தெய்வத்துவம் எல்லாருக்கும் உள்ளது
டிசம்பர் 13,2007,
18:12  IST
எழுத்தின் அளவு:

நீங்கள் யாவரும், எப்போதும் பரஸ்பர அன்புடன் ஒருவருக்கொருவர் கருணையுடனும் இரக்கத்துடனும் உதவி செய்து கொண்டு நல்லறத்துடன் கூடிய இல்லற வாழ்க்கை நடத்தி வருபவர்களாகவும் நல்லறிவை வளர்ப்பவர்களாகவும் கஷ்டப்படுவோர்களுக்கு தாமதமின்றி சகாயம் செய்து, உத்தம மனிதர்களாக வாழ வேண்டுமென்பதே சாதுக்களான நல்லோர்களுக்கு நான் சொல்லும் அறிவுரை.

உயிரினங்கள் யாவும் தெய்வத்துவத்திலிருந்து தோன்றி தெய்வத்துவத்திலேயே வாழ்ந்து தெய்வத்துவத்திலேயே இணைந்து விடுகிறது.

ஆக்கல், காத்தல், இணைதல், (ஸ்ருஷ்டி, ஸ்திதி, லயம்) மூன்றிற்கும் தெய்வத்துவமே காரணம். சங்கல்பம் எனும் எண்ணத்திலிருந்தே மனிதன் பிறந்து, அதனாலேயே வளர்ந்து, அதிலேயே சேர்ந்து விடுகிறான். 'யத் பாவம் தத்பவதி' - எப்படி எண்ணுகிறானோ அப்படியே ஆகிறான்.

எண்ணத்திலிருந்து சொல்லும் சொல்லிலிருந்து செய்கையும் வருகிறது. செய்கையின்படியே விளைவும் இருக்கும்.

உத்தமமான எண்ணங்களை வளர்த்து உத்தமமான சொற்களே பேசி உத்தமமான செய்கைகளில் ஈடுபட்டு லட்சிய வாழ்க்கை வாழ வேண்டும்.

மனிதன் ஆத்ம தர்மத்தை கடைப்பிடிக்க வேண்டுமேயன்றி சரீர தர்மத்தைக் கடைப்பிடிக்கலாகாது. இந்திரிய தர்மம் மிருக தர்மம். மனிதன் பின்பற்ற வேண்டியது தெய்வத்துவமே.

இங்கே பிறந்தவர் ஒவ்வொருவருக்கும் தெய்வசக்தி உள்ளது.

மனிதன் தன்னுள் உள்ள தெய்வத்துவத்தை வெளிக்காட்டவே பிறப்பு எடுக்கிறான். மனிதப்பிறவி புனிதமானது. வாழத்தக்கது. லட்சியத்தை அடைய உதவக்கூடியது. மனிதத்துவமே தெய்வத்துவம் என்பதை உணர்த்தவே உலகில் அவதாரங்கள் தோன்றுகின்றன.

Advertisement
சத்யசாய் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement