நான்கு கட்டளைகள்
டிசம்பர் 12,2007,
21:42  IST
எழுத்தின் அளவு:

* கடவுளை உணர கஷ்டங்களையும், துன்பங்களையும் முழு மனதோடு வரவேற்க வேண்டும். இறைவனின் நாமத்திலும் ரூபத்திலும் தொடர்ந்து நம்பிக்கையோடு லயிக்க வேண்டும். தரக்குறைவான வழிகளினால் கிடைக்கும் அற்ப சந்தோஷங்களை அறவே விட்டொழியுங்கள். கடவுளை உங்கள் வழிகாட்டும் ஒளியாகக் கொள்ளுங்கள். அப்படியென்றால் வாழ்க்கையை பத்திரமாகக் கடக்கலாம். கடவுளின் நாமம் எப்போதும் உங்கள் நாவில் தவழட்டும். அவர் அந்த நாமத்திற்கு ஏற்ற ரூபமாகக் கட்டுப்பட்டவர். இன்றிலிருந்து 'நாமஸ்மரணை' என்கிற 'சாதனா' செய்வதாக உறுதி பூணுங்கள். இறைவனின் தெய்வீகப் பெயரைத் திரும்பத் திரும்ப உச்சரியுங்கள்.

* செல்வம் நில்லாது என்று தெரியும். இருந்தாலும் அதற்காக ஏங்குகிறான் மனிதன். ஒருவரிடம் நம்பிக்கை வைத்து ஒன்றை எதிர்பார்த்து, அது கிடைக்கவில்லையென்றால் வெறுப்பை வளர்த்துக் கொள்கிறான். மனிதனிடம் மட்டுமல்ல, பிரார்த்தனைகள் நிறைவேறாதபோது, கடவுளுக்கு எதிராகவும் மனிதன் வெறுப்பை வளர்த்துக் கொள்கிறான். இத்தகைய துன்பங்களும் அமைதியின்மையும் மனிதனுக்கு பேரிழப்பை ஏற்படுத்துகின்றன. அவன் தனது இயல்பான தன்மையை மறக்கிறான். மகிழ்ச்சிக்கும், துக்கத்துக்கும் உலக நடப்புகளால் பாதிக்கப்படாமல் இருப்பதற்கும் மனமே காரணமே தவிர இயற்கையல்ல.

* இளைஞர்கள் தமக்குள் நற்பண்புகளை வளர்த்துக்கொள்ள நான்கு செயல்கள் புரிய வேண்டும். 1. தீயவர் கூட்டத்திலிருந்து விலகியோடி விடுதல். 2. நல்லோரின் கூட்டுறவை நாடுதல். 3. மற்றவர்களுக்குப் பயன்படும் வகையில் நற்செயல்களில் ஈடுபடுதல். 4. எல்லா நேரங்களிலும் இறைவனது நாமத்தை தியானித்தல்.

Advertisement
சத்யசாய் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement