அன்பே தலைசிறந்தது
ஜூலை 29,2010,
16:07  IST
எழுத்தின் அளவு:

* பகைமை சண்டைகளை எழுப்பிவிடும். அன்போ, தனக்கு இழைத்த தீங்கு அனைத்தையும் மன்னித்து மறக்கும். பகை நெஞ்சம் கொண்டோர் தரும் நல்ல இறைச்சி உணவை விட, அன்புள்ளம் கொண்டவர் தரும் மரக்கறி உணவே மேல்.
* நம் உடமையை எல்லாம் வாரி வழங்கினாலும், நம் உடலை சுட்டெரிப்பதற்கென்று ஒப்புவித்தாலும் நம்மிடம் அன்பு இல்லாவிட்டால் பயன் ஒன்றுமில்லை.
* மலைகளை இடம் பெயரச்செய்யும் அளவுக்கு நிறைந்த நம்பிக்கை கொண்டிருப்பினும், நம்மிடம் அன்பு இல்லையேல் நாம் ஒன்றுமில்லை.
* நீங்கள் அறிவிலும் அனைத்திலும் உய்த்துணரும் பண்பிலும் மென்மேலும் வளர்ந்து, அன்பால் நிறைந்து, சிறந்தவற்றையே ஏற்றுச் செயல்படுமாறு இறைவனை வேண்டுங்கள்.
* அன்பர்களே! ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துவோமாக. ஏனெனில், அன்பு கடவுளிடமிருந்து வருகிறது. அன்பு செலுத்தும் அனைவரும் கடவுளிடமிருந்து பிறந்தவர்கள்.
* நம்பிக்கை, எதிர்நோக்கு, அன்பு ஆகிய மூன்றுமே நிலையாய் உள்ளன. இருந்தாலும் இவற்றுள் அன்பே தலைசிறந்தது.
-பைபிள் பொன்மொழிகள்


Advertisement
பைபிள் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement