தியானிக்கும் போதும் நன்மை செய்
டிசம்பர் 21,2007,
22:30  IST
எழுத்தின் அளவு:

ஏழைக்கு உணவு அளித்தல், சிறைக் கைதிகள் பார்வையற்றோர், மனநோய் மருத்துவமனையில் உள்ளோர், காதுகேளாதோர், பேசுந்திறனிழந்தோர் ஆகியோர்க்குத் தொண்டாற்றுவதே சாதனை.

ஜபத்திலோ, தியானத்திலோ அமர்ந்திருக்கும்போது ஒரு முனகலைக் கேட்டால் எழுந்து தேடிப்பாருங்கள். ஒருவனுடைய துன்பத்தைக் களைவதால் கிடைக்கும் ஆன்மிகத் தகுதி நீ நிறுத்திய தியானம் தந்திருக்கக் கூடியதை விட அதிகமானது.

மக்களைக் கடவுள் தன் பால் ஈர்க்கிறார். இப்பற்று இருவருக்குமான இயல்பு. ஏனெனில் இருவரும் ஒன்றே! இருவரும் இரும்பும் காந்தமும் போன்றவர்கள். ஆனால், இரும்பு துருப்பிடித்து, அழுக்குப் படிவங்களால் மூடப்பட்டிருந்தால் காந்தம் கவரும் சக்தியை இழந்து விடுகிறது. தடைகளை அகற்றுங்கள். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் அதுதான்! உங்கள் உண்மை இயல்பு ஒளிரட்டும். அப்போது கடவுள் தம் உடலில் உங்களை ஈர்த்துக் கொள்வான். சோதனைகள், வேதனைகள் மூலமே இத்தூய்மை செய்வது நிறைவேறும்.

இயன்றவரை சாப்பிடு, பருகு, மகிழ்ந்திடு. அறிவிப்பின்றி மரணம் உன் மீது நிற்கிறது. அதன் அழைப்புக்கு முன் அது பற்றிய அச்சத்தை வெற்றிகொள். நிகழ்காலம் உன் உண்மையான நண்பன். நேற்று உன்னை ஏமாற்றி விட்டுப் போய்விட்டது. நாளை என்பது சந்தேகமான விருந்தாளி. நிகழ்காலமே உறுதியான நண்பன். அதைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்.

என்னை முழுமையாக நம்பு. புட்டபர்த்தி சென்று விடுதலையின் ரகசியத்தை அறிந்து கொண்டதாக அனைவரிடமும் சொல். நான் உனக்கு சகல நன்மைகளையும் தருவேன்

Advertisement
சத்யசாய் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement