குழந்தையிடம் என்ன சொல்வீர்கள்?
டிசம்பர் 21,2007,
22:19  IST
எழுத்தின் அளவு:

* எது கோரிக்கையற்றதோ அதுதான் உண்மையான வழிபாடு. அதுவே முழுமையானது. 'பிரபுவே, தங்கள் திருவுளப்படி நடக்கட்டும். தாங்கள் வழங்குகிற எதுவும் எமக்கு மகிழ்ச்சியை, பாதுகாப்பை அளிப்பதாகவே இருக்கும்,'' என்று பிரார்த்தியுங்கள்.

* உங்களின் சொந்த விருப்பங்களை இறைவனுடைய விருப்பமாய் எண்ணிக் கொண்டுவிடக்கூடாது. 'உமது திருவுளப்படியே நடக்கட்டும்' என்கிறபோது அகந்தை சரணடைகிறது.

* வழக்கமான வேலைகளை மட்டும் செய்து கொண்டு ஓய்வாக இருங்கள். இதனால் ஓய்வும் கிடைக்கும், அமைதியும் கிட்டும்.

* உதயமாகும் புதிய உலகத்துக்கு நாம் சாட்சியாயிருக்கிறோம். அதற்கான பாதையும் புதிது. இதற்கு முன் யாரும் தடம் பதித்திராதது. இது ஒரு தொடக்கம். உலகளாவிய தொடக்கம். எனவே, இது முற்றிலும் எதிர்பார்த்திராத ஒரு சாகசம். இதற்கு முன் உங்களுக்குத் தெரிந்திருந்தவைகளையும், திட்டமிட்டவைகளையும் ஒருபுறம் ஒதுக்கி வைத்துவிட்டு, இதுவரை அறிந்திராத புதிய உலகை நோக்கி நடைபோடுங்கள்.

* ஒருவர் தனது இடர்பாடுகளுக்கு எதிராக, குறைபாடுகளுக்கு எதிராக தெளிவற்ற நிலைக்கு எதிராகப் போராட வேண்டியிருக்கிறது. நம் எல்லோருடைய வாழ்விலும் இதே நிலைமைதான். அதனை எதிர்கொள்ள துணிவும், வீரமும் தேவை. ஒட்டுமொத்த நாகரிகத்தையும் இருட்டில் தள்ளும் சீர்கேடுகளிலிருந்து நாம் மீண்டாக வேண்டும்.

குழந்தை ஆர்வத்தில் நிரம்பி வழிகிறது. 'வாழ்க்கை கடினமானது, மோசமானது' என்று அவர்களிடம் சொல்லாதீர்கள். இன்று மோசமாய் தெரிவதெல்லாம் நாளை அழகாகிவிடும் என்று சொல்லுங்கள்.

Advertisement
ஸ்ரீ அன்னை ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement