நியாயம் காக்க சிபாரிசை ஏற்காதவர்
நவம்பர் 18,2011,16:42  IST

தப்பு செய்த பிள்ளைகளுக்கு ஒரு கஷ்டம் என்றால், ""அவர்கள் தப்பே செய்யவில்லையே. ஐயையோ! வேண்டுமென்றே பழி போடுகிறீர்களே!'' என்று அரற்றுவோர் மத்தியில், தன் மகள் தவறு செய்தாலும் தண்டனை உண்டு ஆணித்தரமாகப் பேசி நியாயத்தை நிலைநிறுத்தியவர் அண்ணல் நபிகளார் அவர்கள்.
இதுபற்றிய ஒரு தகவலைக் கேளுங்கள்.
மக்ஜூம் கூட்டத்தைச் சேர்ந்த பெண்ணொருத்தி திருட்டுக் குற்றத்துக்காகக் கையும் களவுமாகப் பிடிக்கப்பட்டு அவர்கள் முன் நிறுத்தப்பட்டி ருந்தாள். அவளுக்காக நபிகளாரிடம் பரிந்து பேசிஅவளை விடுவிக்குமாறு அவள் கூட்டத்தார் உஸாமா இப்னு ஜைது என்பவரைக் கேட்டுக்கொண்டனர்.
உஸாமாவுக்கு திருநபி(ஸல்) அவர்களிடம் நல்ல செல்வாக்கு உண்டு. ஆனால், நாயகம் (ஸல்) அவர்கள் உஸாமாவிடம் "" நீர் என்னிடம் வந்து, அல்லாஹ்வின் சட்டத்துக்கு எதிராக நடக்கச் சொல்கிறீரா?'' என்று கேட்டார்கள். பின்னர் ஒரு கூட்டத்தைக் கூட்டி, இவ்வாறு பேசினார்கள்.
""உங்களுக்கு முந்திய கூட்டத்தவர்கள் யாவரும் இம்மண்ணுலகிலிருந்து மாண்டு ஒழிந்தனர். அதற்குக் காரணம் ஒன்றே ஒன்று தான். அதாவது ஏழைகளைத் தண்டித்து விட்டு, பணக்காரர்கள் அதே குற்றத்தைச் செய்துள்ள நிலையில் அவர்களைத் தண்டிக்காமல் பாரபட்சம் காட்டியது தான். ஆண்டவன் மீது ஆணையாகச் சொல்கிறேன். என் புதல்வி பாத்திமா திருடிய குற்றத்துக்கு ஆளானாள் என்று நிரூபணமானால், அவள் கரங்களும் துண்டிக்கப்படவே நான் உத்தரவிடுவேன்.'' என்றார்கள்.

Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement
Advertisement