வெட்டிப் பேச்சு வேண்டாமே!
டிசம்பர் 22,2007,
21:58  IST
எழுத்தின் அளவு:

ஒரு மனிதனுக்கு தன்னிடத்திலே அசைக்க முடியாத நம்பிக்கை மட்டும் இருந்தது என்றால், அவனால் எல்லாவிதத் துன்பங்களையும், என்ன விதமான சூழ்நிலைத் துயரங்களையும், மிகமிக மோசமானவை என்று கருதப்படுபவற்றையும் எதிர்த்து நிற்க முடியும். இதற்கு அவனுக்குத் தேவை ஊக்கமும், மனம் உடையாத மனோநிலைமையும் தான்.

விடியற்காலையில் எழு. அந்த நாளை இறைவனுக்கு அர்ப்பணி. நீ நினைப்பதையும், நீ செய்ய இருப்பதையும் அவனிடம் ஒப்படை. இரவில் படுக்கைக்குப் போகும் முன், அன்றைய தினத்தைப் பற்றி முழுமையாக எண்ணு.

என்னென்னவெல்லாம் செய்தாய் என்று நினைத்து பார்.

பிற மனிதர்கள் விஷயத்தில் நீ எதையாவது செய்ய வேண்டும் என்று விரும்பினால் அதை முதலில் உன் விஷயத்தில் கடைபிடிக்க வேண்டும்.

மற்றவர்களுக்கு ஒரு நல்ல புத்திமதியை வழங்குவதற்கு முன்னால் அந்தப் புத்திமதியை உனக்கே நீ சொல்லிக் கொள்ள வேண்டும்.

அந்த புத்திமதிப்படி நீயே நடந்து கொள்ள வேண்டும்.

மற்றவர்களிடத்தில் நாம் என்ன விதமான குறையினைக் காண்கிறோமோ அதே குறை நம்மிடம் இருக்கிறது என்பதை நாம் உணர வேண்டும். அதன் பிறகு நம்மிடம் இருப்பதை நீக்குவதற்கு நாம் முயற்சி செய்ய வேண்டும்.

நம்மிடமிருந்து அது முற்றிலும் நீக்கப்பட்ட பிறகு மற்றவருடைய குறையை மாற்றக்கூடிய வலிமையினை நாம் அடைந்து விடுகிறோம்.

கடவுளை மட்டுமே நீ நினை. கடவுள் உன்னுடனே இருப்பார்.

ஒருவன் என்ன செய்கிறான் என்பது பற்றி வெட்டிப் பேச்சு பேசுவது தவறு. அவன் என்ன செய்யவில்லை என்பது பற்றி பேசுவதும் தவறு. அவ்வாறான வெட்டிப்பேச்சை காது கொடுத்து கேட்பது அதைவிடத் தவறு.

Advertisement
ஸ்ரீ அன்னை ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement