நல்லதை மட்டும் பாருங்கள்
அக்டோபர் 11,2010,
19:10  IST
எழுத்தின் அளவு:

* எண்ணம், சொல், செயல் மூன்றாலும்
தூய்மையைக் கடைபிடியுங்கள். உங்கள் அந்தரங்க எண்ணத்தை கடவுள் அறிவார். அதைப் பரிசுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டியது உங்கள் கடமை.
* அகிம்சையே ஒப்பற்ற ஆன்மிக சக்தியாகும். இதைப் பின்பற்றத் தொடங்கினால் எல்லா நற்குணங்களும் நம்மை வந்தடையும்.
* அகந்தையை அடியோடு ஒழித்து விடுங்கள். கோப
உணர்ச்சி, பேராசை எண்ணங்களை கிள்ளி எறியுங்கள். அப்போது தான் அகிம்சையை முழுமையாக உங்களால் பின்பற்ற முடியும்.
* பழி வாங்கும் எண்ணத்தை கைவிடுங்கள். தீயவர்களும் மனம் திருந்தும்படி பிரார்த்தனை செய்யுங்கள்.
* பன்னிரண்டு ஆண்டுகள் தொடர்ந்து சத்தியத்தைக் கடைபிடிப்பவன் வாக்சித்தி பெற்று விடுவான். அவனுடைய வார்த்தைகள் அனைத்தும் தெய்வீக சக்தி பெற்று விடும்.
* கண்களால் நல்லதை மட்டும் பாருங்கள். காதுகளால் நல்ல விஷயங்களை மட்டும் கேளுங்கள். மனதால்
பிறருக்கு நல்லதையே எண்ணுங்கள். அப்போது நீங்கள் உயர்ந்த மனிதனாக மாறிவிடுவதை உணர்வீர்கள்.
சிவானந்தர் 


Advertisement
சிவானந்தர் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement