கடமையில் கருத்தாயிருங்கள்
ஜூலை 21,2010,
20:07  IST
எழுத்தின் அளவு:

* அறிவு வலிமை உடையது தான். அதற்காக, அறிவுடையவர்களை மட்டும் உயர்ந்தவர்கள் என்று எண்ணிக்கொண்டு, மற்றவர்களை இழிவாக நினைப்பது கூடாது.
* அறிவுடையவர்கள், இன்று பெரும்பாலும் தன்னிடம் இருக்கும் அறிவின் ஆற்றலைப் பயன்படுத்தி பிறரை நசுக்குவதிலும், கொள்ளையிடுவதிலும் பயன்படுத்துகின்றனர்.
* இறைவன் நமக்கு அறிவைத் தந்திருக்கிறான். அறிவை நமது வடிவமாக அமைத்திருக்கிறான். எல்லாவிதமான செல்வங்களுக்கும் அறிவுதான் வேராகத் திகழ்கிறது.
* அறிவு தான் நமக்கு ராஜா. மனமும், பொறிகளும், உடம்பும் அறிவுக்கு அடங்கி வாழவேண்டும். இல்லாவிட்டால் உடலுக்குத் தான் தீங்கு நேரிடும்.
* ஒரு பொருளுடன் உறவாடும் போது மனம் அப்பொருளின் வடிவமாக மாறிவிட வேண்டும். அப்போது தான் அப்பொருளைப் பற்றி நன்றாக முழுமையாக அறிய முடியும்.
* அறிவினைத் தெளிவாக்குங்கள். அறிவினை ஒருபோதும் தவறவிடாதீர்கள். ஓயாமல் உங்கள் கடமையில் கருத்தைச் செலுத்துங்கள். அப்போது எச்செயலைச் செய்தாலும் அச்செயல் நன்மையாக முடியும்.

Advertisement
பாரதியார் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement