குழந்தையாய் நினைத்து பார்
டிசம்பர் 21,2007,
22:14  IST
எழுத்தின் அளவு:

*ஆணோ, பெண்ணோ பலமுள்ளவர்கள்தாம். அதே சமயம் பலவீனமானவர்களும் தான். இருபாலருமே சாதனைக்குரிய காலத்தில் இச்சையைத் தூண்டக் கூடிய சூழ்நிலைகளைத் தவிர்ப்பது நல்லது.

*ஆன்மிகத்தில் மாற்றினத்தைப் பகையாய்க் கருத வேண்டியதன் அவசியம் என்ன? நம்முடைய பெற்றோர்கள் உடலுறவு கொள்ளும் போது ஒரு பண்புமிக்க நேர்த்தியான குழந்தையைப் பெற வேண்டுமென்கிற எண்ணம் அவர்களுக்கு இருந்திருக்காது. அவர்கள் விரும்பியது இன்பந்தான். அதே எண்ணந்தானே அவர்களுடைய ரத்தத்தில் தோன்றிய நமக்கும் இருக்கும். மாற்றினத்தவரைப் பார்க்கும்போது அவர்கள் நமக்கு இன்பசுகம் தருகிறவர்கள் என்கிற எண்ணமே மேலோங்கியிருக்கிறது. இந்த ரசனையை அகற்ற வேண்டுமெனில் ஒருவரை சகோதரனாகவோ, சகோதரியாகவோ பாவிப்பது அவசியம். அது சுலபமில்லைதான். ஆனால் மன உறுதியோடு இருந்தால் சாத்தியமாகாமல் போகாது.

* ஒரு குழந்தையை ஆடையில்லாமல் பார்க்கும்போது நமக்குள் விரசமாய் எதுவும் தோன்றாது. மனம்தான் எதற்கும் எல்லாவற்றுக்கும் காரணம். ஒருவரைக் குழந்தையாய் பார்க்கும் போது நமக்குள் ஆபாச எண்ணம் தலை தூக்காது. அவரை வளர்ச்சியுற்றவராய் காணும் போது காம இச்சை ஏற்படவே செய்யும். எல்லாமே மனதைப் பொறுத்தது.

*விழிப்பு நிலையில் மனம் இயங்குகிறது. அப்போது உலகம் பன்மையடைகிறது. ஆழ்ந்து உறங்கும்போது மனம் தனது இயக்கத்தை நிறுத்திக் கொண்டு விடுகிறது. அப்போது உலகமும், பொருட்களும் மறைந்து போகின்றன. காலையில் நாம் விழித்ததும் மனம் திரும்பவும் இயங்குகிறது. கண்ணெதிரே உலகம் காட்சியாய் எழுகிறது.

கடவுளிடத்தில் மனதை ஒருமுகப்படுத்துவதன் மூலம் எண்ணங்களைக் கட்டுப்படுத்தலாம்.

Advertisement
மாதா அமிர்தனந்தமயி ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement