பெண்ணைத் தாயாகப் பாருங்கள்
டிசம்பர் 13,2007,
18:02  IST
எழுத்தின் அளவு:

ருசியான மாங்காய் ஊறுகாயைப் பார்த்ததும் வாயில் நீர் சுரக்கும். மாற்றினத்தவரைக் காணும்போது (அதாவது ஆண் பெண்ணையும், பெண் ஆணையும்) நம்மையறியாமலே அப்படியொரு உணர்வு ஏற்படும். அது இயல்பான விஷயம் தான். மழை இலேசாய் பெய்தால் தரை ஈரமாகிறது, அதே மழை பலமாக பெய்துவிட்டால் தரை சகதியாகி விடுகிறதில்லையா?

சாதனையை தொடங்கிய காலத்தில் மாற்றினத்தவருடன் அதிகம் நெருங்கிப் பழகாமல் இருப்பது சாதகருக்கு நல்லது. எப்போதுமே ஒரு இடைவெளி இருக்க வேண்டும். பெண்ணை தாயாகவோ, சகோதரியாகவோ கொள்ள வேண்டும். ஆணை தந்தையாகவோ, சகோதரனாகவோ பாவித்துப் பழக வேண்டும்.

எவ்வளவுதான், எச்சரிக்கையாக இருந்தாலும், இடறி விழுகிற சந்தர்ப்பங்கள் இருக்கவே செய்யும். அவரவரின் புறத்தோற்றங்களில் ஈடுபடாமல், உன்னதமான அம்சத்துக்கு முக்கியத்துவம் தர வேண்டும். அந்நிலையில் ஒவ்வொரு பெண்ணையும் இறைவியின் வடிவமாகவே பார்க்க வேண்டும். பெண்ணை வெறும் பெண்ணாக மட்டுமே பார்க்கிறபோது நீங்கள் தவறான பாதையில் கால் வைத்து விடுகிறீர்கள்.

ஒரு ஆண் சாதகருக்கு பரம எதிரி பெண், ஒரு பெண் சாதகருக்கு பயங்கர எதிரி ஆண். அதுமட்டுமல்ல, பெண் இயற்கையில் பலவீனமானவள். ஆனால், பல நற்பண்புகளை வளர்த்துக் கொண்டு ஆணை விடத் திடமானவளாகி விடுவாள்.

பாலுணர்வைக் கடந்து பெண்கள் இருக்கிறார்கள். ஆனால், அவர்களுடைய எண்ணிக்கை லட்சத்துக்கு ஒன்றிரண்டாக மட்டுமே இருக்கிறது. லட்சியத்தில் ஒரு பெண் தன்னை காம விவகாரத்துடன் ஒரு ஆண் நெருங்கினாலும் அவனுக்கு ஆன்மிகக் கொள்கைகளைப் போதிக்கக் கூடியவளாய் இருக்கிறாள்.

Advertisement
மாதா அமிர்தனந்தமயி ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement