சோதனைகளை ஏற்றுக் கொள்ளுங்கள்
டிசம்பர் 21,2007,
22:16  IST
எழுத்தின் அளவு:

* சோதனைகள் என்பவை அவன் அருளுக்கே அடையாளம். அவன் கோபத்துக்கு அல்ல. அவன் இனிமையே வடிவானவன். இனிப்பு எப்படி கசக்க முடியும்?

*கரும்பு வெட்டப்பட்டு, பிழியப்பட்டு, கொதிக்க வைக்கப்பட்டு, வடிகட்டப்படுவதை வரவேற்க வேண்டும். ஏனெனில் இச்சோதனைகள் இல்லை எனில் அக்கரும்பு காய்ந்து விடும். ஒருநாளும் இனிக்காது. அதுபோலவே மனிதனும் தனக்கு ஏற்படும் சோதனைகளை விரும்பி ஏற்க வேண்டும். ஏனெனில் இவற்றால்தான் உள்ளிருக்கும் ஆத்மாவிற்கு இனிமையைக் கூட்டித்தர முடியும்.

* உங்களில் சிலருக்குச் சோதனைகளும், ஏமாற்றங்களும் ஏற்படும்போது நான் உங்களைப் புறக்கணித்துவிட்டதாகத் தோன்றலாம். ஆனால் இவை போன்ற கஷ்டங்கள் உங்களுடைய குணத்தை வலுப்படுத்தும். உங்களுடைய நம்பிக்கையை ஊர்ஜிதப்படுத்தவும் செய்யும். சுவரில் படத்தை மாட்டுவதற்காக ஆணி அடிக்கும்போது, ஆணியை அது நன்றாக பதிந்திருக்கிறதா? படத்தைத் தாங்கும் வலிமை உள்ளதா என்று பார்க்க ஆட்டிப் பார்க்கிறோம் அல்லவா! அதுபோலவே நம்முடைய மனதில் இருக்கும் பகவானின் படம் (உருவம்) கீழே விழுந்து உடைந்துவிடாமல் இருக்க இதயத்தில் அடிக்கப்பட்டிருக்கும் பகவத்நாமா என்ற ஆணியைச் சோதனைகள் மூலம் அசைத்துப் பார்த்து அதன் உறுதியைத் தீர்மானிக்கிறோம்.

* பரிபூரண ஞானத்தை அடைய படிப்பு மட்டும் போதாது.

* பிசைந்த மாவு பக்குவப்படுகின்றது. இன்னல்களைச் சந்தித்தவனும் பக்குவப்படுகிறான்.

* தோட்டக்காரன் மலர்ந்த பூக்களைப் பறிப்பதைப் பார்த்து மொட்டுகள் நாமும் பறிக்கப்பட்டு இறைவன் அடியை அடைய வேண்டுமென எண்ணுகின்றன. அந்த எண்ணமே அவற்றை மறுநாள் மலரச் செய்கிறது.

Advertisement
சத்யசாய் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement