ஒற்றுமையாக இருப்போம்
செப்டம்பர் 21,2010,
18:09  IST
எழுத்தின் அளவு:

* வயதாகிவிட்டது என்ற உணர்வையும்,
அதனால் நம்மால் ஏதும் செய்ய முடியவில்லையே என்ற சோர்வையும் விட்டுத் தள்ளுங்கள். நடந்து போனதை எண்ணில் மனச்சுமையை வளர்த்துக் கொள்ளாதீர்கள். இருப்பதை உற்சாத்துடன் ஏற்றுக் கொள்ளுங்கள். செய்யும் செயலில் உங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ளுங்கள்.
* பிறருக்கு உதவி செய்வதில் தான் உண்மையான மகிழ்ச்சி இருக்கிறது என்ற உண்மையை எப்போதும் நினைவில் வைத்துக் கொளளுங்கள். பொறாமையால் மனம் புழுங்கினால் அந்த இடம் நரகம். நல்ல எண்ணங்களை வளர்த்துக் கொள்ளுங்கள். நல்ல எண்ணங்கள் நம் மனதில் தெய்வீக ஆற்றலை உண்டாக்குகின்றன.
* உலக சம்பந்தமான பெயருக்கும் புகழுக்கும் கவுரவத்திற்கும் ஆசைப்பட்டு உங்களுடைய நாணயத்தைத் துறக்காதீர்கள். ஒற்றுமையையும், ஒன்றாக உழைக்கும் மனப்பான்மையையும் வளர்த்துக் கொள்ளுங்கள்.
* தூய சிந்தனையாக, மனசாட்சியாக நம் இதயத்தில் இருப்பவனே, இறைவன் அவரை தேடி ஓட வேண்டிய அவசியம் இல்லை.
* உடல் நோய்க்கு பல மருந்துகள் உண்டு. ஆனால், உள்ள நோய்க்கு தன்னலமற்ற சேவையே மருந்து
- சாய்பாபா


Advertisement
சத்யசாய் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement