வினாடியைக் கூட வீணாக்காதே
டிசம்பர் 12,2007,
22:39  IST
எழுத்தின் அளவு:

கடமைகளைச் செய்யாமல் வீணே காலம் கழிக்கும்போது, நேரம் உன் கரங்களில் கனக்கிறது. உனக்கென கொடுக்கப்பட்ட வாழ்நாட்களில் ஒரு வினாடியைக்கூட வீணாக்கக்கூடாது. இறைவன் காலஸ்வரூபன், நேரம் இறைவனின் உடல்.

தாய் குழந்தைக்குப் பாலூட்டுவது அவள் கடமை. ஆனால், கடமை என்று நினைத்து அவள் அதைச் செய்வதில்லை. அன்பு மயமாகிப் பாலூட்டுகிறாள். தெய்வநிலைக்கு உயர்கிறாள். அப்படி நமது கடமைகளையும் அன்பு மயமாகிச் செய்யக்கூடுமானால் கடமை சுமையாகத் தெரியாது. அந்தப் பரிபக்குவத்தை எய்தும்போது நாம் கடவுள் தன்மையை எய்தியவர்களாவோம். கடமை உணர்வு வெளியே இருந்து உள்ளுக்குள் பாய்வது. அன்புணர்வு உள்ளேயிருந்து பிரவகிப்பது.

ஆன்மிக வெற்றியை அடைவதற்கு மிகவும் நேரான வழி நிஷ்காம கர்மமேயாகும். செயலின் பலனை நாம் அனுபவிக்க வேண்டும் என்று பற்றுதலில்லாமலும், அக்கறை கொள்ளாமலும் செயலே நிஷ்காமகர்மம் செயலை கடமையாக, அர்ப்பணமாக, வழிபாடாகச் செய்தல் வேண்டும். செயலும் பயனும் வெவ்வேறான வஸ்துக்கள் அல்ல. செயலின் முடிவுநிலை, உச்சகட்டம் முற்றுப்புள்ளி. பலனாகும் மலரே கனி. கனியே மலர். ஒன்று தொடக்கம், மற்றொன்று அதன் தார்மீகமான முடிவு. மலரே பழமாகிறது. செயலே அதன் விளைவுகளாகிறது. செயல் புரிவது ஒருவர் கடமை. நன்றாகச் செயல் புரியுங்கள். கடவுள் பயத்துடன் புரியுங்கள். அன்பினில் தோய்ந்து செயல் புரியுங்கள். மலருக்குப் பிறகு பழம் கனிவதுபோல, செயலை, விளைவுகள் இயல்பாகத் தொடரும். இடைவிடாத நம்பிக்கை, உற்சாகத்துடன் செயல் புரியுங்கள். வெற்றி நிச்சயம்.

Advertisement
சத்யசாய் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement