அகங்காரம் இருக்கும் வரை முக்தி இல்லை
டிசம்பர் 12,2007,
22:57  IST
எழுத்தின் அளவு:

பாலும் நீரும் கலந்தது போன்றது உலகம். நீங்கள் ஓர் அன்னம் போன்று இருந்து, நீரைத் தவிர்த்து பாலைப் பருகுங்கள்.

ஏகாந்தத்திலே (தனிமை) இருந்து நீங்கள் தியானம் புரியும்போது உங்கள் குடும்பத்தவரிடமிருந்து உங்களை முற்றிலும் பிரித்துக் கொண்டு தனித்திருங்கள்.

இல்லறத்தாருக்கு ஜீவர்களிடத்து அன்பு, பக்தர்களுக்குச் சேவை; கடவுளின் புனித நாம உச்சாடனம் ஆகியவை கடமைகளாகும்.

பணம் நமக்குப் பெற்றுத் தருவதெல்லாம் சோறும், கறியுமேயாகும். பணத்தையே உங்களுடைய உயிரும் உடலுமெனவோ, உங்களது ஒரே குறியும் நோக்கமும் எனவோ கருதாதீர்கள்.

அகங்காரம் இருக்கும் வரையில் ஞானமும் முக்தியும் கைகூடாது; பிறப்பும் இறப்பும் இருந்தே தீரும்; நீங்காது.

இல்லறத்தில் நம்பிக்கை கொள்ளுங்கள். கடவுளை நம்பி இருங்கள்; பின்னர் நீங்களாக எதையுமே செய்ய வேண்டியிராது. அன்னை காளி உங்கள் பொருட்டு யாவற்றையும் தாமே செய்வாள்.

சம்சாரமாகிய பெருங்கடலில் ஆறு முதலைகள் உள்ளன. காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாச்சரியம் என்பவையே அந்த முதலைகளாம்.

பெண்ணாசையை ஒழித்தவன் உலகத்தையே துறந்தவன் ஆவான். அவனுக்கு இறைவன் வெகு அருகில் இருக்கிறார்.

மாயை என்பது தாய், தந்தை, சகோதர, சகோதரிகள், மனைவி, மக்கள், உற்றார், உறவினர் முதலியவர்களிடம் ஒருவனுக்கு உண்டாகும் பாசமாகும். எல்லா உயிர்களிடமும் சமமாகப் பரவும் அன்புக்கு தயை என்று பெயர்.

Advertisement
ரமணர் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement