சகோதரனுக்கு உதவி செய்
ஜூலை 09,2010,20:27  IST

அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி) ""உங்களில் ஒவ்வொருவரும் தன் சகோதரனின் கண்ணாடியாவான். எனவே, ஒருவர் தன் சகோதரனின் துன்பத்தில் சிக்கியிருப்பதைக் கண்டால் அதனை அவர் நீக்கிவிடட்டும்.'' (மிஷ்காத்)
விளக்கம்: இவ்வாறே தன் சகோதரனுக்குள் ஏதேனும் குறையையோ பலவீனத்தையோ கண்டால், அதனை தன் பலவீனமாகக் கருதி நீக்கிட முயலவேண்டும்.
அறிவிப்பாளர்: அனஸ்(ரலி)  அண்ணல் நபி(ஸல்) அவர்கள் நவின்றார்கள்:
""நீ உன் சகோதரனுக்கு உதவிடு; அவன்
கொடுமைக்காரனாக இருப்பினும் சரி, கொடுமையிழைக்கப்பட்டவனாக இருந்தாலும் சரி!'' ஒருவர் வினவினார்: ""அல்லாஹ்வின் தூதரே! கொடுமைக்கு ஆளானவன் என்றால் நான்
அவனுக்கு உதவுவேன். ஆனால், கொடுமைக்காரனாக இருக்கும்போது அவனுக்கு எவ்வாறு
உதவுவேன்?''  அண்ணலார் கூறினார்கள்:
""கொடுமை புரிவதிலிருந்து அவனை நீ தடுத்துவிடு! இதுவே அவனுக்கு உதவுவதாகும்.''
(புகாரி முஸ்லிம்)
அறிவிப்பாளர்: அனஸ்(ரலி)  அண்ணல் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
""எனது உயிர் எவன் கைவசத்தில் இருக்கிறதோ அ(ந்த இறை)வன்மீது சத்தியமாக! தமக்கு விருப்பமான ஒன்றை நமது சகோதரனுக்கும் விரும்பும்வரை உங்களில் எவரும்
இறைநம்பிக்கை கொண்டவர் ஆகார்.'' (புகாரி, முஸ்லிம்)
அறிவிப்பாளர்: அபூஅய்யூப் அல்அன்ஸாரி (ரலி)
அண்ணல் நபி(ஸல்) அவர்கள் நவின்றார்கள்:
""ஒரு மனிதன் தன் சகோதரனுடன் மூன்று இரவுகளை விட அதிகமாக உறவைத் துண்டித்துக் கொள்வதும், இருவரும் பாதையில் ஒருவரையொருவர் சந்தித்தால் முகம் திருப்பிக் கொள்வதும் அனுமதிக்கப்பட்டதல்ல! எவர் ஸலாம் சொல்வதில் முந்திக் கொள்கின்றாரோ அவரே அவ்விருவரில் சிறந்தவர் ஆவார்.'' (புகாரி, முஸ்லிம்)
விளக்கம்: இரு முஸ்லிம்கள் ஏதேனும் ஒரு விஷயத்தில் ஒருவரைப் பற்றி ஒருவர் அதிருப்தியடைந்து பேச்சுவார்த்தையை நிறுத்திவிடுவது சாத்தியமே. ஆனால், மூன்று நாட்களை விட அதிகமாக அவர்கள் இருவரும் இதே நிலையில் இருக்கக்கூடாது. பொதுவாக, இரண்டு மனிதர்களுக்கிடையே கசப்புணர்வு ஏற்பட்டு அவ்விருவரும் சிறிது இறையச்சம் உடையவர்களாயிருந்தால், மூன்றுநாட்கள் கழிந்தவுடன் அவர்களுக்குள் ஒருவரையொருவர் சந்திக்க வேண்டுமென்ற துடிப்பு ஏற்படுகின்றது. இறுதியில் அவ்விருவரில் எவரேனும் ஒருவர் ஸலாம் சொல்வதில் முந்திக்கொண்டு அந்தச் சாத்தானியக் கசப்பை ஒழித்துக் கட்டுடவிடுகின்றார்.
இதனால் தான் பேசுவதில் முந்திக் கொள்பவரின் சிறப்பு குறித்து இந்த நபி மொழியிலும் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.  (அண்ணல் நபிகளார் வாழ்வினிலே... நூலில் இருந்து)


நாயகத்தின் பொன்மொழிகள்


* செம்மறி ஆடுகளை அன்புடன் நடத்துங்கள். அவற்றைப் பாதுகாத்து வாருங்கள். ஏனென்றால், சொர்க்கத்தில் உள்ள நாலுகால் பிராணிகளில் அவையும் உள்ளன.
* நீங்கள் ஒரு சிறிய சிட்டுக்குருவியின் மீது இரக்கம் காட்டுவீர்களானால், அல்லாஹ் உங்கள் மீது அன்பையும் அருளையும் பொழிகின்றான்.
* உங்களுக்கு உணவு கொடுத்தவருக்கு நல்லருளும் அபிவிருத்தியும் உண்டாவதற்கு துஆ செய்யுங்கள். அதுவே, உணவளித்தவருக்கு நீங்கள் செய்யும் நன்றிக்கடனாகும்.


Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement
Advertisement