துணிவைக் கைவிடாதீர்கள்
ஆகஸ்ட் 31,2010,
19:08  IST
எழுத்தின் அளவு:

* சான்றோரின் வாழ்நாள்களை ஆண்டவர்
அறிவார். அவர்களின் உரிமைச் சொத்து என்றும் நிலைத்திருக்கும்.
* தூங்கிக் கொண்டேயிருப்பதை நாடாதே.
கண் விழித்திரு. உனக்கு வயிறார உணவு கிடைக்கும்.
* உங்களிடம் இருக்கிற துணிவைக் கைவிடாதீர்கள். இதற்கு மிகுந்த கைமாறு உண்டு.
* எவரும் இரு தலைவர்களுக்குப் பணிவிடை செய்ய
முடியாது. ஏனெனில், ஒருவரை வெறுத்து மற்றவரிடம் அவர் அன்பு கொள்வார் அல்லது ஒருவரைச் சார்ந்து கொண்டு மற்றவரைப் புறக்கணிப்பார்.
* நண்பர் கொடுக்கும் அடிகள் நல்நோக்கம் கொண்டவை. பகைவர் தரும் முத்தங்களோ வெறும் முத்தப்பொழிவே.
* கதிரவன் உனக்கு இனி பகலில் ஒளி தர வேண்டாம். பால்நிலவும் உனக்கு ஒளி வீச வேண்டாம். ஆண்டவரே இனி உனக்கு முடிவில்லாப் பேரொளி.
* இறைப்பற்றோடு சகோதர நேயமும், சகோதர நேயத்தோடு அன்பும் கொண்டு விளங்குமாறு முழுஆர்வத்தோடு முயற்சி செய்யுங்கள்.


-பைபிள் பொன்மொழிகள்


Advertisement
பைபிள் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement