தெய்வ அருள் பெற வழி
ஜூலை 21,2010,
20:07  IST
எழுத்தின் அளவு:

* கோயிலுக்குப் போனாலும் சரி, போகாவிட்டாலும் சரி, தெய்வம் நமக்கு
அருள்புரியும்.
* பிறரை ஏமாற்றுவதை நிறுத்தினாலே, தெய்வ அருளுக்கு பாத்திரமாகி விடுவோம்.
* மனதில் தூய்மையான எண்ணம் வேண்டும். பயமான, கபடமான, குற்றமான,
பகைமையான எண்ணங்களை அகற்ற வேண்டும். அவ்வாறு செய்தால், நம் உடல் முழுவதும்
தெய்வீகத்தன்மை பரவத் தொடங்கும்.
* வீட்டில் தெய்வத்தைக் காணும் திறமை இல்லாதவன், மலைச் சிகரத்தை எட்டிப்பிடித்து அங்கே தவம்
செய்தாலும் கடவுளை ஒருபோதும் காண முடியாது.
* கேட்டவுடனே நாம் கேட்ட அனைத்தையும் கொடுப்பதற்காக தெய்வம் இல்லை. பக்திப்பெருக்கினால் மனம் பக்குவம் பெற்ற பிறகுதான், நாம் கேட்ட வரத்தைத் தெய்வம் வழங்கும்.
* கோயிலில் மட்டுமே தெய்வம் இருக்கிறது என்று
நம்புபவர்கள், நம்மைச் சூழ்ந்திருக்கும் ஜனங்களிடம் தெய்வத்தைக் காண முயல்வதில்லை. உலகை இயக்கும் பரம்பொருளே இத்தனை கோடி ஜீவராசிகளாக நம்மைச் சுற்றி வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பதை உணருங்கள்.
-பாரதியார்

Advertisement
பாரதியார் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement