அரியலூர் சுற்றுலா
வெள்ளோடு பறவைகள் சரணாலயம்
ஈரோட்டிலிருந்து 15 கிலோ மீட்டர் தூரத்தில் வெள்ளோடு பறவைகள் சரணாலயம்.
மெரினா கடற்கரை:
அழகான மெரினா கடற்கரையில் நடந்து கொண்டே வங்க கடலையும் அதில் மோதும் அலைகளையும் ரசிக்கலாம். இனிமையான கடற்காற்றை சுவாசிக்கலாம். உலகிலேயே 2வது நீண்ட கடற்கரையாக மெரினா கடற்கரை திகழ்கிறது. இந்த கடற்கரைப் பகுதியில் தமிழக முன்னாள் முதல்வர்களான அண்ணாதுரை மற்றும் எம்.ஜி.ஆரின் நினைவிடங்கள் அமைந்துள்ளன. மேலும் தமிழ் அறிஞர்கள், தியாகிகள் சிலைகள் இங்கு அமைந்துள்ளன. இந்த பகுதியில் உள்ள உழைப்பாளர் சிலை கலை நுணுக்கத்திற்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறது. இந்த கடற்கரைச் சாலையில் சென்னை பல்கலைக்கழகம், செனட் ஹவுஸ், சேப்பாக்கம் மாளிகை, அரசு கலைக் கல்லூரி, ஐஸ் ஹவுஸ் ஆகியவை அமைந்துள்ளன.
ஆண்டர்சன் தேவாலயம்:
ஸ்காட்லாந்திலிருந்து வந்த பாதிரியார்களில் ஒருவரான ஜான் ஆண்டர்சன், 1835ல் ஜான் ஆண்டர்சன் அசெம்பிளி பொது பள்ளியைத் துவக்கினார். இது பிற்காலத்தில் சென்னை கிறிஸ்துவ கல்லூரி மற்றும் பள்ளி எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு ஜார்ஜ் டவுன் பகுதிக்கு மாற்றப்பட்டது. இந்த பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்ட தேவாலயத்திற்கு ஆண்டர்சன் பெயர் சூட்டப்பட்டது.
திருவேங்கடமுடையான் கோயில் - தென்திருப்பதி
ஸ்ரீனிவாசப் பெருமாள் குடிகொண்டுள்ள இந்தக் கோயில் தென் திருப்பதி எனப் பெயர் பெற்றது. நாட்டுக்கோட்டை நகரத்தார்களால் 100 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்தக் கோயில் காரைக்குடிக்கு மிக அருகில் உள்ள அரியக் குடியில் அமைந்து உள்ளது.
|