இன்று மகாசங்கடஹர சதுர்த்தி
ஆகஸ்ட் 25,2010,
22:08  IST
எழுத்தின் அளவு:

 ஆவணி தேய்பிறை சதுர்த்தியை, மகாசங்கடஹர சதுர்த்தியாக அனுஷ்டிக்கிறோம். இந்நாளில் பாரதியார் அருளிய விநாயகர் துதியை படித்து அருள் பெறுவோம்.
* கேட்டதை அருளும் கற்பக மூர்த்தியே! உன்னைப் போற்றுகின்றேன். ஆனை முகத்தோனே! உன் மலர் போன்ற திருவடிகளுக்கு வெற்றி உண்டாகட்டும். அருள்நிறைந்தவனே! நீ என் இதயத்தாமரையில் எப்போதும் வீற்றிருக்க வேண்டும்.
* நிலவினைத் தலையில் சூடியிருப்பவனே! உன் திருவடிகளை சிந்திப்பவருக்கு நன்மைகள் பல உண்டாகும். ஆண்மை பெருகும். எட்டுத்திக்கும் வெற்றிக்கொடி நாட்டும் புகழ் மேலோங்கும்.
* விநாயகனே! உன்னை வணங்கினால் அச்சம் தீரும். ஆற்றல் பெருகும். விஷம், பகை, நோய் போன்ற தீமைகள் பறந்தோடும். நித்யவாழ்வு உண்டாகும். வித்தைகள் வளரும். என்றென்றும் நிலைத்திருக்கும் அமரவாழ்வு வந்து சேரும்.
* கணபதியே! திருவருளை என் மீது பொழிவாயாக. அதற்கு நன்றிக்கடனாக உனக்கு ஒரு பொற்கோயில் கட்டி வழிபடுவேன். வீணாகக் காலம் கழிக்காமல் சக்தி மைந்தனும், சங்கரன் புதல்வனுமான உனது திருவடிகளைச் சரணடைகிறேன்.

Advertisement
ஹரிதாஸ்கிரி சுவாமி ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement