பொறுமையாய் இருங்கள்!
ஜூலை 11,2010,
22:07  IST
எழுத்தின் அளவு:

* ஒவ்வொருவரும் தங்களை விட மற்றவரை உயர்வாக மதிப்பிடுங்கள். மனிதன்
மதிப்பிடப்படுவது செயல்களாலேயன்றி, வெறும் நம்பிக்கையினால் மட்டுமல்ல.
* நல்லவரின் நாக்கு அரிய வெள்ளி;
தீயவனுடைய மனமோ அற்பவிலையும் பெறாது.
* மரங்களின் மூலவேர் அருகே கோடாரி வைக்கப் பட்டுள்ளது. ஆகையால், நற்கனி கொடாத ஒவ்வொரு
மரமும் அடியோடு வெட்டப்பட்டு அக்கினியிலே போடப்படும்.
* நாம் இந்த உலகிற்கு ஒன்றும் கொண்டு வந்ததில்லை. இந்த உலகிலிருந்து ஒன்றையும் கொண்டு போகப்
போவதுமில்லை.
* பொல்லாதவர்களைக் குறித்து எரிச்சல் அடையாதே. நியாயக்கேடு செய்கிறவர் மீது பொறாமை கொள்ளாதே. ஏனெனில், அவர்கள் புல்லைப் போல வெகு சீக்கிரத்தில் அறுப்புண்டு, பசும்பூண்டைப் போல வாடிப் போய்
விடுவார்கள்.
* அடங்காதவர்களை எச்சரியுங்கள். பலவீன மனம் படைத்தவர்களைத் தேற்றுங்கள். எளியவர்களை
ஆதரியுங்கள். எல்லா மனிதர்களிடமும் பொறுமையாய் இருங்கள்
-பைபிள் பொன்மொழிகள்

Advertisement
பைபிள் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement