உள்ளம் கடவுளிடம் இருக்கட்டும்!
ஆகஸ்ட் 12,2010,
16:08  IST
எழுத்தின் அளவு:

* புலி மற்ற மிருகங்களைக் கொன்றுவிடும். அதுபோல பக்தி என்னும் புலி காமம் குரோதம் முதலானவற்றைக் கொன்றுவிடுகிறது. இதயத்தில் பக்தி வளருமானால் காமமும் ஏனைய மிருக உணர்ச்சிகளும் அடியோடு மறைந்துவிடும்.
* பொட்டலம் கிழிந்து கடுகு சிதறிவிட்டால் அவற்றை ஒன்று சேர்ப்பது மிகவும் கடினம். அதுபோல பல்வேறு திசைகளில் ஓடுகின்ற மனத்தை உட்குவித்து ஒருமுகப்படுத்துவது எளிதான செயல்அல்ல. மனதை ஒருமுகப்படுத்துவதற்கு நல்லவர்களுடன் நாடிச் சேர்வது மட்டுமே வழி.
* சிறு இழை ஒன்று நீட்டிக் கொண்டிருந்தாலும் ஊசியின் காதுவழியாக நூல் நுழைய முடியாது. உலகப் பொருட்களில் சிறிது பற்று இருந்தாலும் நம்மால் கடவுளை அணுக முடியாது.
* மனைவி, மக்கள், பெற்றோர் அனைவருடனும் சேர்ந்து குடும்பமாக வாழுங்கள். ஆனால், உள்ளத்தை மட்டும் கடவுளிடம் இருத்துங்கள்.
* முட்செடிகளை விரும்பித் தின்னும் ஒட்டகத்தின் வாயில் ரத்தம் ஒழுகும். அதுபோல, உலகியல் இன்பங்களில் நாட்டம் கொண்டு மனிதன் எத்தனையோ வேதனைகளையும், துன்பத்தையும் அனுபவிக்கிறான்.
-ராமகிருஷ்ணர்


Advertisement
ராமகிருஷ்ணர் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement