில் உள்ளது. இந்த கோயிலில் நூற்று கால் மண்டபம் உள்ளது. கோயிலின் விமானம் தங்கத்தால் வேயப்பட்டுள்ளது. மலைகோட்டையின் தெற்கு பக்கத்தில் பல்லவர்கள் காலத்தில் உருவாக்கப்பட்ட குகை கோயில்கள் உள்ளன.
ஸ்ரீரங்கநாதசுவாமி கோயில்
Hotel image
 புகழ் பெற்ற வைணவ தலமான ஸ்ரீரங்கம் ஸ்ரீ ரங்கநாதசுவாமி கோயில் திருச்சி நகரில் இருந்து 6 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

ஸ்ரீ ரங்கம் கோயில் விமானமானது திருப்பாற்கடலின்று தோன்றியது. இதை நெடுங்காலமாக பூசித்து வந்த பிரம்மதேவன் திருவரங்கநாதருக்கு நித்திய பூசை புரிந்து வரும்படிசூரியனை நியமித்தார். சூரிய குலத்தின் வழித்தோன்றலான இராமபிரான் அயோத்தியில் வழிபட்டு வருகிறார். தனது முடிசூட்டு விழாவினைக் காண வந்த விபீஷணனுக்கு தான் பூஜித்து வந்த இவ்விமானத்தை அளித்தார்.

அதை இலங்கைக்கு எடுத்து செல்லும் வழியில் விபீஷணன் காவிரி ஆற்றங்கரையில் வைத்து ஓய்வெடுத்து விட்டு திரும்ப எடுக்கும் போது தரையை விட்டு வரவில்லை. அது கண்டு கலங்கிய விபீஷணனை அப்பகுதி மன்னன் தர்மவர்மன் ஆறுதல் கூறினான். அரங்கநாதரும் காவிரிக்கரையிலேயே தங்கியிருக்க வேண்டும் என்பதே தமது விருப்பம் என்றார்.விபீஷணனைத் தேற்றும் பொருட்டு அவர் தாம் விபீஷணன் இருக்கும் தென்திசை இலங்கை நோக்கி பள்ளிகொண்டருள்வதாக உறுதி அளித்தார்.பின்னர் தர்மவர்ம சோழனும் இவ்விடத்தில் கோயில் கட்டி வழிபட்டான்.அக்கோயில் காலப்போக்கில் வெள்ளப்பெருக்கில் மண்ணில் மறைந்து போக தர்ம சோழ மரபில் வந்த கிள்ளி வளவன் இக்கோயில் சிறப்புற அமைத்து வழிபட்டதாக வரலாறு கூறுகிறது.

கோயிலின் வடக்கு பகுதி தென்னை மரங்களால் சூழப்பட்டுள்ளது. இந்த கோயில் காவிரி நதியின் நடுவே 2.5 சதுர கி.மீ பரப்பளவில் அமைந்துள்ளது. உலகின் பிரம்மாண்டமான கோயில்களில் இதுவும் ஒன்றாகும். கோயிலில் 7 சுற்று பிரகாரங்களும், 21 கோபுரங்களும் உள்ளன. இந்த கோயிலின் உயரமான கோபுரம் 1987ம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்டது. இதன் உயரம் 73 மீட்டர் ஆகும். மேலும் இந்த கோயிலின் ராஜகோபுரம் இந்தியாவிலேயே மிக பெரியதாகும். ஸ்ரீரங்கம், திருச்சி நகருடன் பாலம் மூலம் இணைக்கப்பட்டுள்ளது. ரங்கநாதர் சந்நதி மட்டுமல்லாமல் பல்வேறு கடவுள்களின் சந்நதிகளும் இந்த கோயிலில் உள்ளது.

முக்கிய திருவிழாக்கள்

வைகுண்ட ஏகாதசி - மார்கழி மாதம் அக்டோபர் மாதத்தின் இறுதியில் ஒரு தென்னை மரத்தின் அடித்தண்டினை அவ்விழாவுக்குரிய பந்தலின் முதற்கம்பாக நடுவதிலிருந்து தொடங்கும்.பகல்பத்து ராப்பத்து எனும் இத்திருவிழா நாட்கள் முழுவதிலும் சுவாமியின் திருமுன்னிலையில் நாலாயிரத்த திவ்ய பிரபந்தப் பாடல்கள் முழுவதும் ஓதவும் பாடவும் பெறும். பிரம்மாண்டமான இந்த திருவிழாவில் 5 லட்சம் பக்தர்கள் திரண்டு பெருமாளை வணங்குவர்

அதோடு இத்தலத்தில் நடக்கும் 3 பிரம்மோற்சவ விழாக்களிலும் (10 நாட்கள்) லட்சக் கணக்கான பக்தர்கள் திரள்வர்.

மாசி மாச தெப்பத்திருவிழா - 10 நாள் விழாவிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு கோயில் விழாக் கோலம் பூண்டிருக்கும்.

தவிர மாதந்தோறும் இக்கோயிலில் திருவிழாக்கள் நடந்த வண்ணம் இருக்கும். தமிழ் ஆங்கில வருட பிறப்பின் போதும் வாரத்தின் சனிக்கிழமைகளிலும் கோயிலில் பெருமளவு பக்தர்கள் வருகை இருக்கும்

தொலைபேசி - 0431-2432246
தாயுமானசுவாமி கோயில்
தாயுமான சுவாமி கோயில் மலைமீது ஏறும் வழியில் அமைந்துள்ளது.
இப்பகுதியில் வாழ்ந்த இரத்தினாவதி என்ற பெண்மணி தாயாகும் பேறு பெற்றாள். காவேரி ஆற்றின் அந்தப் பக்க கரையில் இருக்கும் தன் தாய்க்கு செய்தி சொல்லி விட்டு காத்திருக்கிறாள். ஆற்றில் வெள்ள பெருக்கு இருந்ததால் தாய் வர முடியவில்லை. பிரசவ வேதனை அதிகமாக இம்மலையில் இருக்கும் செவ்வந்திநாதனை வேண்டினாள்.ஈசனே தாய் வேடத்தில் அங்கு வந்து அவளுக்கு சுகப்பிரசவம் அடைய உதவினார்.நிஜ தாய் வந்த பின்பு இறைவனே வந்து பிரசவத்திற்கு உதவியது புரிந்தது.மட்டுவார் குழலம்மையுடன் இறைவன் அனைவருக்கும் காட்சி தந்தார். எனவே இறைவன் தாயுமானசுவாமி என அழைக்கப்படுகிறார்.

குடைவரைக்கோயில்
மலைப்பாறையாகத் தோற்றமளிக்கும் இத்தலத்தில் மலையை குடைந்து கீழ் நிலையில் குடைவரைக்கோயிலும் மலையைக் குடைந்து கீழ் நிலையில் குடைவரைக்கோயிலும் மேல்நிலையில் ஒரு குடைவரைக் கோயிலும் பழம்பெருமையுடன் அமைக்கப் பெற்றுள்ளன.அவைகளில் காணப்பெறும் கல்லெழுத்துக்கள், தமிழக வரலாற்றிற்கு உதவுகின்றன.
பிற கோயில்கள் :
வயலூர் சுப்பிரமணியர் கோயில், அன்பில் சத்தியவாகீஸ்வரர் கோயில், திருவல்லாரை விஷ்ணுகோயில், உறையூர் நாச்சியார் கோயில், உறையூர் வெக்காளி அம்மன் கோயில், குணசீலம் விஷ்ணுகோயில், திருப்பாட்டூர் பிரம்மா கோயில் ஆகியவை.

 
அருங்காட்சியகம்
திருச்சியில் ராணி மங்கம்மாள் அரண்மனையில் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. அருங்காட்சியகம் வெள்ளி கிழமை தவிர எல்லா நாட்களும் திறந்திருக்கும்.
குடைவரைக்கோயில் :
மலைப்பாறையாகத் தோற்றமளிக்கும் இத்தலத்தில் மலையை குடைந்து கீழ் நிலையில் குடைவரைக்கோயிலும் மலையைக் குடைந்து கீழ் நிலையில் குடைவரைக்கோயிலும் மேல்நிலையில் ஒரு குடைவரைக் கோயிலும் பழம்பெருமையுடன் அமைக்கப் பெற்றுள்ளன.அவைகளில் காணப் பெறும் கல்லெழுத்துக்கள், தமிழக வரலாற்றிற்கு உதவுகின்றன.
குணசீலம்:
திருச்சி, நாமக்கல் மெயின்ரோட்டில் 25 கிலோமீட்டரில் அமைந்துள்ள குணசீலத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீ பிரசன்ன வெங்கடேஷ பெருமாள் கோயில் மிகவும் புகழ்வாய்ந்தது. மனநோயாளிகளுக்கு இறைவழிபாடு மூலம் நிவர்த்தி செய்யும் பணியை கோயில் நிர்வாகம் பல ஆண்டுகளாக செய்து வருகிறது.

திருப்பட்டூர்:
திருச்சியிலிருந்து, சென்னை செல்லும் சாலையில் சிறுகனூரை அருகில் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் திருப்பட்டூர் ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. திருமணம் நாள் மற்றும் பிறந்தநாட்களில் இங்குள்ள பிரம்மாவுக்கு மஞ்சள்காப்பு அபிஷேகம் செய்வதன் மூலம் பக்தர்களின் தலையெழுத்து மாறுவதாக பழைமையான ஐதீகம் உண்டு.

உறையூர்:
திருச்சி மாநகரின் மையத்தில் அமைந்துள்ள வெக்காளியம்மன் ஆலயம் கூரையே இல்லாத கோயில் என்ற சிறப்பை பெற்றது. திருச்சிக்கு காவல்தெய்வமாக இக்கோயில் அம்மன் விளங்கியதாக வரலாறு உண்டு.

தொங்கு பாலம்:
திருச்சி மாவட்டம் மணப்பாறையிலிருந்து திண்டுக்கல் செல்லும் வழியில் 25வது கிலோமீட்டரில் உள்ள கீரனூர் கிராமத்தின் அருகில் அமைந்துள்ள ரயில்வே தொங்குபாலம், தென்னிந்தியாவின் முதல் தொங்குபாலமாக உள்ளது. மலைகளை குடைந்து அமைக்கப்பட்டது இதன் சிறப்பு அம்சமாகும். பாலத்துக்கு நடுவில் தண்ணீர் செல்லும் வசதியும், அதற்கு மேல் வாகனங்கள் செல்லும் வசதியும் கொண்ட மூன்றடுக்கு வடிவம் கொண்டது.

திருநெடுங்காலநாதர் கோயில்
திருநெடுங்காலநாதர் கோயில், பெல் நிறுவனத்தில் இருந்து 6 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இந்த கோயில் சோழர்களின் கட்டடகலைக்கு சிறந்த சான்றாகும். ஆழ்வார்களில் ஒருவரான திருஞானசம்பந்தர் பாடிய தலமாகும்.

மலைகோட்டை : இந்த மலை மூன்று உச்சிகள் கொண்டது.தாயுமானவர் திருக்கோயில், மட்டுவார் குழலம்மை திருக்கோயில், உச்சி விநாயகர் திருக்கோயில் என்ற 3 மலையுச்சிகளைக் கொண்டதால் முத்தலைமலை என்று பெயர் பெற்றது.

திருவானைக்காவல் ஜம்புகேஸ்வர கோயில்
Hotel image
சிவபெருமானின் சிறப்பான 5 பஞ்ச பூத தலங்களில் இது நீர் (அப்பு) தலம் ஆகும்.
வெண்நாவல் மரத்திற்கு கீழ் இருந்த லிங்கத்திற்கு தினந்தோறும் காவிரி ஆற்றிலிருந்து தண்ணீர் கொண்டு வந்து பூஜை செய்து வந்தது. மரத்தின் மீது இருந்து சிலந்தியும் சிவதொண்டு செய்ய விரும்பி தன் வாய் நூல் கொண்டு பெருமானுக்கு அழகிய பந்தலமைத்து குப்பைகள் விழாது அமைத்து காத்து வந்தது. இதை ஒருநாள் கண்டு விட்ட யானை கோபத்தால் கொண்டு சிலந்தி வலையை பிய்த்து எறிந்தது.இதைக் கண்ட சிலந்தி யானையின் துதிக்கை துவாரத்தின் வழியாகப் புகுந்து தலையின் உச்சியில் போய்க் கடித்தது.யானையும் இறந்தது.

துதிக்கையிலிருந்து வெளியே வர முடியாமல் சிலந்தியும் இறந்தது.சிவபெருமான் நாவல் மரத்தடியிலிருந்த சிவலிங்கத்திலிருந்து உமையொரு பாகனாக விடை மீதேறி வந்து யானையைச் சிவலோகம் சென்று தமது பூதகணத்தலைமையை ஏற்று வாழ வரமளித்தார்.பின்னர் சிலந்தியைச் சோழ மன்னனாகப் பிறக்கத் திருவருள் செய்தார்.அன்று தொட்டு நாவற்கா ஆனைக்கா எனப் பெயர் பெற வைத்தார்.
ஸ்ரீரங்கத்தில் இருந்து 2 கி.மீ. தொலைவில் இந்த கோயில் உள்ளது. கோயிலில் 5 பிரகாரங்களும் 7 கோபுரங்களும் உள்ளன. மழை காலத்தில் லிங்கம் தண்ணீரில் மூழ்கி விடும்.

சமயபுரம் மாரியம்மன் கோயில்
Hotel image
திருச்சி பஸ் நிலையத்தில் இருந்து 12 கி.மீ தொலைவில் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது.சக்தி ஸ்தலங்களில் தலை சிறந்து விளங்கும் தலம் சமயபுரம் மாரியம்மன் கோயில் ஆகும். படிப்படியாக வளர்ந்து கடந்த 15 ஆண்டுகளாக மிக பிரமாண்டமான அளவில் வளர்ச்சி பெற்றுள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து அதிக அளவில் பக்தர்கள் இங்கு வந்து தங்கள் பிரார்த்தனைகளை நிறைவேற்றிக் கொள்ள வருகின்றனர்.சமயத்தில் காப்பாள் சமயபுரத்தாள் என்ற முதுமொழிக்கேற்ப பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறாள் இங்கு வீற்றிருக்கும் அம்பாள்.
பக்தர்கள் தாங்கள் எங்கிருந்தாலும் எந்த நாட்டிலிருந்தாலும் அங்கிருந்தபடியே சமயபுரம் ஸ்ரீ மாரியம்மனை வேண்டிக்கொண்டால் அவர்களின் பிரார்த்தனைகளை நிறைவேற்றி தருபவள் சமயபுரம் மாரியம்மனே. நீண்ட நாள் அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இன்றும் இக்கோயில் வளாகத்திலேயே நோய் குணமாகும் வரை தங்கியிருந்து அம்மனின் அருளால் பூரண குணம் அடைந்து தங்கள் நேர்த்திகடனாக மாவிளக்கு வைத்து வழிபட்டு தங்களின் அன்பை அம்மனுக்கு தெரிவித்து பிரியாவிடை பெற்றச் செல்கின்றனர் முக்கிய விழாக்கள் : சித்திரைத்தேர் திருவிழா -ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதம் முதல் செவ்வாய் அன்று சித்திரைத்த தேரில் பவனி வந்து அம்மன் அருள்பாலிக்கிறார். அன்றைய தினம் மட்டும் 7 லட்சம் பக்தர்கள் திரள்வர். பூச்சொரிதல் - மாசிக் கடைசி ஞாயிறு 3 லட்சம் பக்தர்கள் திரள்வர். பஞ்சப்பிரகாரம் - வைகாசி 1 ந் தேதி 1 லட்சம் பக்தர்கள் திரள்வர்.

உச்சி பிள்ளையார் கோயில்
Hotel image
விபீஷ்ணன் இராமரிடம் பெற்று வந்த அரங்கநாதர் விக்ரகத்தை விநாயகரிடம் அந்தண சிறுவன் வடிவிலிருந்த விநாயகரிடம் கொடுத்ததும் அதை அவர் பூமியில் வைத்து விட்டு மலை உச்சிக்கு ஓடி வந்து உட்கார்ந்து கொண்டாராம்.

சிறிது இளைப்பாறிய பின்பு திரும்பிய விபீஷ்ணன் விக்ரகத்தை எடுத்துப் பார்த்து முடியாமற் போகவே கோபம் கொண்டு சிறுவனை தேடிப் பார்த்தும் கிடைக்காமற் போகவே விநாயகர் தலையில் ஓங்கி குட்டியதாகவும், அரங்கநாதன் திருவரங்கத்திலேயே தங்கி விட்டதாகவும் ஒரு கதை உண்டு.உச்சி விநாயகரின் தலையில் குட்டு விழுந்ததற்கான பள்ளம் இன்றும் உள்ளது வியப்புக்குரியது.

இந்த கோயில் 273 அடி உயரத்தில் 417 படிகட்டுகள் கொண்டதாக கோயில் உள்ளது.

கல்லணை
Hotel image
 காவிரியின் குறுக்கே உள்ள பழங்கால அணை கல்லணை ஆகும். முதலாம் நூற்றாண்டில் கரிகாலசோழனால் கட்டப்பட்டது. நகரின் நீர்பாசனத்திற்கு இந்த அணை மிகவும் உதவிகரமாக உள்ளது. திருச்சி நகரில் இருந்து 24 கி.மீ. தொலைவில் இந்த அணை உள்ளது.
முக்கொம்பு
Hotel image
 காவிரி நதி, காவிரி, கொள்ளிடம் என இரண்டாக பிரிகிறது. கிளை நதியாக கொள்ளிடம் பிரியும் இடத்தில் அமைந்துள்ள ஒரு பொழுதுபோக்கு இடம் முக்கொம்பு ஆகும். திருச்சி நகரில் இருந்து 18 கி.மீ. தொலைவில் இந்த இடம் உள்ளது.

புளியஞ்சோலை
Hotel image
திருச்சியில் இருந்து 72 கி.மீ. தொலைவில் உள்ள மிக பசுமையான, குளிர்ச்சியான வனப்பகுதி புளியஞ்சோலை ஆகும். இங்குள்ள இயற்கை காட்சிகள், மற்றும் அருவி சுற்றுலா பயணிகளை கவர்ந்திழுப்பனவாக அமைந்துள்ளது.

பச்சை மலை
Hotel image
திருச்சி நகரில் உள்ள சிறிய மலைப்பகுதி பச்சை மலை ஆகும். மிக குறைந்த உயரமே கொண்ட இந்த மலைப்பகுதியில் மரங்கள் அடர்ந்து காணப்படுகிறது. பிற மலைவாசஸ்தங்களை விட இதற்கு குறைந்த முக்கியத்துவமே உள்ளது.

சித்தன்ன வாசல்
Hotel image
திருச்சியில் இருந்து 58 கி.மீ தொலைவில் சித்தன்னவாசல் உள்ளது. இங்குள்ள குகைகளில் வரையப்பட்டுள்ள ஓவியங்கள் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். 9ம் நூற்றாண்டில் பாண்டியர்கள் காலத்தில் வரைப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த குகையில் விலங்குகள், பறவைகள், பூக்கள் போன்ற ஓவியங்கள் இடம் பெற்றுள்ளன. அர்த்தமண்டபத்தில் 7வது நூற்றாண்டில் வரையப்பட்ட மேற்கூரை ஓவியங்கள் உள்ளன.
நதிர்ஷா தர்கா
Hotel image
 திருச்சியில் உள்ள முஸ்லிம் மக்களின் முக்கிய வழிபாட்டு தலமாக இந்த தர்கா விளங்குகிறது. இந்த தர்கா 1000 ஆண்டுகள் பழமையானதாகும்.

கோளரங்கம்
Hotel image
திருச்சியில் இருந்து 5 கி.மீ தொலைவில் புதுக்கோட்டை சாலையில் அமைந்துள்ளது அண்ணா கோளரங்கம். கோளரங்கத்தல் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. தமிழில் காலை 10.30, பிற்பகல் 1.00, 3.30 மணிக்கு நடைபெறுகிறது. ஆங்கிலத்தில் காலை 11.45, பிற்பகல் 2.15, மாலை 4.45 மணிக்கு நடைபெறுகிறது. தொலைபேசி - 0431 - 2331921.
 
Bookmark and Share