சோர்வுக்கு மருந்து
டிசம்பர் 12,2007,
22:44  IST
எழுத்தின் அளவு:

விழித்து எழு! வென்று விடுவோம் என்ற நம்பிக்கை உன்னுள்ளே பிறக்கட்டும். உன்னுடைய உடம்பின் ஒவ்வொரு அணுவிலும் இந்த நம்பிக்கை பரவட்டும். அப்படிச் செய்தால்தான் உன்னால் எதையும் சாதிக்க முடியும்.

நீ ஆயிரம் மருந்துகளை உன்னுடைய வியாதிகளின் பொருட்டு சாப்பிடலாம். ஆனாலும், நோயில் இருந்து மீண்டுவிட வேண்டும் என்ற தளராத நம்பிக்கை உனக்கு இல்லாமல் போய்விட்டால் நீ குணம் அடைவது முடியாத ஒரு விஷயம்தான்.

நீ ஒருபோதும் உணர்ச்சிவசப்படாதே! உணர்ச்சிவசப்படுவதால் பரபரப்பு ஏற்படுகிறது. அதற்கு இடம் தராதே. உன்னுடைய பொறுமையை இழக்காதே! எரிச்சல் அடையாதே. உனக்கு எப்படிப்பட்ட சூழ்நிலை ஏற்பட்டாலும் நிர்ச்சலனமாக இருக்க பழகிக்கொள். மற்றவர்கள் உன்னை எப்படி நடத்தினாலும் நீ கோபத்துக்கு மட்டும் இடம் தரக்கூடாது.

நீங்கள் மிகவும் சோர்ந்து போய் இருக்கும்போது ஒருபோதும் தூங்கச் செல்லவேண்டாம். இடையிடையே ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள். இத்துடன் உங்களால் முடிந்த மிக எளிமையான உடற்பயிற்சிகளைச் செய்யுங்கள். மீண்டும் புத்துணர்ச்சியைத் தரக்கூடிய உங்களுக்கு பிடித்தமான எதையாவது படியுங்கள். உங்களுக்கு மிகவும் பிடித்த இசையைக் கேளுங்கள். சுடச் சுட ஒரு கோப்பை பால் அருந்துங்கள்.

உன்னிடம் உள்ள கடவுள் உணர்வு ஒன்றுதான் உனக்குக் கிடைக்கும் உண்மையான ஒரே உதவி.

மனிதர்கள் அந்தக் கடவுளுடைய சக்தியைக் கொண்டுதான் இன்று வரை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், அவற்றைத் தங்களுடைய சொந்த நோக்கங்களுக்காகவும் சுயநலமான திட்டங்களுக்காகவும் தான் பயன்படுத்துகிறார்கள்.

Advertisement
ஸ்ரீ அன்னை ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement