மனோதிடம் வேண்டும்
டிசம்பர் 21,2007,
22:27  IST
எழுத்தின் அளவு:

ஒருகணம் அமர்ந்து தியானியுங்கள். இன்னொரு உபாயத்தை அறிவீர்கள். முன்னேற்றம் என்பது பயணத்தைப்போல் படிப்படியாய் நிகழ்வதுதான்.

நான் இங்கே பல ஆண்டுகளாயிருக்கிறேன். என்னுடைய முயற்சிகளின் பலனைப் பெற விரும்புகிறேன் என்று சொல்லிக் கொண்டிராதீர்கள். பலவீனத்தை, இழிவுகளை, கீழ்த்தரமானவைகளைப் போராடி வெல்வதற்கு முயற்சியும், துன்பத்தைத் தாங்கும் மனத்திண்மையும் தேவை.

அகந்தையற்று நேசிக்க முடியாதவர்கள் தெய்வீக அன்பைப் பற்றிப் பேசுவதால் என்ன பயன்? ஒன்றைப் பெறுவதற்காக ஒன்றையும் கொடுக்க விரும்பாதவர் என்றும் நிலைத்திருப்பது பற்றி பேசுவதால் என்ன பயன்?

நீங்கள் எத்தனை வயதுடையவராயினும் இன்னும் இளையவர்தாம். ஒரு குறிக்கோளை அடைவதற்கு என்ன விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். உன்னதமான உண்மைகளைப் புரிந்து கொள்ள வேண்டுமென்றால் அவற்றை உங்கள் அன்றாட வாழ்வில் நடைமுறைப்படுத்த வேண்டும்.

ஒரு குறிக்கோள் போதும், உங்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்க, உங்கள் வாழ்க்கைக்கொரு அர்த்தத்தைக் கொடுக்க,

எப்படி முயற்சி செய்வது என்று அறியாதவரால் மகிழ்ச்சியை கண்டறிய முடியாது. சோம்பேறிகள் ஒரு போதும் மகிழ்ச்சி காண்பதில்லை. மகிழ்ச்சியாயிருக்கக்கூடிய மனவலிமை அவர்களுக்குக் கிடையாது. முயற்சியே மகிழ்ச்சியைக் கொடுப்பது.

மந்தத்தனத்திலிருந்து உங்களை விடுவிப்பது முயற்சி. உடல்சார்ந்த, அறநெறி சார்ந்த, அறிவு சார்ந்த முயற்சி மனிதனுக்குள் குறிப்பிட்ட அதிர்வுகளை ஏற்படுத்தும்.

Advertisement
ஸ்ரீ அன்னை ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement