பணியாளர்களை உபசரியுங்கள்
அக்டோபர் 21,2010,
18:10  IST
எழுத்தின் அளவு:

நபிகள் நாயகம்(ஸல்) நவின்றார்கள்:
* பணியாட்களின் சக்திக்கு மிஞ்சிய வேலைப்பளுவை அவர்கள் மீது சுமத்த வேண்டாம். அவ்வாறு சுமத்த
நேரிட்டால், அந்த வேலையில்
அவர்களுக்கு நீங்கள் துணைபுரியுங்கள்.
* பணியாளர்களை உபசரியுங்கள். நீங்கள் உண்பதில் இருந்து அவர்களுக்கும் உணவு அளியுங்கள்.
* உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளர்களே!
உங்களுக்குக் கீழிருந்தவர்கள் குறித்து உங்கள்
ஒவ்வொருவரிடமும் வினவப்படும். பணியாட்கள் தன் எஜமானனின் பொருட்களுக்கு பாதுகாவலன் ஆவான். அவர்களின் பொறுப்புகள் பற்றி விசாரிக்கப்படுவார்கள்.
* நாம் பொறுப்பில் அமர்த்தி உள்ள ஒருவர்
நம்மிடமிருந்து ஓர் ஊசியை மறைத்தாலும் அல்லது அதைவிடச் சிறியதொரு பொருளை மறைத்தாலும் அதனை அவர்கள் அபகரித்துக் கொண்டார் என்றே பொருள். மறுமை நாளில் அதனைச் சுமந்த வண்ணம் வருவார்.
* ஒருவன் தன் கையால் உழைப்பதும் மோசடி
செய்யாமல், பொய் பேசாமல் ஒருவன் நடத்தும்
வாணிபமும் தான் யாவற்றிலும் சிறந்த சம்பாத்தியம்.
(வேதவரிகளும் தூதர் மொழிகளும் நூலில் இருந்து) 

Advertisement
குரான் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement