சகோதரர்களை நேசியுங்கள்
ஆகஸ்ட் 25,2010,
22:08  IST
எழுத்தின் அளவு:

* அந்நியரை வரவேற்று விருந்தோம்ப மறவாதீர்கள். இவ்வாறு விருந்தோம்பியதால் சிலர் தங்களை அறியாமலே வான தூதர் களையே மகிழ்ச்சிப்படுத்தியதுண்டு. முணுமுணுக்காமல் ஒருவருக்கொருவர் விருந்தோம்புங்கள்.
* மிகச் சிறியோராகிய என் சகோதரர் சகோதரிகளுக்குள் ஒருவருக்கு நீங்கள் செய்ததை எல்லாம் எனக்கே செய்தீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.
* நீர் விருந்துக்கு அழைக்கும்போது ஏழைகளையும், உடல் ஊனமுற்றோரையும், கால் ஊனமுற்றோரையும், பார்வையற்றோரையும் அழையும்.
* நேர்மையாளரின் பாதை வைகறை ஒளிபோன்றது. அது மேலும் மேலும் பெருகி நண்பகலாகின்றது.
* சான்றோரின் ஒளி சுடர்வீசிப் பெருகும். பொல்லாரின் விளக்கோ அணைக்கப்படும்.
* நீங்கள் எல்லோரும் ஒளியைச் சார்ந்தவர்கள். பகலில் நடப்பவர்கள். நாம் இரவையோ, இருளையோ சார்ந்தவர்கள் அல்ல.
* நீங்கள் சகோதரர்கள் அல்லவா? ஏன் ஒருவருக்கொருவர் தீங்கிழைத்துக் கொள்கிறீர்கள்?
* தம் சகோதர சகோதரிகளை வெறுப்போர் அனைவரும் கொலையாளிகள்.
--பைபிள் பொன்மொழிகள்

Advertisement
பைபிள் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement