மனநிறைவு அடையுங்கள்
அக்டோபர் 27,2010,
02:10  IST
எழுத்தின் அளவு:

* பிறரிடம் எந்த பிரதிபலனும் எதிர்
பார்க்காமல் அன்பு கொண்டு வாழுங்கள். சத்தியம், தர்மம், சாந்தி, அன்பு ஆகியவை பக்திக்கு நான்கு கால்கள் போன்றவை.
சத்தியத்தை வாக்கிலும், தர்மத்தை
செயலிலும் கடைபிடியுங்கள்.
* அகிம்சை என்றால் பிற உயிர்களுக்குத்
துன்பம் தராமல் வாழ்வது மட்டுமல்ல. அவைகளிடம் அன்பு காட்டியும் வாழ்வதாகும்.
* அன்பையும் சத்தியத்தையும் எவனொருவன் கடை
பிடிக்கிறானோ அவன் மனதில் சாந்தி நிலவும்.
அவனிருக்கும் இடமே தெய்வீகமான சூழ்நிலையை உண்டாக்கும்.
* எவ்வளவுக்கு எவ்வளவு ஆசை நம் மனதை விட்டு
அகலுகின்றதோ, அந்த அளவுக்கு மனத்தெளிவு
உண்டாகும். சுமை குறைந்தால் பயணம் சுகமாக
இருக்கும். இது ரயில் பயணத்திற்கு மட்டுமல்ல. வாழ்க்கை பயணத்திற்கும் தான்.
* நாம் இப்போது இருக்கும் நிலையே நல்ல நிலைதான் என்று எண்ணத் தொடங்கினால் வாழ்வில் மனநிறைவும், திருப்தியும் உண்டாகும். அவ்வாறு இல்லாமல் இன்னும் வேண்டும் என்று ஆசையைப் பெருக்கிக் கொண்டே போனால் நிம்மதி தான் தொலைந்து போகும்.
-சாய்பாபா
 

Advertisement
சத்யசாய் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement