திருப்பூர் குமரன் நினைவாலயம்:
விடுதலைப் போராட்ட வரலாற்றில் கொடிகாத்த குமரனின் பெயருக்குத் தனி முக்கியத்துவம் இருக்கிறது. அவரது நினைவைப் போற்றும் திருத்தலம் இது. திருப்பூர் குமரன் கொடிக்காக உயிர்த் தியாகம் செய்த நாள் ஜனவரி 11, 1932. அந்த மாமனிதருக்கு மரியாதை செய்வதற்காக ஏப்ரல் 7 1991 இல் இந்த நினைவாலயம் திறக்கப்பட்டது.
முதலைப்பண்ணை
ஒரு முதலையைப் கண்டாலே படை நடுங்கும். ஒரு பண்ணையையே பார்த்தால் எப்படித் தோன்றும்? அமராவதி அணைக்கட்டில் இருக்கிறது இந்த முதலைப் பண்ணை. உடுமலைப்பேட்டையிலிருந்து 25 கி.மீ. தொலைவிலுள்ள இந்தப் பகுதி மாவட்ட சுற்றுலா மையமாகவும் வளர்ந்து வருகிறது. இங்கு செல்ல உடுமலைப்பேட்டையிலிருந்து தனி பேருந்துகள் இயங்குகின்றன. அமராவதி முதலை பண்ணையில், குட்டி முதல் பெரிய அளவிலான முதலைகள் வரை தனித்தனியாக, வயது வாரியாக தொட்டிகளில் வளர்க்கப்படுகின்றன.