பகவானுக்கு ருசி முக்கியமல்ல
டிசம்பர் 12,2007,
22:49  IST
எழுத்தின் அளவு:

'நான்' என்கிற அகந்தை எல்லாச் செயல்களையும் நாமே செய்கிறோம் என்ற தவறான கருத்தை உண்டாக்குகிறது. உண்மையில் நாம் ஒரு சிறு கருவியே; கர்த்தா அல்ல. இதை உணர்ந்துவிட்டால் அகந்தை நம்மிடமிருந்து வெளியேறிவிடும்.

* எவ்வளவுக்கெவ்வளவு பணிந்து நடந்து கொள்கிறோமோ அவ்வளவுக்கவ்வளவு நன்மை உண்டு.

* பகவானுக்கு ருசி முக்கியமல்ல; அடியார்களது பக்திதான் முக்கியம்.

* நம் மனம் யாரிடம் வசப்படுகிறதோ அவரே சரியான குரு.

* பரம்பொருளைத் தொடர்ந்து விடாமல் பற்றி நிற்பதே சமாதி எனப்படும்.

* புதிய ஆசைகளை வளர்க்காதீர்கள். புதிய வாசனைகளைத் தேடிக் கொள்ளாதீர்கள். அதுவே நீங்கள் செய்திருக்கக்கூடிய தவற்றிலிருந்து மீளுவதற்கு உரிய பிராயச்சித்தம் ஆகும்.

* பிறப்பும் இறப்பும் வாழ்க்கையின் எல்லைகள். இந்த இரண்டையும் கடந்து நிற்பதே ஆன்மா. அதை உணர்ந்தால் இந்த இரண்டுமே பொருளற்றதாக ஆகிவிடும். தன்னை உணர்ந்த மனிதன் - இந்த நிலைகளைக் கடந்து விடுகிறான். இறப்பு அவனைப் பாதிப்பதில்லை.

* ஒரு மனிதன் தனது வாழ்க்கையில் தேடிக்கொள்ளும் நற்பலன்கள் அதிகமாக இருந்தால், அதை ஒட்டி அவனுக்கு மரணத்துக்குப் பின் இனிய அனுபவம் ஏற்படுகிறது. கெட்ட பலன்களே அதிகமாக இருந்தால் துன்பம் நிறைந்த அனுபவம் உண்டாகிறது.

* நூல்களில் மூன்றுவித தீட்சைகள் கூறப்பட்டுள்ளன. 'ஹஸ்த தீட்சை' என்பது சீடனின் சிரசைத்தொட்டு அருள் புரிதல், '‌சட்ச, தீட்சை' என்பது அருட்பார்வையால் தீட்சை அளிப்பது. 'மானசீக தீட்சை' என்பது மனதினால் அருள் புரிதல். இவற்றில் மானசீக தீட்சையே அனைத்திலும் சிறந்தது.

Advertisement
ரமணர் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement