| GENERAL |
Open Page: (T.S.PRAKASAM,SINGAPORE,SINGAPORE)
|
Open page in Dinamalar was much useful to readers .we expect that the previoue stage in which many opinions of readers were found daily in Dinamalar. Expecting the good old days. T.S.PRAKASAM-Singapore
|
POST YOUR QUESTION |
COMINING BACK (A.M.A.HAKEEM,INDIA,NAGERCOIL)
|
Friends I have come back after a long break.Things to share with you: 1.I read a news about the demise of the great contributor to this column Mr.Venkataramani. 2.Political parties have started to extract cheap gains by their approach towards LTTE 3.Once Karunanidhi supported Arcot Veerasamys speech against judiciary by telling that he surprised who would bell the cat and Veerasamy did it.But now peole thought who would bell the cat to bring down DMK rule and the same Veerasamy is doing it now. 4.Now antinational elements are spreading communal violence to create terrorists from another community of the Indian nation 5.Viayakanth has increased gaining support from the public 6.Why sending telegram to Prime Minister,Karunanidhi can speak with him directly and wipe the tears of Lankan Tamils
|
GENERAL |
துரோகம் (G.GANDHI RAJA,INDIA,CHENNAI)
|
உலக மார்க்கெட்டில் கச்சா எண்ணெய் விலை வெகுவாக குறைந்து வருகிறது; கடந்த மாதம் 95 டாலரக இருந்த விலை இப்போது மேலும் குறைந்து பேரலுக்கு 86 டாலர் என்ற அளவில் இருக்கிறது. இது கடந்த ஜனவரியின் போது இருந்த விலையாகும். கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 147 டாலராக இருந்த போது, கடந்த ஜூன் மாதத்தில், மத்திய அரசு, பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் வாயு விலைகளை அபரிமிதமாக உயர்த்தியது.இதனால் அத்தியாவசியப் பொருட்கள் உட்பட அனைத்துப் பொருட்களின் விலைகளும் உயர்ந்தன. இப்போது கச்சா எண்ணெய் விலை 147 டாலரிலிருந்து 86 டாலராக அதாவது சுமார் 42% அளவுக்கு விலை குறைந்திருக்கிறது. ஆனால் மத்திய அரசு பெட்ரோல் டீசல் விலைகளை குறைக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது. பெட்ரோல் டீசல் விலைகள் உயர்த்தப்பட்ட போது, உலக மார்க்கெட்டில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து விட்டது; எனவே இந்தியாவிலும் விலைகளை உயர்த்துவதை தவிர வேறு வழி கிடையாது என்று வியாக்கியானம் செய்து மக்கள் தலையில் பெரும் சுமைகளை சுமத்திய அரசு, இப்போது உலக மார்க்கெட்டில் விலை பெருமளவு சரிந்த பின்னும், பெட்ரோல் டீசல் விலைகளை குறைக்காமல் வெறும் சால்ஜாப்புகளை மட்டும் கூறி விலைகளை குறைக்காமலிருப்பது, மக்களுக்கு செய்யும் பெரும் துரோகமாகும்.
|
GENERAL |
Regarding un authorised houses (venkat,india,chennai)
|
Hi Sir, In chennai, government will approve for two floors and builders will construct houses for three houses. We can see lots and lots of houses in guindy and surrounding area. Builders initially will construct 2 floors and they will sell the property and afterwards with out the residents knowledge they will try to construct houses in the top and sell the houses for good money. How government is going to restrict it? Its purely unsafe for the people and unknowingly many people were caught in this situation. Venkat
|
POLITICS |
Is India Secular? (Muralidharan,India,Coimbatore)
|
The majority peace loving Indians are always secular. Who fomented for the present troubles? The vote bank politics of political parties, support for terrorism from outside the country, religious fanatics in all religious groups. But is unfortunate on the part of the Prime Minister to say in Europe soil to condemn the attack on Christians. All are human beings and all should live together in India. But when in our own country Kashmiri Hindus are killed no political party or no country condemned. Whatever the problem, we should try to solve within ourselves and no other country should be allowed to comment on happenings in Indian soil
|
GENERAL |
can u change tamil numbers (gopinath l.pillai,ksa,jeddah)
|
sir, i am tamilian,i reading the news on website tamil but u use numbers tamil i can't read.thats why please u change numbers only english.
|
GENERAL |
எது தரம் தாழ்ந்தது..?
(SURYA,india,chennai)
|
தமிழகத்தில் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசியின் தரம் குறைந்திருக்கிறது என்று கூறுபவர்கள்தான் தரம் தாழ்ந்தவர்கள் என்று முதல்வர் கருணாநிதி பேசியிருக்கிறார்; கருணாநிதியின் இந்தப் பேச்சு அவர் வகிக்கும் முதல்வர் பதவிக்கு தகுதியானதல்ல. தமிழகத்தில் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசியின் தரம் மிகவும் மட்டமாகவும் சாப்பிடத் தகுதியற்றதாகவும்தான் இருக்கிறது; தமிழக மக்கள் யாரைக் கேட்டாலும் இதைத்தான் சொல்வார்கள்; ஆனால் கருணாநிதி இப்படிச் சொல்பவர்கள் தரம் தாழ்ந்தவர்கள் என்கிறார்; இதன்மூலம்,கருணாநிதி ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசியின் தரம் உயர்ந்தது என்று கூறுகிறார்; அப்படியானால், இனிமேல் கருணாநிதி தானும் தன் குடும்பத்தினர்களும், தி.மு.க.அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் உட்பட, தி.மு.க. கட்சி உறுப்பினர்கள் அனைவரும் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசியால் செய்ய்ப்பட்ட உணவையே சாப்பிட வேண்டும். செய்வார்களா..?
|
GENERAL |
பயங்கரவாதமும் புதிய சட்டமும்.
(G.GANDHI RAJA,INDIA,CHENNAI)
|
தலை நகர் தில்லியில் சமீபத்தில் நிகழ்ந்த தொடர்குண்டு வெடிப்புகளுக்குப் பிறகு முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், பயங்கரவாதத்தை எதிர்கொள்ள பொடா போன்ற புதிய சட்டம் தேவை என்று வலியுறுத்தினார்; நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசனைக் குழுத்தலைவர் எம்.கே. நாராயணன் அவர்களும் இதே கருத்தை கூறினார்; நிர்வாகச் சீர்திருத்தங்களுக்கான குழுவின் தலைவரும் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவருமான வீரப்ப மொய்லியும், பயங்கரவாதத்தை ஒழிக்க விஷேச சட்டம் இயற்றப்பட வேண்டும் என்றார். எல்லாவற்றுக்கும் மேலாக பிரதமர் மன்மோகன்சிங் அவர்களே ஆளுநர்கள் கூட்டத்தில் உரையாற்றும்போது, பொடா போன்றதோர் சட்டம் விரைவில் கொண்டுவரப்படும் என்றார். ஆனால், மத்திய அமைச்சரவை கூட்டத்தில் சில அமைச்சர்கள் பயங்கரவாதிகளை ஒடுக்க தனி சட்டம் இயற்றினால் வரும் தேர்தலில் காங்கிரசுக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்று கூறியதன் பேரில் புதிய சட்டம் இயற்றும் எண்ணத்தை ஐ.மு.கூ. அரசு கைவிட்டிருக்கிறது. பயங்கரவாதத்தை ஒடுக்குவதை விட ஐ.மு.கூ. அரசு ஓட்டு வங்கி அரசியலுக்கே முன்னுரிமை அளிக்கிறது என்பதை இச்சம்பவம் தெளிவாக எடுத்துக் காட்டுகிறது.பிரதமரே புதிய சட்டம் இயற்றப்படும் என்று அறிவித்த பின்பும், மக்களின் பாதுகாப்பை விட கட்சியின் அரசியல் ஆதாயம் பெரிதாக கருதப்பட்டு, பிரதமரையும் மிஞ்சிய மேலான ஒரு அரசியல் சக்தி புதிய சட்டம் இயற்றுவதை தடுத்து நிறுத்தியிருக்கிறது. இப்படிப்பட்டதோர் ஆட்சியின் கீழ் பயங்கரவாதம் ஒடுக்கப்படுமா..? மக்கள் பாதுகாப்பாய் வாழ முடியுமா..? இந்தியா பத்திரமாயிருக்குமா..? தேச நலனை விட தனது கட்சியின் நலனுக்கு முக்கியத்துவம் தரும் இப்படிப்பட்ட ஆட்சி நீடிப்பது நாட்டுக்கு நல்லதா..? நாம் எல்லோரும் சிந்திக்க வேண்டிய தருணம் இது.
|
GENERAL |
BOMB BLAST (Gandhiraj,India,Coimbatore)
|
IN ALL OVER THE WORLD MANY RELEGIONS ARE THERE... NO ONE CAN SAY DO THE TERRORISM... PLEASE STOP THAT NON-SENCE OR ALL OF THE PEOPLE ARE TO SAVE OUR COUNTRY...........
|
GENERAL |
Power Cut , Indian feelings,cost of petrol & Diesel (K.Karam Chandra Bose,Saudi Arabia,Al Baha)
|
Thiru.Suriya Chennai has clearly expressed his feelings about Power Cut. Everybody in TamilNadu feels the same thing but could not able to express.Mr.Suriya is very bold enough to express his opinion openly and it is the first and foremost duty of ' Dina Malar ' to bring to the notice of ruling Govt. Regarding the comments given by Mr.Gandhiraj, Chennai 'Feelings ' of an Indian ,I endorese the same , because of worst prevailing situation . Hats off Mr. Gandhi Raj and try to bring to the Public so that they will share your views.
|
GENERAL |
IS India Civilized? (selvaperia,USA,Kenmare)
|
Is india is a secular and democratic country? Is india apiring for peace? or marching towards unity, peace and secularism? The recent attacks on minority christians in Orisa and Magalore are outragious and uncivilized. The Hindus can build temples and shcools all over the world, and behave more stupidly toward christians in india. One think, christianity is like a banana tree. Cut one, and many braches will sprout out.
|
GENERAL |
Sports & Business (R.Ramesh,india,chennai)
|
Sports News good. but business news come in details late
|
POST YOUR QUESTION |
BOMB BLASTS: (T.S.PRAKASAM,SINGAPORE,SINGAPORE)
|
The INDIAN Govt. has not yet taken a stringent action against the terrorists who are putting bombs in crowded places in the major cities. The terrorists have wellknown that cases filed against them will take a long time and after getting judgement they prefer clemency from President of INDIA.Long live INDIAN judiciary. T.S.PRAKASAM-Singapore
|
GENERAL |
ஒரு இந்தியனின் ஆதங்கம் (G.GANDHI RAJA,INDIA,CHENNAI)
|
இந்தியா தவிர வேறு எந்த தேசத்திலும் இதுபோல் நடக்க வாய்ப்பில்லை; மாதத்திற்கொருமுறை மூன்று மாதத்திற்கொருமுறை என கால நிர்ணயம் செய்து கொண்டு , பயங்கரவாதிகள் தொடர் குண்டுவெடிப்புகளை நிகழச்செய்து அப்பாவிகளை கொன்று குவித்துக் கொண்டிருக்கிறார்கள். இஸ்லாம் உலக அமைதியை போதிக்கிறது என்று மதப்பெரியவர்கள் கூறுகிறார்கள்; ஆனால் பயங்கரவாதிகள் அதே மதத்தின் பெயரால் மும்பை, வாரணாசி, ஹைதரபாத், ஜெய்ப்பூர்,பெங்களூர், ஆமதாபாத் என ஒவ்வொரு நகரமாக இரத்த வெறி பிடித்து அலைந்து தொடர்குண்டு வெடிப்புகளின் மூலம் அப்பாவி இந்தியர்களை நூற்றுக்கணக்கில் கொன்று குவித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த பயங்கரவாதிகளின் வெறிசெயல் இந்த முறை தலைநகர் டில்லியில் நிகழ்ந்திருக்கிறது.சுமார் 30 ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் தங்களின் இன்னுயிரை இழந்திருக்கிறார்கள். என்ன பாவம் செய்தார்கள் இவர்கள்...? இந்தியாவில் பிறந்ததுதான் இவர்கள் செய்த பாவமா..? மதத்தின் பெயரால் மக்களை வேட்டையாடும் இந்த பயங்கரவாதிகளை ஒழிக்க அரசு என்ன நடவடிக்கை எடுக்கிறது..? இந்தியர்களின் உயிர்களை பாதுகாக்க அரசு என்ன செய்திருக்கிறது..? அறிக்கைகள் மட்டும் தான் தவறாது வெளியிடப்படுகின்றன; ஒவ்வொரு குண்டு வெடிப்புகளுக்குப் பிறகும் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரிடமிருந்து மக்கள் அமைதி காக்க வேண்டும் என்ற ஒரு அறிக்கையும், குண்டு வெடிப்பில் இறந்தவர்களுக்கான இரங்கல் அறிக்கையும் வெளிவருகிறது. இதைத்தவிர அவர்கள் வேறு எதுவும் செய்வதில்லை. பயங்கரவாதத்தை ஒழிக்க இந்த அறிக்கைகள் போதுமா..? தங்கள் உயிர்களை பாதுகாத்துக் கொள்ள சிறப்புக் கமாண்டோக்களையும் குண்டு துளைக்காத விஷேச கார்களையும் பயன்படுத்திக் கொள்ளும் இவர்கள் மக்களின் உயிர்களை பாதுகாக்க என்ன நடவடிக்கை மேற்கொண்டிருக்கிறார்கள்..? எந்த நேரத்திலும் இந்தியாவின் எந்த மாநிலத்திலும் பயங்கரவாதச் செயல்களை நிகழ்த்திக் காட்டும் ஆற்றல் எங்களுக்குண்டு என்று ஈ.மெயில்களின் மூலம் சவால் விடுகிறார்கள் பயங்கரவாதிகள்; அவர்களை அழித்து மக்களை காப்பாற்ற வேண்டிய அரசு தங்களது கடமையை சரியாகச் செய்கிறதா..? கோழி கூட தன் குஞ்சை கவ்வ வரும் பருந்திடமிருந்து குஞ்சைக் காப்பாற்ற பறந்து சண்டையிடும். இந்த தேசத்தின் இறையாண்மையை அழிக்க நினைக்கும் பயங்கரவாதிகளை அழிக்க அரசு என்ன கடும் நடவடிக்கைகளை எடுத்திருக்கிறது..? மக்களை அமைதி காக்கச் சொல்லும் அரசு, அந்த மக்களை அழிக்கவும் தேசத்தை சீர்குலைக்கவும் முயலும் தேசவிரோத சக்திகளை ஒழிக்க முற்படாமல் தானும் அமைதி காத்தால் என்ன அர்த்தம்..? பயங்கரவாதிகளை ஒடுக்க தகுந்த சட்டங்கள் இல்லை; எந்த மாநில அரசாவது அதற்காக விஷேச சட்டங்களை இயற்றினால் அதற்கும் அனுமதி அளிப்பதில்லை; பயங்கரவாதிகள் மீது கடும் நடவடிக்கைகள் மேற்கொண்டால், முஸ்லீம்கள் தங்கள் கட்சிக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்ற அச்சம் கொண்டு அவர்கள் மீது, இருக்கிற சட்டத்தை பயன்படுத்தியும் கடும் நடவடிக்கைகள் மேற்கொள்வதில்லை; இவற்றையெல்லாம் மீறி ஏதேனும் ஒரு பயங்கரவாதியை நீதிமன்றம் தண்டித்தாலும் அரசு அத்தண்டணையை நிறைவேற்றுவதில்லை.இப்படிப்பட்டதோர் சூழ்நிலையில் பயங்கரவாதிகள் அச்சம் சிறிதுமின்றி மேலும் மேலும் குண்டு வெடிப்புகளை நிகழ்த்திக்கொண்டிருக்கிறார்கள்; ஆனால் அரசு அறிக்கைப் போர் நடத்திக்கொண்டிருக்கிறது. பயங்கரவாதிகளின் குண்டு வெடிப்புகளினால் சிதறிச் சின்னாபின்னமாகி உயிரற்றுக்கிடக்கும் சடலங்களையையும், இரத்த வெள்ளத்தில் மூழ்கிக் கிடக்கும் காயமுற்றவர்களையும், கதறி அழும் அவர்களது உறவினர்களையும் அடிக்கடி தொலைக்காட்சிகளில் காணும் என் பக்கத்து வீட்டு சிறுவன் ஏன் அங்கிள்..அடிக்கடி இப்படி நடக்கிறது..? இப்படிச் செய்பவர்களை யாரும் எதுவும் செய்யமாட்டார்களா..? என்னிடம் துப்பாக்கி இருந்தால் இப்படி குண்டு வைப்பவர்களையெல்லாம் சுட்டுப் பொசுக்கிடுவேன் என்று சீறினான். அவனுக்கு நான் எந்த பதிலும் கூறவில்லை. ஆனால் என்னுள்ளே இந்தக் கேள்விகள் ஓயாமல் ஒலித்துக் கொண்லேயிருக்கின்றன. என்றைக்கு இந்த பயங்கரவாதம் வேரோடும் வேரடி மண்ணோடும் ஒழிக்கப்படும்..? என்று என் தேசம் மக்களின் பாதுகாப்பான வாழ்க்கைக்கு தகுதியுடையதாக மாறும்..? ஒரு இந்தியனாகிய என் கேள்விகளுக்கு பதில் யார் தருவார்கள்..? பயங்கரவாதத்திற்கெதிராக மென்மையான அணுகுமுறையை கடைப்பிடிக்கும் இந்த அரசு என்று அகற்றப்படுகிறதோ அன்றுதான் பயங்கரவாதத்தை ஒழிக்க வழி ஏற்படும் என்று சற்று தோலைவில் நடைபெற்றுக் கொண்டிருந்த பொதுக்கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்த ஒரு பேச்சாளரின் உரை என் காதுகளில் வந்து விழுந்தது. ஒரு வேளை அந்தப் பேச்சாளரின் கூற்றுதான் சரியானதாயிருக்குமோ.. சிந்திக்க வேண்டிய விஷயம் இது.
|
GENERAL |
about DINAMALAR (K.Karam Chandra Bose,Saudi Arabia,Al Baha)
|
VERY GOOD
|
GENERAL |
1Kg rice for one rupee (M.Devan,India,Tirunelveli)
|
TODAY I SAW IN THE NEWS PAPER 'WHERE IS THE PRICE HIKE' AND THE PRICE LIST SOLD IN THE PDS SHOPS. I AGREE ..BUT WOULD NOT GET MOST OF THE ITEMS ESPECIALLY WHEAT AND WHEAT MAVU, OIL. REGARDING 1RUPEE RICE YOU WOULD NOT GET THAT WILL GO TO BLACK MARKET.
|
GENERAL |
Power cut (R.Subramanian,India,Salem)
|
For the past few days, not much power cut is experienced. Any political conference is in the offing in the State to be organised by the ruling party yo ensure against public anger and the opposition?
|
POLITICS |
Austerity (R.Subramanian,India,Salem)
|
A whopping amount of Rs.15 croreshas been spent by AP Government and the Congress party on transportation alone for the meeting addressed by AICC president Sonia in Tirupathi and Ananthapur on Thursday.The Tirumala pilgrims were left high and dry.following diversion of buses at several places at Tirupathi.The Congress has publicly admitted that the Government spent Rs. 9 crores on hiring buses for the Tirupati meeting alone and has justified the expenditure.Apart from hiring close to 1750 APSTC buses 4000 private buses , lorries, mini vans were pressed into service to bring people which cost Rs. 4 crores, it is reported. People throughout the country are happy at these events as the Congress President will not be given similar privileges in Italy or by that Government.When DMK can conduct big meetings even during the severe power cut , why not Congress? After all, both are UPA allies. An austerity measure with a diference! UPA will come back with thumbing majority along with DMK in the next elections.Communists will regret for their mistake for leaving the alliance. So is PMK.
|
GENERAL |
Cutouts (M.Devan,India,Tirunelveli)
|
Due to Kalaigar arivalam inaguraion by the HON.Chief Minister in Trichy, the pedastrines are suffering a lot. Already shopkeepers accupied the pedastraines path by extending their shops now party workers accupied by putting their leader cutouts for the inagural function. So padestranes are suffering to walk in the road and they are also running along with the vehicles and facing lot of accidents. who care these people and the politicians wants to show their sincerity to their leaders by putting cutouts and arches by blocking the roads, One side Government says power and not for the shortage and this is only to the public and not for the ruling party men.
|
GENERAL |
பெட்ரோல் டீசல் விலை (G.GANDHI RAJA,INDIA,CHENNAI)
|
உலக மார்க்கெட்டில் கச்சா எண்ணெயின் விலை பீப்பாய்க்கு 147 டாலராக இருந்தபோது மத்திய அரசு பெட்ரோலுக்கு லிட்டருக்கு ரூ 5, டீசலுக்கு லிட்டருக்கு ரூ 3, சமையல் வாயுவுக்கு சிலிண்டருக்கு ரூ 50 என அதிகபட்சமாக விலையை உயர்த்தியது. இப்போது உலக மார்க்கெட்டில் கச்சா எண்ணெயின் விலை பெரும் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது; கடந்த வாரங்களில், 108 டாலராக இருந்த ஒரு பீப்பாய் எண்ணெய் விலை இப்போது 100 டாலருக்கும் கீழாக இறங்கிவிட்டது; அதாவது சுமார் 32% அளவுக்கு விலை குறைந்திருக்கிறது. உலக மார்க்கெட்டில் எண்ணெய் விலை உயரும்போதெல்லாம் உடனுக்குடன் விலைகளை உயர்த்தி மக்கள் தலையில் சுமையை ஏற்றும் அரசு, விலை குறையும்போது, பெட்ரோல், டீசல் விலைகளை குறைக்காமல் ஏதோதோ சாக்குப்போக்கு சொல்லி காலம் தாழ்த்திவருகிறது. அரசின் இப்போக்கு வன்மையான கன்டனத்திற்குரியது. மேலும், உலக மார்க்கெட்டில் எண்ணெய் விலை குறைந்திருக்கும் இக்கால கட்டத்தில் கூட, நாட்டின் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், தமிழகத்தில் மட்டும் அடிக்கடி டீசல் பற்றாக்குறையும் ஏற்படுகிறது. ஏற்கனவே, அனைத்துப் பொருட்களின் விலைகளும் ராக்கெட் வேகத்தில் ஏறிக்கொண்டிருப்பதால், சாதாரண மக்கள் பெரும் துன்பத்திற்குள்ளாகியிருக்கின்றனர். இந்நிலையில் அடிக்கடி ஏற்படும் டீசல் பற்றாக்குறை, காய்கறிகள் உட்பட அத்யாவசியப் பொருட்களின் விலைகளை மேலும் உயர்த்துகின்றது.எனவே பெட்ரோல் டீசல் விலையை உடனே குறைப்பதோடு, தமிழகத்தில் அடிக்கடி ஏற்படும் டீசல் தட்டுப்பாட்டை நீக்கவும் மத்திய மாநில அரசுகள் தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
|
GENERAL |
Un hygienic living conditions (chandramoul,India,Chennai)
|
The cooum river flows near Poonamalee High Road and 100 ft road junction is stagnated for nearly 3 years and no body takes care to desilt it. The delay in desilting resulted in lot of mosquito menace and basic right of living in hygienic conditions is at stake. It is a welcome gesture to construct the flyover in the junction. But mere construction of flyovers in the city does not improve the living conditions of the public.
|
GENERAL |
about nuclear deal and hope of getting electricity (sankaranarayanan,india,mumbai)
|
The total contribution of Nuclear energy by NPCIL is around 2-4% only. They now depend on imported uranium since the indegenous supply was miscalculated and is inadequate.Even after the nuclear deal to construct nuclear reactors huge investment and time is necessary... so it is long time to go to get a solution for our quest for energy security in this country.. do not get overtly euphoric about nuclear deal.it is in the right direction but as usual inadequate to our needs.let us evaluate properly what we will get and never get swayed by unscruplous politicians. Non conventional energy sources are going to play a major role in our energy quest and that does not interest politicians because kick backs are not that high and attractive as compared to rather what dangerous nuclear energy lobby offers
|
GENERAL |
இப்பழக்கத்தை நிறுத்த மனம் வரவில்லையே!
(Girijamanaalan (R.Nanadagopal),India,Tiruchirappalli)
|
விநாயகர் உருவத்தை பூசை செய்து வழிபட்ட பின்னர், அவற்றை ஏதாவது கோவில்களில் கொண்டுபோய் வைத்துவிடுவதே அறிவார்ந்த செயல். அதை விட்டுவிட்டு, ஆயிரக்கணக்கில் செலவு செய்து, ஊர்வலம் நடத்தி, கடலுக்குக் கொண்டுபோய் கரைப்பதை நிறுத்தினால் என்ன? வேற்று மதத்தினர் கலவரம் செய்வார்கள் என்னும் எதிர்பார்ப்புடன் தான் இந்த ஊர்வலங்கள் நடக்கின்றன. காவல் துறைக்கும் இது அதிக சிரமத்தைத்தரும் பணியாகும். வட நாட்டிலிருந்த இப்பழக்கம் தமிழ்நாட்டையும் தொற்றிக்கொண்ட திலிருந்து...பல அரசுத்துறைகளும், காவல்துறையும் அடைந்துவரும் இன்னல்கள் அதிகமாகி வருவதைக் கண்டும், இப்பழக்கத்தை நிறுத்த மனம் வரவில்லையே! - கிரிஜா மணாளன், திருச்சி.
|
GENERAL |
POWER CUT (AYYAPPAN,KUWAIT,ABU HALIFA)
|
NOW A DAYS TAMIL NADU GOVT FACING BIG ISSUE , I CANT UNDERSTAND HOW THIS SHORTAGE CAME SUDDENLY , UPTO LAST WE DIDNT FACE , IF ANYBODIES KNOW THE ANSWER PLEASE BRIEF ME BY AYYAPPAN
|
GENERAL |
BUSFARE FROM THIRUMANGALAM TO MADURAI PERIYAR BUS STAND (jeyabalan,india,madurai)
|
FROM 01.09.08, THE TNSTC BUS CORPORATION HAVE BEEN INCREASED THE STOPPINGS FROM THIRUMANGALAM TO PERIYAR BUSSTAND IN AIRBUSES RUNNING FROM THIRUMANGALAM. BUT THE COST OF BUS FARE IS RS.11.00 FOR PERIYAR BUS STAND. AT THAT TIME THE LOCAL BUS BUS FARE IS RS.5.00. KINDLY LOOK INTO THIS MATTER PLEASE.
|
GENERAL |
Donation of eyes (R.Subramanian,India,Salem)
|
It is reported that the Yeddyurappa ministry having, without exception, signed individual pledges of eye donation after their depature from this life. It almost did not get any publicity than it deserves. Why?May be the media would have thought that the donors of 'communal eyes' do not deserve unlike th donors of 'secular eyes'.What better attitude can be expected from our media especially our English newspapers and TV channels leave alone the Tamil media for whom they have diferent priorities in reporting.The Government and the ministers deserve praise.
|
GENERAL |
Ration Card Delay is irrational! (Sanjeevi Joseph,India,Chennai)
|
I came from abroad in March and when I wanted to apply for a gas connection they said Imust have a ration card. I applied on 28 th April and till date I am put to lot of diffciulties not being able to get one. They keep saying 'under print'. Does it take to print this card 6 months in this country? Where will I go and to whom is it worth complaining? I do not have a gas cylinder. When will this government ever make life menaingful? I know people can get this card if they are connected to the right people. I am not and so it is my lot.
|
GENERAL |
மின்வெட்டின் கொடுமை
(SURYA,india,chennai)
|
சென்னையில் 1 1/2 மணி நேர மின்வெட்டு , சென்னை புறநகர் பகுதிகளில் 3 மணி நேர மின்வெட்டு, மற்ற பகுதிகளில் 5 மணி நேர மின்வெட்டு என அரசு அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது; ஆனால் உண்மையில் பல இடங்களில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த கால அளவை விட அதிக நேரம் மின்வெட்டு செய்யப்படுகிறது; இரவு நேர மின்வெட்டு என்பது மக்களை மிகவும் துன்பத்திற்குள்ளாக்குகிறது.விவசாயிகள், தொழிலாளிகள், வியாபாரிகள், மாணவர்கள், சிறுதொழில் செய்பவர்கள், பெண்கள் என சமுதாயத்தின் அனைத்து பிரிவு மக்களும் இந்த மின்வெட்டால் கடும் பாதிப்படைந்துள்ளனர்; தொழில் வளர்ச்சியும், விவசாயமும் பாதிக்கப்பட்டிருப்பதனால், மாநிலத்தின் வளர்ச்சி முடங்கிப்போயிருக்கிறது. மின்வெட்டு போதாதென்று டீசல் பற்றாக்குறையும் நிலவுவதால், ஜெனரேட்டரையும் பயன்படுத்த முடியாமல் சிறுதொழில்கள் மூடப்படுகின்றன; இதனால், ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்திருக்கின்றனர். கட ந்த ஆட்சியில் மின்னுற்பத்தியை பெருக்க புதிய திட்டங்கள் ஏதும் செயல்படுத்தப்படாமையால்தான் இப்போது மின்வெட்டு ஏற்பட்டிருக்கிறது என்று தி.மு.க.அரசு கூறுகிறது.ஆனால் உண்மை என்ன..? கடந்த அ.தி.மு.க.ஆட்சியின் போது தமிழகத்தில் மின்வெட்டு ஏதுமில்லை. தமிழகத்தில் இப்போதுள்ள அனைத்து வகையான மின்னுற்பத்தி நிலையங்களும் தங்கள் முழுத்திறன் மின்னுற்பத்தியை வழங்கமுடியாததே இப்போதுள்ள மின்வெட்டுக்கு பிரதான காரணம்.மேலும், தி.மு.க.ஆட்சிக்கு வந்து ஏறத்தாழ 28 மாதங்களாகின்றன. ஆட்சிக்கு வந்தவுடனேயே மாநிலத்தின் மின் நிலைமையை கவனித்து புதிய மின்திட்டங்களை துவக்கியிருந்தால் இப்போது மின்தட்டுப்பாடு ஏதும் ஏற்பட்டிருக்காது. ஆனால், தமிழக அரசு ஆட்சிக்கு வந்தவுடன் மக்களை ஏமாற்றுவதற்காக இலவசத்திட்டங்களை அறிவிப்பதில்தான் துடிப்பக இருந்ததே தவிர தமிழகத்தின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த எவ்வித முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை. இந்நிலையில் மின்வெட்டிற்கு முந்தைய ஆட்சியை குறை கூறுவதில் என்ன பயனிருக்கிறது..? இது தி.மு.க.ஆட்சியின் நிர்வாகத் திறமையின்மையின் வெளிப்பாடே.ஒளிமயமான தமிழகம் இப்போது இருள்மயமாகிவிட்டது.
|
POST YOUR QUESTION |
payment of electricity charges (m.ravi,india,madurai)
|
though there is five hours power cut, if you dont pay the electric bill, it is 24 hours. payment of electricity bill is an ordeal as far as customers are concerned. though the computer does the work, the operator with pawn in his mouth, does not know the functions and he or she is not able to dispose the customer quickly. My friend has a problem. He is working in bangalore but have a house in madurai and in the absence of finding a tenant, he is finding it diffcult to pay the bill which is normal amount. is there any way by money order, cheque or draft can anyone pay the electricity bill for a locked house, if so will it be credited to his account.
|
GENERAL |
where to send pictures? (veeraswamiv,india,chennai)
|
i come to visit USA often and always wanted to send some pictures for posting in your esteemd paper.I shall thank you to provide me with Email address to which i have to send photos taken/ articles regarding some thing important, to be published. I am a permanent resident of Chennai
|
GENERAL |
விலை உயர்வு (SURYA,india,chennai)
|
அத்யாவசியப் பொருட்கள் உட்பட அனைத்து பொருட்களின் விலைகளும் ராக்கெட் வேகத்தில் ஏறிக்கொண்டிருக்கும் போது டாஸ்மாக் மதுபானங்கள் மட்டும் விலை ஏறாமல் பார்த்துக் கொள்ளப்படுகிறதே... அது ஏன் ...? அது எப்படி...?
|
POLITICS |
அரிசி
(SURYA,india,chennai)
|
தமிழகம் இதுவரை காணாத வகையில் 5 முதல் 7 மணி நேர மின்வெட்டு, மின்வெட்டால் வேலை இழந்திருக்கும் லட்சக்கணக்கான தொழலாளர்கள், தொழில் மற்றும் விவசாய வளர்ச்சி பாதிப்பு, கிடுகிடுவென்று ஏறிக்கொண்டிருக்கும் அனைத்துப் பொருட்களின் விலைகள், அபரிமிதமான பணவீக்கம்,விலைகளை அதிக அளவில் ஏற்றிய பின்னும் ஏற்பட்டிருக்கும் டீசல் மற்றும் சமையல் வாயு தட்டுப்பாடு, தமிழக அமைச்சர்கள் பலர் கொலை மிரட்டல், ஆட்கடத்தல், தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த அரசு ஊழியர்களை சாதிப் பெயரை சொல்லி திட்டுதல் போன்ற பல்வேறு கிரிமினல் குற்றச்சாட்டுக்குள்ளாகியிருத்தல்,அரசிலும் கட்சியிலும் முதல்வர் கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்களின் ஆதிக்கம், குடும்ப உறுப்பினர்களிடையே ஏற்பட்டிருக்கும் பதவிச்சண்டை,எங்கு பார்த்தாலும் கொலை கொள்ளை, சட்டம் ஒழுங்கு கடும் சீரழிவு, அனைத்து அரசுப் பணி டெண்டர்களிலும் 30%வரை கமிஷன் வாங்கி மக்கள் வரிப்பணத்தை கொள்ளையடிக்கும் ஆளும்கட்சி உடன்பிறப்புகள்,தமிழகத்தில் திரும்பிய பக்கமெங்கும் ஆறுபோல் பெருகியோடும் மதுபானம்,ஒவ்வொரு கட்சியாக தி.மு.க. கூட்டணியை விட்டு வெளியேறுதல் இப்படி பல்வேறு காரணங்களால் அனைத்து தரப்பு மக்களின் கடும்கோபத்திற்கு ஆளாகியிருக்கும் தி.மு.க.அரசு, கோபமுற்ற மக்களின் கவனத்தை திசை திருப்ப அவர்கள் கையில் கொடுத்திருக்கும் லாலிபப்தான் 1 ரூபாய்க்கு 1 கிலோ அரிசி.
|
GENERAL |
வினாயக சதுர்த்தி (G.GANDHI RAJA,INDIA,CHENNAI)
|
அனைவருக்கும் வினாயக சதுர்த்தி தின நல்வாழ்த்துகள்
|
GENERAL |
net cheating (moorthy,india,coimbatore)
|
some web sites like indiadatingclub.com are cheating the online customers. How to prevent this type of cheating ? Where to give complaint ?
|
POST YOUR QUESTION |
rajni and kamal (moorthy,india,coimbatore)
|
is guest role necessary for the actors like rajni and kamal ?
|
POST YOUR QUESTION |
POWER CUT/DIESAL SHORTAGE (T.S.PRAKASAM,SINGAPORE,SINGAPORE)
|
WHEN THERE IS INCREASED REQUIREMENT OF 500 MEGA WATT, THE TN GOVT. OUGHT TO HAVE STARTED NEW POWER PRODUCTION SOURCES. BUT THEY HAVE CONCENTRATED ONLY ON( VOTE CATCHING )FREE SUPPLIES TO VOTERS. IT IS INFORMED THAT THERE IS POWER CUT & DIESAL SHORTAGE ONLY IN TAMILNADU. OPEN PAGE READERS, PL CLARIFY THE MATTER SINCE I HAVE LEFT INDIA ON 30TH AUGUST. T.S.PRAKASAM-SINGAPORE
|
POST YOUR QUESTION |
Good bye (T.R.Pattabiraman,India,Tiruvallur)
|
Thank you Mr.R.T.Murugesan.Erode. It seems that the open page has lost its charms.After a gap of 10days I had a look at the page and found that there are only few views. Even though I have voiced my views on several important issues. there are no response from the persons concerned and also from the authorities.Having put up nearly 300 comments in this page during the last 4 months enthusiatically ,now I find that it is a waste of time and from today onwards I also say goodbye to openpage.
|
POLITICS |
Mayavathi as PM ? (N KRISHNASWAMY,India,coimbatore)
|
It is unfortunate that the left parties who have been championing plight of the downtrodden,have started to focus their attention on Mayavathi who has remitted the maximum income tax .
|
POLITICS |
தமிழகம்
(SURYA,india,chennai)
|
தமிழகம் இருளில் மூழ்கித் தவித்துக் கொண்டிருக்கிறது; பகல் நேர மின்வெட்டு போக இப்போது இரவிலும் மின்வெட்டு செய்யப்படுகிறது. இதுமட்டுமின்றி டீசலும் கிடைப்பதில்லை. இப்போதுதான் டீசல் பெட்ரோல் விலைகள் உயர்த்தப்பட்டன. விலை உயர்ந்ததோடு மட்டுமின்றி டீசல் கிடைப்பதிலும் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. இதனால், விவசாயமும் தொழிலும் பாதிக்கப்பட்டிருப்பதோடு, சமுதாயத்தின் அனைத்து பிரிவு மக்களும் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அனைத்துப் பொருட்களின் விலைகளும் இறக்கை கட்டி பறந்து கொண்டிருக்கின்றன. எங்கு பார்த்தாலும் கொலை, கொள்லை; சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது; அமைச்சர்களே அராஜகங்களில் ஈடுபடுகின்றன்ர்; என்.கே.கே.பி. ராஜா, சுரேஷ் ராஜன், தா.மோ.அன்பரசன், வீரபாண்டி ஆறுமுகம், கீதா ஜீவன், எ.வ.வேலு, கே.பி.பி.சாமி என பெரும்பாலான அமைச்சர்கள் மீது கடுமையான கிரிமினல் குற்றச்சாட்டுகள் பதிவாகியுள்ளன; ஆள் கடத்தல், கட்டப் பஞ்சாயத்து செய்தல்,மக்களுக்கு உரிமையான நிலங்களை கொள்ளையடித்தல், பொதுமக்களுக்கு கொலைமிரட்டல் விடுத்தல், ரேஷன் அரிசி கடத்துதல், தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த அரசு ஊழியரை சாதி பெயரை சொல்லி திட்டுதல், மிரட்டுதல், கொலைக்குற்றச்சாட்டுக்கு ஆளானவர்க்கு அடைக்கலமளித்தல் உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு இந்த அமைச்சர்கள் ஆளாகியிருக்கிறார்கள். முதல்வர் கருணாநிதிக்கோ அழகிரி ஸ்டாலின் சண்டையை தீர்த்து வைக்கவே நேரம் சரியாயிருக்கிறது.அதற்கு மேலும் ஏதேனும் நேரம் கிடைத்தால், சினிமா பார்க்க போய்விடுகிறார்; தன்னுடைய பாராட்டு விழாக்களில் கலந்து கொள்கிறார்; கதை வசனம் எழுதுகிறார்; தனது ஆட்சியை விமர்சிக்கும் தலைவர்களை ஆபாசமாகவும் சாதிப் பெயரை சொல்லியும் வசவுக்கவிதைகளை எழுதுகிறார்.பா.ம.க. தி.மு.க. கூட்டணியை விட்டு போய்விட்டது; இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் பாராளுமன்றத் தேர்தலில் தி.மு.க.வுடன் கூட்டணி இல்லை என்று அறிவித்துவிட்டன.அனைத்து பிரிவு மக்களும் திமுக அரசு மீது கடும் அதிருப்தியிலிருக்கிறார்கள்.எப்போது இந்த ஆட்சி மாறும் என்பதே தமிழக மக்களின் இப்போதைய எதிர்பார்ப்பு; எப்போது அந்த நல்ல நாள் வரும்...?
|
POST YOUR QUESTION |
Hardware (Kishore,India,Madurai)
|
My DVD drive is not reading DVD, its reading only CD, what can i do so for...?
|
POST YOUR QUESTION |
Computer (Kishore,India,Madurai)
|
How to create desktop icon for shutdown.
|
GENERAL |
HARI PUTTAR (RAJARAM. K I.R.S (Retd ),India,Tirunelveli 627011)
|
Warner had filed a suit under intelluctual property act,against a Punjabi producer who is going to release shortly a film titled HARI PUTTAR. Case was filed because it resembles HARRY POTTER. I think its beyond comprehension and the future of IP is clear when may be all our names might be asked to be changed.what are we going to do?
|
GENERAL |
பிரிவினைவாதம் (G.GANDHI RAJA,INDIA,CHENNAI)
|
காஷ்மீர் பகுதியில் மத அடிப்படையிலான பிரிவினைவாதம் வலுத்து வருகிறது; ஹூரியத் மாநாடு என்ற பிரிவினைவாத அமைப்பின் தலைவர்கள் நாங்கள் பாகிஸ்தானிகள் என்று வெளிப்படையாக கூறிகொள்கிறார்கள்; இந்நிலையில் அவர்களுடன் இந்திய அரசு எவ்விதமான பேச்சுவார்த்தைகளையும் மேற்கொள்ளக் கூடாது. ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த ஒரு மாநிலம்; காஷ்மீர் பிரச்னை சம்பந்தமாக ஏதேனும் பேச்சுவார்த்தை என்றால், அது பாகிஸ்தானால் ஆக்ரமிக்கப்பட்டிருக்கும் காஷ்மீர் சம்பந்தமாக மட்டுமே இருக்கமுடியும் என்ற நிலைப்பாட்டில் இந்திய அரசு உறுதியாக இருக்க வேண்டும். மீண்டும் ஒரு பிரிவினை என்பதோ, இந்திய மண்ணில் ஒரு அங்குலம் கூட இழப்பது என்பதோ இனி இருக்கவும் முடியாது; இருக்கவும் கூடாது. இந்தியாவில் இஸ்லாமியர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் உரிமைகளும் சலுகைகளும் உலகில் வேறு எந்த நாட்டிலும் கிடையாது. இந்நிலையில் மதவெறியிலான எண்ணங்களின் அடிப்படையில், இந்நாட்டில் இந்தியர்களுடன் சேர்ந்து வாழமுடியாது என்பவர்கள் வேண்டுமானால் இந்தியாவிலிருந்து பிரிந்து போகட்டும்; ஆனால், இந்தியாவின் பூகோள ரீதியான நிலப்பரப்பில் இனி பிரிவினை என்பது என்றைக்கும் கிடையவே கிடையாது. அது மெஹ்பூபாவானாலும், ஒமர் அப்துல்லாவானாலும், பிரிவினைவாதத்தை எழுப்புபவர்கள் யாரானாலும் நமது நாட்டின் சட்டப்படி கடுமையாக தண்டிக்கப்படவேண்டியவர்களே. இந்திய அரசு இவ்விஷயத்தில் எவ்வித மென்மைப்போக்கிற்கும் இடம் தரக்கூடாது. பிரிவினை எண்ணங்களின் வெளிப்பாடுகளை, அவை எந்த வடிவில் யாரால் வெளிப்படுத்தப்பட்டாலும் அவற்றை முளையிலேயே இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.
|
GENERAL |
கட்டுக் கதைகளில் சில: (RamaGobal,india,Chennai)
|
1. நல்ல பாம்பை அடித்துவிட்டால் தேடிவந்து பழிவாங்கும். 2. கொம்பேறி மூர்க்கன் பாம்பு - தன்னால் கடிக்கப்பட்டவர்களை சுடுகாட்டில் வந்து எரிக்கிறார்களா? அல்லது புதைக்கிறார்களா என்று பார்க்கும். 3. மண்ணுளிப் பாம்பு நக்கினால் தொழுநோய் வரும். 4. மண்ணுளிப் பாம்புக்கு 6 மாதத்திற்கு ஒரு முறை தலை மாறும். 5. மகுடி ஊதினால் பாம்பு வரும். 6. மகுடி இசைக்கு ஏற்றபடி பாம்பு ஆடும். 7. பச்சைப் பாம்பு கண்கொத்தும். 8. நல்ல பாம்பு நூறு ஆண்டுகள் வாழ்ந்தால் ஒரு அடி அளவுக்குக் குட்டையாகி விடும்; இறக்கை முளைத்துவிடும்; மாணிக்கக்கல் கக்கி அந்த வெளிச்சத்தில் இரை தேடும். 9. பாம்புக்கு பால் வைத்து கும்பிட்டால் வந்து குடிக்கும். 10. நல்ல பாம்பும் சாரைப் பாம்பும் இணை யும்.
|
POST YOUR QUESTION |
Amarnath Temple: (T.S.PRAKASAM,SINGAPORE,SINGAPORE)
|
There is a saying in Tamil. Summa iruntha sangai oothikkeduthan Andi. This will be applicable to the J&K Governor Mr.VORA. T.S PRAKASAM-Singapore(now in TN)
|
GENERAL |
What Happened to Open page? (R.T.Murugesan,India,Erode)
|
The open page has been made defunct as no member likes to post views in this column.That is why the same view is published for the past one week.The editor as well as public do not feel that this column is of any use to public.Good Bye!
|
GENERAL |
How to be a real Human (peer,ind,dhl)
|
Forgive all bad from other Non-human(Human)
|
GENERAL |
Rowdism (R.Subramanian,India,Salem)
|
I read a news item that a PH.D.student near Sivaganga was threatened by the councillors of a political party to hand over her thesis prepared by her as her research papers for her submission and transfer the same in the name of another student. The people have threatened her of dire consequences if she does not oblige them. This news was not carried by most of the newspapers and TV channels including this newspaper to the best of my knowledge. Is it true? Is this how degrees are obtained by the present day rulers and their deputies?Any action taken by the University concerned.
|
GENERAL |
ஒலிம்பிக் (G.GANDHI RAJA,INDIA,CHENNAI)
|
சீனாவில் நடைபெற்றுவரும் 29வது ஒலிம்பிக் போட்டியில் இந்திய மல்யுத்த வீரர் சுசீல்குமார் ஆண்களுக்கான ப்ரீ ஸ்டைல் 66 கிலோ பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றிருக்கிறார். 56 ஆண்டுகளுக்கு பிறகு மல்யுத்தத்தில் இந்தியாவுக்கு பதக்கம் கிடைத்திருக்கிறது. ஏற்கனவே துப்பாக்கி சுடும் போட்டியில் அபினவ் பிந்திரா இந்தியாவுக்கு தங்கம் வாங்கித் தந்திருக்கிறார். இனி குத்துச்சண்டையில் விஜயேந்தர் குமார் ஒரு பதக்கம் பெறுவார். இந்தியாவிற்கு பதக்கங்கள் பெற்றுத்தந்த இவ்வீரர்கள் பெரும் பாராட்டுக்குரியவர்கள். நாட்டின் பெருமைக்குரியவர்கள் அவர்கள். ஆனால் இந்தியா ஒரு பெரு நாடு. உலகின் மிகப்பெரும் இவ்விளையாட்டுப் போட்டியில்,இப்படி ஒரிரு பதக்கங்கள் மட்டுமே பெறமுடிந்திருப்பது மிகவும் வருத்தத்திற்குரிய விஷயம். இந்தியாவில் திறமைக்கு பஞ்சமில்லை; அந்தத் திறமைகளை வெளிகொணர தகுந்த ஏற்பாடுகள்தான் இல்லை; அடுத்த ஒலிம்பிக்கிலாவது இந்தக் குறைபாடுகள் அகற்றப்பட்டு, இந்தியா மேலும் மேலும் பதக்கங்களை குவிக்கும் என்று நம்புவோம்.
|
POST YOUR QUESTION |
Auto Referesh Feature (dinesh,usa,new york)
|
How to disable the Auto Referesh feature in E-Paper? Advance thanks for helping me out
|
GENERAL |
காஷ்மீர்
(G.GANDHI RAJA,INDIA,CHENNAI)
|
இந்தியாவின் 62 வது சுதந்திர தினத்தன்று காஷ்மீர் லால்சௌக் பகுதியில் ஏற்றி வைக்கப்பட்ட நமது மூவர்ண தேசியக்கொடி சில தேசவிரோத மதவெறி சக்திகளால் கீழிறக்கப்பட்டு பகிஸ்தான் கொடி ஏற்றப்பட்டிருக்கிறது.பாகிஸ்தான் ஆதரவு கோஷங்களும் எழுப்பப்பட்டிருக்கின்றன. காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் எத்தகைய சக்திகள் ஆதிக்கம் செலுத்துகின்றன என்பதற்கு இந்த சம்பவம் ஒரு எடுத்துக்காட்டு. இந்த சம்பவத்தை பா.ஜ.க.தவிர வேறு எந்த அரசியல் கட்சியும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை; அதற்காக தங்கள் கன்டனத்தையும் தெரிவிக்கவில்லை. இது காஷ்மீர் பிரச்னையில் நாட்டின் அரசியல் கட்சிகள் எத்தகைய மனநிலையில் செயல்படுகின்றன என்பதற்கு எடுத்துக்காட்டு. இத்தகைய தேசவிரோத சக்திகள்தான் அமர்நாத் பிரச்னையில் பாகிஸ்தான் உளவு ஸ்தாபனமான ஐ.எஸ்.ஐ.ன் தூண்டுகோலுடன் செயல்பட்டு பெரும் கலவரங்களை உண்டாக்கி நிலைமையை சிக்கலாக்கி வருகின்றன. மக்கள் ஜனநாயக கட்சித்தலைவரான மெக்பூபா ஐ.எஸ்.ஐ.ன் ஏஜெண்ட் போலவே செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.அதே போல் காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் செயல்பாட்டுக்கொண்டிருக்கும் ஹூரியத் மாநாடு என்ற அமைப்பும் பாகிஸ்தானின் விருப்பு வெறுப்புகளை நிறைவேற்றும் அமைப்பாகவே இயங்கிக் கொண்டிருக்கிறது. இத்தகையவர்கள் மீது கடும் நடவடிக்கைகள் மேற்கொள்வதே காஷ்மீர் விஷயத்தில் இந்திய அரசின் நிலை என்ன என்பதை தெளிவுபடுத்தும் விஷயமாயிருக்கும். உலகின் எந்த நாட்டிலாவது சுதந்திர தினத்தன்று வேறோரு நாட்டின் கொடி ஏற்றப்படுவதை அந்த நாட்டின் அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்குமா..? உலகின் எந்த நாட்டிலாவது பெரும்பான்மை சமுதாயத்தினர் தங்கள் மதவழிபாட்டுரிமைகளுக்காக போராட்டம் நடத்துவதை பார்த்ததுண்டா..? இவை இரண்டுமே இந்தியாவில் நிகழ்கிறது. இதற்கு காரணம் இந்தியாவில் நிலவுகிற வேடிக்கையான வினோதமான மதச்சார்பின்மைக் கொள்கையும், தேசநலனை சிறிதும் மனதில் கொள்ளாமல், முழுக்க முழுக்க சுயநலத்தின் அடிப்படையிலேயே செயல்படும் அரசியல் தலைவர்களும்தான். காஷ்மீர் பிரச்னையில் இந்திய அரசு தெளிவான உறுதியான நிலைப்பட்டை மேற்கொள்ள வேண்டும். காஷ்மீர் பிரச்னை பற்றிய பேச்சுவார்த்தை என்றால் அது பாகிஸ்தானால் ஆக்ரமிக்கப்பட்டிருக்கும் காஷ்மீர் பற்றி மட்டுமே இருக்க முடியும் என்ற தனது நிலையை பாகிஸ்தானுக்கும் அதன் ஆதரவு பெற்ற பயங்கரவாத மதவெறி கும்பலுக்கும் தகுந்த முறையில் அவர்கள் புரிந்து கொள்கிற வகையில் உணர்த்தவேண்டும்.இதுதான் காஷ்மீர் பிரச்னையின் சிக்கலை தீர்க்கும் தகுந்த வழி; சரியான வழி.
|
GENERAL |
வாழ்க தமிழ்திரை இசை. (astromaniam,india,tamil Nadu)
|
இந்திய சுத்ந்திரத்திற்காக பாடுபட்டு உயிர் நீத்த தியாகிகளின் குடும்பங்களையும் சுதந்திரம் பெற்ற பிறகு காலமான தியாகிகளையும் இன்று வரை உயிர் வாழும் தியாகிகளையும் அவர்களது காங்கிரஸ் கட்சியினரே மறந்து விட்டனர். இந்திய சுதந்திரத் தியாகிகளையும் அவர்களது குடும்பத்தினரையும் பாதுகாக்க சுதந்திர தியாகிகள் நல வாரிய்ம் அமைத்து வயது முதிர்ந்த தியாகிகளின் துயர் துடைக்க இந்திய அரசு விரைவாக நடவடிக்கை எடுப்பது பெற்ற சுதந்திரத்துக்கு செய்யும் கைமாறாகும். திராவிடர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தை அந்த திராவிடரின் முன்னேற்றத்திற்கு கட்சி நடத்துபவர்களே அபகரிப்பது பெரியாரின் கொள்கைகளுக்கு மாறான செயலாக கருதலாம். தமிழ் நாட்டு ஆறுகளில் தான் மணல் அதிகம்.அவைகள் உற்பத்தியாகும் இடங்களிலிருந்து கர்நாடக கேரள எல்லை வரையுள்ள ஆறுகளில் மணல் அதிகம் இருக்காது. இந்த உளவு தெரிந்தவர்கள் கட்சி போர்வையில் மணலை தமிழ்நாட்டு ஆறுகளில் இருந்து திருடி எடுத்து அந்த மாநிலங்களுக்கு லாரிகளில் கடத்தி பணம் சம்பாதிக்கிறார்கள். இது தொடர்ந்தால் தமிழகத்தின் மேலண்டை பகுதிகளான கேரள கர்நாடக பகுதிகள் உயரமாகியும் தமிழக ஆறுகளின் மணல் வெட்டால் தமிழக ஆற்றொர நிலபரப்புகள் மேலும் பள்ளமாக தாழ்ந்து விரைவாக கடல் நீர் தமிழகத்தின் உள்ளே புகுந்து சுனாமி ஏற்படுவதற்கு மணல் திருடர்கள் துணை நிற்பதாக கருதலாம். சாலைகளை விரிவு படுத்துவதை சாக்கிட்டு அதிமுக ஆட்சியில் போட்ட சாலையோர குடிநீர் பைப் லைன்களை உடைத்து மக்களை குடிநீரின்றி குடங்களுடன் அலைய விடுதல் குடியாட்சிக்குரிய மரியாதையில்லை. நாட்டின் வளர்ச்சிக்கு தடையாக இருப்பது மதவாதமும் தீவிரவாதமும் என பாரத பிரதமர் சுதந்திர தின விழா உரையில் தெரிவிக்கிறார். பக்கத்தில் உள்ள ஒரு குறிப்பிட்ட நாட்டினரின் உன்மத்தம் பிடித்த தீவிர மதவாதம் தான் இந்தியாவுக்குள் ஊடுறுவி இந்தியருக்கு எதிராக தீவிரவாதமாக உறுவெடுத்து பல அப்பாவி உயிர்களை பலி வாங்கிக்கொண்டிருக்கிறது. எனவே இந்த நாட்டின் வளர்ச்சியை தடை செய்வது இந்த நாட்டில் வாழும் இந்துவோ கிறித்துவரோ அல்ல என்பதை மறைமுகமாக காங்கிராஸார் பிரதமரின் உரைவழியாக ஒப்புக்கொள்ளுகிறார்கள் என்று கருத இடமுள்ளது. இலங்கையில் இருந்து தமிழ்நாட்டுக்கு கள்ளத்தோணிகளில் உயிர் பிழைக்க தப்பி வருபவர்கள் சிங்களவ மொழி வெறியர்களால் பாதிக்கப்பட்ட தமிழ் அகதிகள். அவர்களை தீவிரவாதிகளாக கருதமுடியாது. இருப்பினும் அவர்கள் விடுதலைப்புலிகளா என்பதையும் கண்காணிக்கப்படவேண்டியது அவசியம். ஆனால் பங்களா தேஷில் இருந்தும் பாகிஸ்தானில் இருந்தும் தப்பி வருபவர்கள் இந்திய எல்லையோர மாநிலங்களில் தங்கி அங்கு குடியுரிமைகளையும் ரேஷன் கார்டுகளையும் பெற்று வசிப்பதாக சமீப கால பத்திரிகை செய்தி. அப்படி எத்தனை பேர் இந்தியாவுக்குள் இது வரை ஊடுறுவி இருக்கிறார்கள் என்பதும் அப்படி ஊடுறுவி இந்தியாவுக்குள் வருபவர்கள் தீவிரவாதிகளா அல்லது பொது மக்களா என்ற புள்ளி விவரங்களை இந்திய அரசு ஆராய்ந்து பார்க்க வேண்டும். அத்தகையவர்களின் எல்லை தாண்டும் ரகசிய ஊடுறுவலை விழிப்புடன் கண்காணித்து அவர்களில் இந்தியாவுக்குள் குண்டு வெடிப்புகளை நிகழ்த்த வருபவர்களையும் இனம் கண்டு அவர்களை வரு முன் தடுக்கலாம். குடி ஆட்சி என்பது மக்களுக்காக மக்களை மக்களே ஆள்வது. முந்தைய ஆட்சியினர் மக்களுக்காக செயல் படுத்திய நல்ல பல மக்கள் நலத் திட்டங்கள் மக்களிடம் போய் சேராமல் தொடர்ந்து ஆட்சி பிடிக்கும் மாற்றுக் கட்சியினரால் முடக்கப்படும் போது நீதி மன்றங்கள் அவைகளில் நேராக தலையிட்டு செய்ய ஆணையிடுவது மக்கள் நலனுக்கு எதிராக செயல்படும் ஆளும் கட்சியினரின் அராஜகத்திற்கு வைக்கும் முற்றுப்புள்ளி. நெடுஞ்சாலைகளில் நேரும் வாகன ஆக்சிடெண்டு விபத்துகளை தடுக்க சாலைகளில் செல்லும் அனைத்து வாகனங்களின் முன் பகுதியிலும் பின் பகுதியிலும் எளிதில் தீப்பிடிக்காத கனத்த தர்மாகோல் அட்டைகளை உடையாத ஸ்பிரிங்குகளுடன் பொறுத்துவதன் மூலம் வண்டிகள் ஒன்றுடன் ஒன்று மோதும் வேக அதிர்ச்சியை அவைகள் ஷாக் அப்சார்பர் போல் இயங்கி விபத்தை தடுக்க முடியுமா என்பதை இந்திய வாகன உற்பத்தியாளர்கள் சோதனை முறையில் பரிசோதிக்கலாம். இன்னும் ஒரு சில நூற்றாண்டுகளில் தென்னிந்திய நிலப்பரப்பை கடல் நீர் விழுங்கும் என புவி இயல் விஞ்ஞானிகள் எச்சரிக்கிறார்கள். இயற்கைக்கு மாறாக அதிகமாகி வரும் பூமி வெப்பத்தால் வட தென் துருவ பனிப் பாறைகள் அல்லது பனி மலைகள் உருகி கடல் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. ஒரு கால கட்டத்தில் உலகின் தாழ்ந்த நிலப்பரப்பு பகுதிகள் தென்னிந்தியா உட்பட பல கடலுக்குள் சென்று விடும் அபாயம் உள்ளது. நமது நாட்டின் அனைத்து மலைப் பகுதிகளின் உச்சிகளையும் இப்போதிருந்தே ஆராய்ந்து போர்க்கால அடிப்படையில் மண் வாரும் இயந்திரங்களின் துணையுடன் மேலே செல்வதற்கு தகுதியுள்ள மலை உச்சிகளில் உள்ள குறுகிய நிலப்பரப்பை பல சதுர கிலோ மீட்டர் பரப்பளவிற்கு சமன் செய்து விஸ்தரிக்கலாம். அடிக்கடி சுனாமியால் பாதிக்கப்படும் கடலோர வாழ் மக்களுக்கு கடலை நம்பி தொழில் செய்யும் மீனவர் நீங்கலாக அப்படி விஸ்தரிக்கப்பட்ட இடங்களை மாற்று உறைவிடமாக அளிக்கலாம். இத்திட்டத்தால் நதிகளை இணைக்கும் திட்டம் செயலற்றதாகிவிடும். உலகனைத்தும் கடல் மட்டமாகும் போது மனிதன் சந்திரனில் அல்லது மற்ற கிரகங்களில் குடியேற வேண்டிய அவசியத்தை மலை உச்சி குடியேற்றம் இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு தள்ளிப்போடும். ஒரு தொலைக்காட்சி தவிர மற்ற எல்லா தொலைக்காட்சி செய்தி ஓளி பரப்புகளிலும் தினமும் தமிழ் நாட்டில் நடக்கும் மக்கள் போராட்டங்கள் வேலை நிறுத்தங்கள் பகிரங்க மணல் அரிசி கடத்தல்கள் ஏழைகளிடமிருந்து நிலங்களை அபகரித்தல் கொலைகள் கொள்ளைகள் மற்றும் பல திருவிழா நிகழ்ச்சிகள் சமயச் சொற்பொழிவுகள் போன்ற பல முக்கிய செய்தி விவரங்கள் இடம் பிடிக்கின்றன. ஆட்சி மாறினால் அந்த தொலைக்காட்சியின் காட்சிகளும் அப்போது மற்ற தொலைக்காட்சிகள் போல் மாறும். ஏழிசை மன்னரின் இசை வாரிசு ட்டிஎம்எஸ்ஸுக்கு மதுரையின் அஞ்சா நெஞ்சன் திரு அழகிரி நடத்திய பாராட்டு விழாவில் அப்பாடகரின் குரலாக இருந்து பொருத்தமாக வாயசைத்து பாடல்களுக்கு உயிர் கொடுத்து நடித்து தமிழை வளர்த்த எம்ஜியார் சிவாஜி போன்ற சினிமா வெட்டரன்களை அவ் விழாவில் முக்கிய பங்கேற்றவர்களில் ஒருவர் கூட ஒரு வார்த்தையாவது பாராட்டி பேசாதது வருந்தக்கூடியது என்றாலும் 1946 முதல் 1980 கள் வரை நெஞ்சில் நிறைந்த பழைய பாடல்களை வழங்கியவர்களை திரு அழகிரி பாராட்டி நிதி உதவி செய்துள்ளது இது வரை யாரும் செய்யாத மிகச்சிறப்பான காரியமாகும். திரு அழகிரி அனைத்து பழைய சினிமா படப் பாடல்களையும் (இது வரை தொலைக்காட்சிகளில் இடம் பெறாத ரத்ன குமார் அசோக் குமார் மங்கையர்க்கரசி மங்கம்மா சபதம் பால நாகம்மா நம்பியாரின் திகம்பர சாமியார் ஹரிதாஸ் டைப்பிஸ்ட் கோபு நடித்த அண்ணி பாலாஜியின் மனமுள்ள மறு தாரம் நாகேஸ்வர ராவின் தேவதாஸ் ஏ.ப்பி.நாகராஐன் நடித்த பெண்ணரசி நாக தேவதை நாக பஞ்சமி ஜம்பனா நந்தி இயக்கிய குடும்பம் ஸ்ரீராம் நடித்த மர்ம வீரன் டணால் தங்க வேலு நடித்த ரம்பையின் காதல் மஞ்சள் மகிமை ஸ்ரீதரின் ரத்தபாசம் சௌகார் பாதாள பைரவி அன்பு எங்கே அன்புக்கோர் அண்ணி ரத்தக்கண்ணீர் நல்ல இடத்து சம்பந்தம் அண்ணாவின் ஓரிரவு சொர்க்கவாசல் சொர்க்கம் எங்கே தாய் மகளுக்கு கட்டிய தாலி முதலிய படங்களுடன் புரட்சி தலைவர் எம்ஜியார் அவர்கள் 1936 முதல் 1978 வரை நடித்த மிகவும் புகழ் பெற்ற 136 தமிழ் படங்களுடன் ஜெமினி கணேசன் சிவாஜி கணேசன் ஆகியோர் நடித்து புகழ் பெற்ற படங்களுடன்) பழைய படங்களையும் முக்கிய சிடிக்களில் பதிவிட்டு அவைகளுக்கென பழைய பாடல்கள் படங்கள் நிறைந்த சிடி நூலகங்களை சென்னையிலும் மதுரையிலும் பிரமாண்டமாக நிறுவி விரைவில் திறந்து வைப்பார் என நம்புகிறோம். அத்தகைய பழைய தமிழ் பாடல்களும் படங்களும் வாலிபத்தில் கண்டு கேட்டு ரசித்த நாட்டில் உள்ள அனைத்து தமிழ் முதியவர்களின் நெஞ்சங்களில் இன்றும் என்றும் நிலைத்திருப்பவை. அத்தகைய அற்புதமான பழைய சினிமா படங்கள் மற்றும் அவைகளில் வரும் புகழ் பெற்ற கர்நாடக மெல்லிசை பாடல்கள் அம்முதியவர்களது நெஞ்சங்களில் ஊறும் இசை ரசனைகளுக்கு புத்துணர்வையும் தெம்பையும் தரும். வளர்க திரு அழகிரியின் கர்நாடக மெல்லிசை தமிழ் திரை இசைத்தொண்டு. அரசியலில் ஈடுபடும் கட்சித் தலைவர்கள் அவர்களது கட்சி சார்பாக தேர்தலுக்கு நிறுத்துபவர்களிடம் தேர்தல் நிதி என்ற பெயரில் பணத்தை பெற்றுக்கொண்டு அவர்களை தேர்தல் வேட்பாளர்களாக அறிவிக்கிறார்கள். தேர்தல் நெருங்கும் குறுகிய காலத்தில் இப்படி அவசரமாக தேர்தலுக்கு நிற்பவர்களின் தரா தரங்களை மக்கள் ஊகித்தறிந்து வாக்களிக்க இயலாமல் போகிறது. தேர்தலில் நிற்பவர் நல்லவரா கெட்டவரா சுயநலவாதியா என்பதை ஆராய்வதற்கு வாக்காள மக்களுக்கு போதிய கால அவகாசம் கிடைப்பதில்லை. தேர்தலில் செலவழித்த பணத்தை ஆட்சிக்கு வந்த பின்னர் எப்படியாவது மீட்டு எடுக்க நாட்டு வளத்தையும் மக்களையும் சுரண்டி அடிக்கும் கொள்ளையில் பல மடங்கு சொத்து சேர்த்துவிடுகிறார்கள். நாட்டின் பொருளாதாரமும் ஏழைகளின் வாழ்வாதாரமும் பெருமளவில் பாதிப்பதற்கு இந்த அவசர அரசியல்வாதிகள் காரணமாகிறார்கள். அரசியலை வியாபாரமாக நடத்துபவர்களையும் அப்படிப்பட்டவர்களை கட்சியில் சேர்க்கும் கட்சிகளையும் தேர்தல் ஆணையம் நிரந்தரமாக தடை செய்ய வேண்டும். வாக்காளர்களும் தேர்தலில் நிற்பவரை அவர் சார்ந்த கட்சி கண்ணோட்டத்தில் தேர்வு செய்யாமல் அவரது தனிப்பட்ட தகுதிகள் மற்றும் சமூகத் தொண்டில் அவருக்குள்ள அக்கறை ஈடுபாடுகள் ஆகியவைகளை கருத்தில் கொண்டு தேர்வு செய்வது ஐந்தாண்டு ஆட்சியில் அவரால் மக்களுக்கு திரும்ப கிடைக்கும் நன்மைகளுக்கு உத்தரவாதமாக அமையும். தேர்தல் ஆணையம் தேர்தல் வருவதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பாகவே தேர்தலில் நிற்பவர்களை தேர்ந்தெடுத்து அவர்களது சுய வரலாறுகளை பத்திரிகைகள் தொலைக்காட்சிகள் மற்றும் அரசாங்க கெசட் வாயிலாக தெரிவித்தால் தேர்தலில் நிற்பவர்களின் தகுதிகளை அறிந்து வாக்களிப்பை முடிவு செய்ய வாக்காள மக்களுக்கு போதிய கால அவகாசம் கிடைக்கும். தேர்தலில் நிற்பவர்களைப்பற்றிய விழிப்புணர்வுக்கு தேர்தல் நேரத்தில் வாக்காளர்களுக்கு ஒவ்வொரு தொகுதியிலும் சிறப்பு புத்துணர்வு பயிற்சி முகாம்களை நாட்டில் உள்ள தலை சிறந்த பத்திரிகை துறை சார்ந்த அரசியல் விமர்சகர்களின் துணையுடன் நடத்த தேர்தல் ஆணையம் வழி செய்ய வேண்டும்.
|
GENERAL |
TV donation a strangest Idea ! (Sanjeevi Joseph,India,Chennai)
|
One cannot undermine the good intentions of a government trying to be heartwarming and novel in its pre-elction generosity. Does TV donation to millions of homes at an incredible budget do better than uninterrupted supply of essential food items and basic necessities ...one may ask? Do the children in poor families get food to eat all three times a day? Do they have clothes to wear and books to read? Do all their homes have water to drink, bathe and wash? Are they all living in hygenic conditions and clean environment? If not, we are deceiving ourselves by misplaced generosity, false ambitions and cheap publicity. We are endagering a society by distracting its purpose and destroying its aspirations for nothing but pure selfishness. Its time we look for change and change for the better and not for anything worse.
|
GENERAL |
Agitations and Protests (Sanjeevi Joseph,India,Chennai)
|
As citizens of a democratic nation, we have all been destined to accept the ill effects of a great political system. One such effect is the daily protests and agitations on the street, in public and government offices by groups of men and women who act like mindless maniacs. They have no genuine reason except pure selfishness and unwillingness to work hard. They are the virus in this society which would have advanced far ahead of China. If this chaos is not cheked and kept in control, India will be ruled by a bunch of lunatics.
|
POST YOUR QUESTION |
சுதந்திர தினம் கொண்டாடுவோம்?
(T.R.Pattabiraman,India,Tiruvallur)
|
சுதந்திர தினம் கொண்டாடுவோம்? சுதந்திரம் அடைந்த பிறகு பெற்ற முன்னேற்றங்கள் ஒருபுறம் இருக்கட்டும். அடித்தட்டு மக்கள் உண்மையான சுதந்திரத்தை அனுபவிக்கிறார்களா? அவர்கள் அனைவருக்கும் உடுக்க உடை,உண்ண உணவு,இருக்க இடம்,உழைத்து பிழைக்க வேலை வாய்ப்பு, சமூக பொருளாதார பாதுகாப்பு இவைகள் தங்கு தடையின்றி கிடைத்துவிட்டனவா? அரசுகள் அவர்களுக்காக அறிவிக்கும் திட்டங்கள் முழுவதும் அவர்களுக்கு இடைதரகர்கள் கொள்ளையிடாமல் போய் சேருகிறதா? மகாத்மா காந்தி கூறியதுபோல் ஒரு பெண் நகைகளை அணிந்து இரவு நேரத்தில் திருடர்கள் பயமின்றி வீதியில் செல்ல முடியுமா? ஆடுவோமே பள்ளு பாடுவோமே என்று பாரதி பாடிய நாட்டில் இன்று எங்கு பார்ர்தாலும் மதுவை குடித்துவிட்டு ஆடும் ஆட்டங்கள்தானே காண்கிறோம். உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் அவர்பின் தொழுதுண்டு செல்வர் என்ற வள்ளுவனின் வாக்கிற்கு ஏது மரியாதை?. விலைநிலந்கலெல்லாம் மேலை நாட்டு நிறுவனங்களுக்கு தாரை வார்க்கப்பட்டு வேளாண் தொழில் அடியோடு அழிக்கபட்டும் வேளாண் தொழிலில் ஈடுபட்டவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டதற்கு யார் காரணம்? தீவிரவாதிகளின் அச்சுறுத்தலால் பல கோடி மக்கள் தன் இன்னுயிரை ஈன்று பாடுபட்டு கிடைத்த சுதந்திரத தினத்தை காவல்துறை மற்றும் ராணுவத்தின் பாதுகாப்பின்றி பயமில்லாமல் இன்று கொண்டாட முடியுமா? நாடகத்தில் வரும் பாத்திரங்கள் ஒப்பனை செய்து கொண்டு போலியாக நடிப்பதுபோல் இன்று லஞ்ச ஊழலால் பாதிக்கப்பட்டு, சமூக விரோதிகள், தீவிரவாதசக்திகள், மதவாத சக்திகள்,சுயநல அரசியவாதிகள்,போன்றவர்களின் செயல்களால் துன்புறுத்தப்பட்டும் ,பலவிதமான அடக்குமுறைக்கு ஆளாகியும் ,கோடிக்கணக்கான மக்கள் வறுமையில் உழன்றும்,அநியாயங்களை தட்டி கேட்க முடியாத சூழ்நிலையில்,மக்களை காப்பாற்றவேண்டிய அரசுகளே மக்களை அடக்கி ஒடுக்கி துன்புறுத்தும் சூழ்நிலையில்,எப்போது எங்கு குண்டு வெடிக்குமோ என்று மக்கள் அஞ்சி வாழ்கின்ற நிலையில் இந்த 61வது சுதந்திரம் நம்மை வைத்திருக்கின்றது என்றால் மிகையாகாது. உதட்டிலே சிரிப்பும் உள்ளத்திலே நம்மை சுற்றி நடைபெறும் நிகழ்வுகளை கண்டு கொதிப்பும் கொண்டு நாம் கொண்டாடும் இந்த சுதந்திரம் உண்மையாக எந்தவிதமான அச்சுறுத்தலும், சுரண்டலற்ற சமுதாயமாக உண்மையிலேயே உள்ளத்தில் உவகை கொண்டு கொண்டாடும் நாள்வர ,இறைவன் அருள் புரிய வேண்டும்
|
GENERAL |
சுதந்திர தினம் 2008
(G.GANDHI RAJA,INDIA,CHENNAI)
|
என்னருமைத் தாய்நாடே, வாழ்க நீ... வறுமை அறியாமை, லஞ்சம்,ஊழல், மதவெறி, மொழிவெறி, அரசியல்வாதிகள் சுயநலம்.. இப்படி பலப்பலவாய், எண்ணற்ற பிரச்னைகளால் துன்புற்ற போதிலும், பாரத அன்னையே, உன்னை வணங்குகிறேன். உலகின் நிகரற்ற கலைகள் உன்னிடமுண்டு; உலகின் பெரும்சிறப்புகள் உன்வசமுண்டு; உயர்ந்த பண்பாடும், ச |