அருள்புரிவாய் அபிராமியே!
அக்டோபர் 11,2010,
19:10  IST
எழுத்தின் அளவு:

* ஈசனின் ஒரு பாகத்தில் இருக்கும்
உமையவளே! தாயே! வாழ்க்கையில்
அல்லல் பட இருந்த போது, பாத கமலங்களை என் தலைமேல் வலிய வைத்து
ஆட்கொண்டமைக்காக என் நன்றி.
* நாய் போல கடையவனான என்னையும் ஒரு பொருளாக மதித்து அருள்செய்தவளே! அபிராமித்தாயே! உன் அடியவனாக வலிய ஏற்று கொண்டாய். உன்னை அறியும் அறிவையும் தந்தாய். தாயே! மலைமகளே! சிவந்த கண்களைக் கொண்ட
திருமாலின் சகோதரியே! உன்னைப் போற்றுகிறேன்.
* என்றும் நிலைத்த அழகு கொண்டவளே! செந்தூரம் போன்ற சிவந்த நிறம் கொண்டவளே! காளியே! உன் மலர்போன்ற திருப்பாதங்களையே எப்போதும் என் மனம் சிந்தித்துக் கொண்டிருக்கட்டும்.
* அன்னையே! மனிதர்களும், தேவர்களும், தவம்
செய்யும் ஞானிகளும் உன் திருவடிகளையே
சரணடைந்து வணங்குகின்றனர். புனிதனான
சிவபெருமானும் நீயும் எந்நாளும் என் நெஞ்சில்
குடிகொண்டிருக்கவேண்டும்.
அபிராமி பட்டர்


Advertisement
சித்தானந்தர் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement