உறவினர்களுடன் நடக்கும் முறை
ஆகஸ்ட் 25,2010,
22:08  IST
எழுத்தின் அளவு:

 நபித்தோழர்: இறைத்தூதரே! தானத்தில் சிறந்தது எது?
 நபிகள் நாயகம்(ஸல்): தேவை யுடையோருக்கு வழங்குவதே சிறந்த தானம் ஆகும். உறவினர்களுக்கு வழங்குவதிலிருந்து தானத்தை துவக்குங்கள். ஏழைகளுக்கு தானம் வழங்கினால் ஒரு நன்மை கிட்டும். உறவினர்களுக்கு தானம் வழங்கினால் இரண்டு நன்மைகள் கிட்டும். ஒன்று தானம் வழங்கியதற்காக; மற்றொன்று உறவுகளை இணைத்ததற்காக!
 நபித்தோழர்: இறைத்தூதரே! எனக்கு சில உறவினர்கள் உள்ளனர். அவர்களின் உரிமைகளை நான் நிறைவேற்றுகின்றேன். அவர்கள் என் உரிமைகளை நிறைவேற்றுவதில்லை. நான் அவர்களுடன் நல்ல விதமாக நடந்து கொள்கிறேன். அவர்கள் என்னை மோசமாக நடத்துகின்றார்கள். நான் அவர்களுடன் பொறுமையுடனும், சகிப்புத்தன்மையுடனும் நடந்து கொள்கிறேன். அவர்கள் என்னுடன் அறிவீனமாக நடந்து கொள்கிறார்கள்.
 நபிகள் நாயகம்(ஸல்): நீர் சொல்வதைப் போன்றே அவர்களுடன் நடந்து கொண்டிருந்தால் அது அவர்களின் முகத்தில் கரிபூசுவது போன்றதாகும். இறைவன் அவர்களுக்கு எதிராக எப்போதும் உமக்கு உதவிய வண்ணம் இருப்பான். நீர் இதே பண்பில் நிலைத்திருக்கும் வரை!
(வேதவரிகளும் தூதர் மொழிகளும் நூலில் இருந்து)

Advertisement
குரான் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement