எதைப் படிச்சாலும் முழுசா படியுங்க
அக்டோபர் 21,2011,14:21  IST

""ஆகாயத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு'' (மத்.8:20) என்கிறது பைபிள்.
பறவைகளின் அருமையான சுபாவம் கூடு கட்டுவது. இயற்கையாகவே, அந்த சிந்தனை அவைகளுக்கு இருக்கிறது.
தூக்கணாங்குருவி எத்தனை அழகாக தன் மூக்கினால் பின்னிப் பின்னி கூடுகளைக் கட்டுகிறது! மரங்கள் மேல் சில பறவைகள் கூடு கட்டுகின்றன. வீட்டின் துவாரங்களில், கல்மலையின் வெடிப்புகளில் கூடு கட்டும் பறவைகளும் உண்டு.
ஆனால், பூரணமாக முழுமையாக கூடு கட்டும் பறவை கழுகு தான்! கழுகைப் பற்றிய ஒரு வேடிக்கையான கதை உண்டு.
ஒரு கழுகு மற்ற எல்லா பறவைகளையும் அழைத்து சிறந்த முறையில் கூடு கட்டுவது எப்படி என்று சொல்லிக் கொடுத்ததாம்.
முதற்படியாக முள் குச்சிகள், இரும்புத் தகடுகள் வைத்து அடித்தளம் அமைப்பது எப்படி என்று போதித்துக் கொண்டிருக்கும் போதே, ஒரு காகம், ""கற்றுக் கொண்டேன்; கற்றுக் கொண்டேன்'' என்று கூறிப் பறந்ததாம். முழுவதையும் கேட்க அதற்குப் பொறுமையில்லை.
உடனே கழுகு மற்ற பறவைகளிடம், ""இப்படித்தான் சில ஊழியர்களும்! வேதம் முழுவதையும் வாசித்து பூரணமாக தேவனுடைய எல்லா உபதேசங்களையும் கற்றுக் கொள்ளாமல், ஒரு உபதேசத்தை ஆவியானவர் விளக்கியதும், "கற்றுக் கொண்டேன்' என்று நாளெல்லாம் அதையே உபதேசிக்கிறார்களே தவிர, மற்ற பூரண சத்தியத்திற்கு பொறுமையாய் செவிக்கொடுப்பதில்லை'' என்றதாம்! உண்மைதானே!
பறவைகள் அழகாக கூடுகட்டி குஞ்சுகளை வளர்ப்பதைப் போலவே கர்த்தரும் அருமையான உபதேசங்களால், தன் சபையைக் கட்டி ஆத்துமாக்களை வளரச் செய்கிறார். கிறிஸ்துவின் சாயலில் நாம் பூரணப்பட வேண்டும் என்பது தான் அவரது வாஞ்சை.

Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement
Advertisement