அன்பிருக்கும் இடத்தில் ஆனந்தம்
ஜூலை 21,2010,
20:07  IST
எழுத்தின் அளவு:

* ஆரோக்கியமான பிள்ளைக்கு அவன் விரும்புவதையும், நோயாளி பிள்ளைக்கு கசப்பு மருந்தையும் தான், தாய் கொடுப்பாள்.
நோயாளிப் பிள்ளை சீக்கிரம் குணமடைய வேண்டும் என்பதால் தான் கசப்பு மருந்தினைக் கொடுக்கிறாளே தவிர, பாசக்குறைவால் அல்ல. அதுபோலவே, கடவுளும் நம் நன்மைக்காகவே துன்பங்களைத் தந்து பக்குவப்படுத்துகிறார்.
* பெண்களை மிகவும் பலவீனமானவர்கள் என்று தவறாக எண்ணுகிறோம். ஆனால், உண்மையோ இதற்கு
நேர்மாறாக இருக்கிறது. பெண்களே ஆண்களை விட
மனவுறுதி உள்ளவர்களாகவும், சக்தி நிறைந்தவர்
களாகவும் இருக்கிறார்கள்.
* எதிர்பார்ப்பு இல்லாத அன்பே முழுமையானதாகும். அப்படிப்பட்ட அன்பு உள்ள இடத்தில் ஆனந்தம் பிறக்கும். உண்மை, தியாகம், அமைதி முதலிய நல்ல பண்புகளும் அன்பு இருக்குமிடத்தில் குடிகொள்ளும்.
* உலகில் உள்ள பற்றுக்களை விலக்காவிட்டால் கடவுளின் அன்பைப் பெற முடியாது. உலகப்பற்றுக்களில் நாம் பிணைக்கப்பட்டிருக்கும் வரை, கடவுளிடம் இரண்டறக் கலத்தல் என்பது இயலாத ஒன்றாகும்.
-சாய்பாபா

Advertisement
சத்யசாய் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement