சொந்தக்காலில் நில்லுங்கள்
டிசம்பர் 12,2007,
21:37  IST
எழுத்தின் அளவு:

* பெற்றோர்கள் உங்களுக்கு கற்றுக்கொடுக்கிற விஷயங்கள் குறைவு. உறங்குவதற்கு யாரும் கற்றுத்தருவதில்லை. 'படுக்கையில் விழுந்ததும் தூங்கிவிடுகிறேன்' என்று கருதிக் கொள்கிறீர்கள். உண்மையில் சாப்பிடுவது எப்படி, உறங்குவது எப்படி, எதை எப்படிச் செய்வது என்று கற்றுக்கொள்ள வேண்டும். கற்றுணராது செய்கிற எதுவும் அத்தனை கச்சிதமாய் அமையாது.

* மிகச் சிறுவயதிலிருந்தே கற்கத் தொடங்காவிடில் வாழ்க்கையை சரியான வழியில் நடத்திச் செல்வதும் சிரமமாகிவிடும்.

* உங்களை உருவாக்கிக் கொள்ள ஒரு அமைப்பு தேவைப்படுகிறது. அதற்காகத்தான் உங்களை பெற்றோர் பள்ளிக்கூடத்திற்கு அனுப்பினர். உடற்பயிற்சிகளை கற்றுத்தந்தனர்.

* படியுங்கள். கற்றுணருங்கள். நீங்கள் அறிவாழம் மிக்கவராயின் கொஞ்சம் கற்றதுமே உங்களுக்கென்று ஒரு சொந்த செயல்முறையை உருவாக்கிக் கொண்டு விடுவீர்கள்.

* சொந்தக்காலில் நிற்க முடிந்த பிறகே உங்களால் நடக்க முடியும். அந்த வகையில் அடுத்தவர் உதவி தேவையோ இல்லையோ கல்வியின் உதவி அவசியம் தேவைப்படும்.

* பகுத்தறிவு சொல்வதைக் கேட்டு நடக்க வேண்டும். வீட்டில் அறிவின் ஆளுகைதான் இருக்க வேண்டும். உணர்ச்சி வேகத்தில் எதையும் செய்து வைக்காதீர்கள். அறிவுக்குக் கீழ்படியுங்கள். உள்ளுணர்வுக்கு அடிமையாகி விடாதீர்கள். அறிவைத் தவிர்த்து வேறெதற்குக் கீழ்ப்படிந்தாலும் மனிதர்கள் விலங்கினும் கீழானவராகி விடுவார்கள்.

* உங்கள் உடம்பின் தசைகளைப் போல் பகுத்தறிவையும் நீங்கள் வளர்த்துக் கொள்ளுங்கள்.

* உங்கள் அறிவை பயன்படுத்திக் கொண்டே இருங்கள். அது வளர்ந்து விடும்.

Advertisement
ஸ்ரீ அன்னை ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement