பெற்றவர்களின் கடமை
ஆகஸ்ட் 25,2010,
22:08  IST
எழுத்தின் அளவு:

* கூரான கோடரியால் சந்தனமரத்தை வெட்டும்போது, அம்மரம் கோடரி மீது வெறுப்பை உமிழ்வதில்லை. கோபப்படுவதுமில்லை. மாறாக, தன் வாசனையைக் கோடரிக்கு வழங்குகிறது. இதுவே, நல்லோரின் இயல்பு.
* யாருடைய நட்பை நாடுகிறோமோ அவரின் குணங்கள் நம்மிடம் படிப்படியாக உண்டாகும். நல்லவர்களின் நட்பு நமக்கு வழிகாட்டுகிறது. தீயவர்களின் நட்பு வாழ்வின் தடத்தையே மாற்றி அழித்துவிடுகிறது.
* குழந்தைகள் மனம் மிகவும் மென்மையானது. தரமில்லாத நூல்களையோ, படங்களையோ அவர்கள் படிக்கவோ, பார்க்கவோ கூடாது. பெற்றோர் தான் பிள்ளைகளுக்குச் சரியான வழிகாட்டிகளாக இருந்து துணை செய்ய வேண்டும்.
* கொடியில் வளரும் புடலங்காயை நேராக வளர சிறுகல்லைக் கட்டி தொங்கவிடுவர். அதுபோல, வளையும் மனக்கோணலை நேராக்க, கட்டுப்பாடு என்னும் கல்லைக் கட்டுவது அவசியம். அதனால் பிள்ளைகள் விஷயத்தில் பள்ளி ஆசிரியர்களும், பெற்றோர்களும் மிகுந்த பொறுப்புள்ளவர்களாக இருப்பது அவசியம்.
-சாய்பாபா

Advertisement
சத்யசாய் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement